மாணவர்கள் இல்லாத அரசுபள்ளிகள் நூலகமாக மாற்றபடும்
செங்கோட்டையன்.....
ஆசியாவிலே பெரிய தலைமைசெயலகத்தை மருத்துவமனையாக மாற்றினீர்கள்....
ஆசியாவிலே பெரிய நூலகத்தை எந்தவொரு பராமரிப்பும் இன்றி மூடினீர்கள்...
இப்போது
மாணவர்கள் வருகை குறைவால்
அரசுபள்ளிகளை
நூலகமாக மாற்றபோகிறீர்கள்
பள்ளிளை அழித்து நூலகமாக மாற்றினால்
அங்கு யார் படிக்கவருவார்கள்...
சிறைச்சாலையை இடித்து நூலகங்களை கட்டுங்கள்...
கோயில்களைகூட இடித்து
பள்ளிகளை கட்டுங்கள்
ஒரு மனிதனுக்கு பக்தியை சொல்லிகொடுப்பதைவிட
படிப்பு கற்றுகொடுங்கள்
இதுதான் அமைச்சரே அவசியமானது....
நூலகமாக மாற்றுவதற்கு பதில்
பேசாமல் அரசு மதுபானகடையாக மாற்றிவிடுங்கள்
நூலகத்தில் படிக்கவருவதைவிட படிக்காதவர்கள் அதிகமாக குடிக்கவருவார்கள்.....
அரசுக்கும் நிதி அதிகமாகும்
பள்ளிகள் இருந்தால்
ஆசிரியர்களை நியமிக்கணும்
ஊதியம் கொடுக்கணும்
படித்தால் அரசுவேலை கொடுக்கணும்
படித்தவன் எவனும்
கட்சி மாநாட்டுக்கு வரமாட்டார்கள்
படித்துவிட்டால்
நாடுமுன்னேறிவிடும்
அது நடக்ககூடாது
மாணவர்கள் இல்லாத பள்ளியை மூடுங்கள்
ஆனால் ஒருபோதும்
மாணவர்களை வரவழைப்பதற்கு என்ன வழி என சிந்திக்காதீர்கள்.....
மாணவர்கள் இல்லாத
அரசுபள்ளிகளை மட்டும் மூடவேண்டாம்
சுயமாககவும் மக்களைப்பற்றியும் சிந்திக்காத
அடிமையாக வாழும் அரசியல்வாதிகள் இருக்கும் சட்டசபையையும் சேர்த்து மூடிவிடுங்கள்....
உங்களிடம் ஏழையாக வாழ்வதைவிட
ராணுவ ஆட்சியில் அடிமையாக வாழ்ந்துவிடலாம்....
ராஜராஜ சோழனுக்காவும்
ஆண்டாளுக்காவும் சினம்கொண்ட தமிழர்கூட்டம்
அரசுபள்ளிகளை அழிக்கும்போது சினம்கொள்ளாது
ஏனெனில்
அரசுபள்ளிகள்
அழிந்தால்
நமது குழந்தைகள் படிப்பு வீணாகிவிடும் என சிந்திப்பதைவிட
அரசு ஆசிரியர்களுக்கு ஊதியம் அதிகம் அதனால்
அரசு பள்ளிகள் அழியட்டும் என நினைப்பவர்களே அதிகம்
நம் முதல்வரே மக்களிடம் அப்படி தானே சொல்கிறார்
ஆசிரியர்களுக்கு அதிகமான சம்பளம்
முப்பது வருடத்திற்கு மேல்
அரசு ஆசிரியராக பணியாற்றுபவர்களுக்கு
ஊதியம் கொஞ்சம் அதிகமாக கொடுக்ககூடாது
ஓய்வூதியமும் கொடுக்ககூடாது
ஆனால்
ஐந்து ஆண்டுகளில்
ஐந்து தலைமுறைக்கு சொத்துசேர்க்கும்
அரசியல்வாதிக்கு மாதம்
ஒரு இலட்சம் ஊதியம் கொடுக்கலாம்
ஓய்வூதியமும் கொடுக்கலாம்
இதை ஒரு முட்டாளும் கேட்கவும் மாட்டான்....
ஒரு பள்ளிகளை அழிப்பது
பல எதிர்கால தலைமுறையை தவறான பாதைக்கு அழைத்துசெல்வதற்கு சமம்....
ஏழை குழந்தைகள்
அரசுபள்ளியில் படித்து
தன் சொந்தகாலில் நிற்கும் அளவுக்கு வந்தாலே போதும்
ஆனால் அதே....
அரசுபள்ளிகளில் படித்த பலரே
மாவட்ட ஆட்சியராக
நீதிபதியாக
ஏன்
விஞ்ஞானியாக கூட இருக்கிறார்களே......
முதலில் சமமான கல்வியை கொடுத்துவிட்டு
அப்புறம்
நீட் என்ன என்னவேண்டுமானாலும் வையுங்கள்
அப்போது தெரியும்
ஏழைகுழந்தைகளின்
அதீத சக்தி பற்றி.....
மெட்ரிக் சிபிஎஸ்இ
என ஏழைகுழந்தைகள் போகமுடியாது
நம் அரசுபள்ளிகலாவது
அழியாமல் காப்போம்.....
அழிவை நோக்கி தமிழ் நாடு.....
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGood morning Mam
ReplyDeleteGood morning ano sis
ReplyDeleteGood morning Ano Mam
ReplyDeleteWhen computer instructor results
ReplyDeleteOnline exam pgku kandipaga varumnu solrangal,majorpadi one day Tamil exam,next englishnu solrangal mam unmaiya
ReplyDeleteNetharsanamana unmai mam, indha state irrukaratha ninaithan vetkamaga irrukiradhu
ReplyDelete