ராமநாதபுரம்,: பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும், மற்ற வகுப்புகளுக்குஆண்டுத் தேர்வும் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்டங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனால், மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரத்தில் கடந்த வாரம் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடந்தது. ஆண்டு இறுதி கணக்கு முடிக்கும் பணி காரணமாக 30க்கும் குறைவானரே பங்கேற்றனர்.மார்ச் 26ல் நடந்த மாதாந்திர விளையாட்டுப் போட்டியில் தேர்வு காரணமாக மாணவர்கள் பங்கேற்கவில்லை.இந்த நிலையில், &'கேலோ இந்தியா&' மாநில விளையாட்டுப் போட்டிக்கான மாவட்ட மகளிர் அணி தேர்வுப் போட்டிகள் நேற்று நடந்தது. இதில் 30க்கும் குறைவான மகளிரே பங்கேற்றனர்.
தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு. தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.
Comments
Post a Comment