Skip to main content

சென்னையை மீட்ட காமராஜர்!!

👉காமராஜர் தன் அதிரடியை தொடங்கினார். தமிழ்நாடு எல்லைக்கமிட்டி என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்பு சார்பில் 'தமிழ்நாட்டுக்கே சென்னை நகரம் சொந்தம்" என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. அதோடு அந்த அமைப்பின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

👉தேர்தலில் தமிழ்நாடு எல்லைக்கமிட்டி சார்பில் காமராஜர் நிறுத்திய வேட்பாளர்கள் அமோக வெற்றியை பெற்றனர். ஆந்திர காங்கிரஸ்காரர்கள் படுதோல்வியை தழுவினார்கள். இதன்மூலம் சென்னை நகரை காமராஜர் மீட்டு, தமிழ்நாட்டுடன் தக்கவைத்துக் கொண்டார்.

👉இந்த சம்பவத்துக்குப் பிறகு ஆந்திர மாநில தலைவர்கள், சென்னை நகருக்கு உரிமை கொண்டாடுவதை கைவிட்டுவிட்டனர். இதன்மூலம் காமராஜர் தமிழக-ஆந்திர காங்கிரஸ் தலைவர்களிடம் ஏற்பட இருந்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

👉இரண்டாவது சென்னை நகரம் கை நழுவி செல்லாமல் பார்த்துக் கொண்டார்.

பொதுவிழாவில் பெருந்தலைவர் காமராஜர் உதிர்த்த வரிகள் :


👉பள்ளிக்கு படிக்க வரும் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு கொடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த காமராஜர், அந்த விழாவில் பேசியது :

👉கடைசி மனிதனுக்கும் கதி மோட்சம் கிடைக்க வேண்டும் என்பதுதான் காந்திஜியின் கொள்கை.

👉கடையர்கள் எப்படிக்கடைத்தேறுவார்கள்? கல்வி கற்றால் கடைத்தேறுவார்கள்.

👉படிக்கின்ற கல்வியால் அறிவும் திறமையும் வளர்ந்தால், பிழைத்துக் கொள்வார்கள்;, மனிதர்கள் மாறுவார்கள்.

👉நம் நாட்டில் பெரும்பாலானோர்க்கு எழுத்தறிவே கிடையாது.

👉ஊரில் பள்ளிக்கூடங்கள் இல்லாதபோது எழுத்தறிவு எப்படி வரும்?


👉ஆகவே, நம்முடைய முதல் வேலை எல்லா ஊர்களிலும் பள்ளிகளை திறப்பதுதான். அடுத்த பணி, அதை எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் இலவசமாக்குதல்.

👉நிலம் ஈரமாக இருந்தால் தானே பயிரிட முடியும்? காய்ந்து கிடந்தால் எப்படி பயிரிட முடியும்?

👉பிள்ளைகளின் வயிறு காய்ந்து கிடக்கும்போது, பாடம் சொல்லிக் கொடுத்தால் பாடம் ஏறுமா?

👉நம் நாட்டில் ஏழைகள் தான் அதிகம் என்பது எனக்குத்தெரியும்.

👉எனவே, பள்ளிக்கு வருகிற குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடத்திலேயே சோறு போடுவது நல்லது.

👉அன்னதானம் என்பது நமக்கு புதிய விஷயம் அல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு அன்னதானம் அளித்தோம். இப்பொழுது பள்ளிக்கூடத்தை தேடி போய் அன்னதானம் செய்யச் சொல்கிறோம்.

காமராஜர் - இவர் இல்லையென்றால் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவே இல்லை...!!


Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Akilan sir..

    How are you.. I remember u very well.. Revathi sis also had d same doubt..

    Sir, you can apply under micro biology itself since there is no specific category for botany or zoo.. Depending upon the marks only they'll categorize..

    ReplyDelete
  3. OK mam but microbiology st ku 1 posting mattum irukku mam ந MBC. ந எப்படி apply pantrathu

    ReplyDelete
    Replies
    1. Sir, apo bot or zoo la podunga.. But as far as schools are concerned bot and zoo dha mostly irukum.. Adhula edhavadhu onnu choose panunga..

      Delete
  4. Mam nan ug Blit tamil ,MA Bed padithulan Iam eligible in Pg trb exam pls reply mam

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...