மதுரை: தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.மதுரையில் கழக மாநில போராட்ட ஆயத்த கூட்டம் மாவட்ட தலைவர் சரவணமுருகன் தலைமையில் நடந்தது.
மாநில பொது செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். செயலாளர் சதீஷ்குமார் மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.மாநில தலைவர் மணிவாசகன் கூறியதாவது: மாநிலம் முழுவதும் 1.6.2009 முதல் பணியேற்ற பி.ஜி., ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
உயிரியல், வணிகவியல் பாடங்களுக்கு கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்க வேண்டும் உட்பட ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்., 12 முதல் 70 மையங்களில் நடக்கும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 28 ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர். முதற்கட்டமாக நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் 20 விடைத் தாள்களில் 10 மட்டும் திருத்தும் போராட்டம் நடத்தப்படும். அதிகாரிகள் பேசாத பட்சத்தில் முழு புறக்கணிப்பு நடத்தப்படும், என்றார்.
Comments
Post a Comment