கோவை : &'எமிஸ்&' இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட, அனைத்து வகை பள்ளிகளின் தகவல்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில், &'ஸ்மார்ட் கார்டு&'வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தகவல்கள், எமிஸ் இணையதளம் மூலமாக, கடந்த 2012ல் இருந்து திரட்டப்படுகிறது. இதை ஒருங்கிணைத்து, ஆதார் எண் சேர்க்கும் பணிகள், 99 சதவீதம் முடிந்தது. மேலும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, மாணவர்களுக்கு அடையாள அட்டை உருவாக்கும் வகையில், பிரத்யேக செயலி சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், மாணவர்களின் புகைப்
படத்தை பதிவேற்றி, பெயர், வகுப்பு, பிரிவு, ரத்த வகை, முகவரி உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் உள்ளீடு செய்தால், அடையாள அட்டை வடிவமைக்கப்படும். இதற்கான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.வரும் கல்வியாண்டில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். சீருடையும் மாறுவதால், அடையாள அட்டை வழங்கினால், அரசுப்பள்ளி மாணவர்களின் மீதான புறத்தோற்ற பிம்பம் மாறும் என, கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
கல்வியாளர்கள் சிலர் கூறுகையில், &'பள்ளிக்கல்வித்துறையில், வரும் கல்வியாண்டில் தான், பல அதிரடி மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. பாடத்திட்டம் மாறுவதோடு, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, &'டேப்லெட்&' மூலம், வகுப்பு நடத்தப்பட உள்ளது.ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைக்கப்பட உள்ளதால், அரசுப்பள்ளிகள் மீதான நம்பிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதோடு, பாடப்புத்தகங்கள் வினியோகிக்கும் நாளிலே, மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். இதற்கான முன் ஆயத்த பணிகள் துவங்க, இயக்குனர் உத்தரவிட வேண்டும்&' என்றனர்.
தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு. தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.
Comments
Post a Comment