ஷில்லாங்: மேகாலயாவில், பாலியல் சீண்டலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், பள்ளி மாணவியருக்கு, முன்னாள் கராத்தே சாம்பியன், லின்சா சியம், பயிற்சிகள் வழங்க உள்ளார்.
முறைகேடுவடகிழக்கு மாநிலமான, மேகாலயாவில், தேசிய மக்கள் கட்சித் தலைவர், கான்ராட் சங்மா முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின் மேற்கு காசி மலை மாவட்ட உயரதிகாரி, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு திட்டம் மூலம், முதல் முறையாக, பள்ளி மாணவியருக்கு, பாலியல் சீண்டல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முன்னாள், உலக கராத்தே சாம்பியன், லின்சா சியம், இதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்காப்பு பயிற்சிகள், ஒரு மாதம் வழங்கப்படும். பெண்களை கிண்டல் செய்தல், தகாத முறையில் அத்துமீறி நடப்பது, சாலைகளில் முறைகேடாக நடப்பது ஆகியவற்றில் இருந்து, பெண்களை பாதுகாக்க, இப்பயிற்சிகள் உதவும். குற்றங்கள்மேகாலயாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இதை கருத்தில் வைத்து, பள்ளி மாணவியருக்கு தற்காப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment