ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள்.._ _வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும்,_ _அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவித்தார்.._ _போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள்.._ _சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய்.. சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன்.. இப்படியாக.._ _அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறார்.._ *இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவருக்கு என் மகளை திருமணம் செய்து தருவேன்!* _அவர் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது.._ *அது மட்டுமில்லை.. கூடவே ஒரு 10 கோடி ரூபாய் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன்.. அப்பொழுதுதானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும்!* *சரி.. உங்கள் எல்லோருக்கும...