வேலுார்: வேலுார் மாவட்டத்தில், அனுமதி பெறாமல் இயங்கும், 18 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, &'நோட்டீஸ்&' அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த, 2014க்கு முன் துவக்கப்பட்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் இருந்து, அனுமதி பெற்று, இயங்குகின்றன. மாநில அரசின் அங்கீகாரத்தை, பள்ளிகள் பெற, கடந்த மாதம், தமிழக அரசு உத்தரவிட்டது. இது குறித்து, வேலுார் மாவட்ட சி.இ.ஓ., மார்ஸ் கூறியதாவது: வேலுார் மாவட்டத்தில், மொத்தம், 42 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன.
இவற்றில், 18 பள்ளி கள், மாநில அரசின் அங்கீகாரமின்றி இயங்குகின்றன. மாநில அரசின் அங்கீகாரத்தை, மூன்று மாதத்திற்குள் பெறாவிட்டால், பள்ளிகளை மூட, நடவடிக்கை எடுக்கப் படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment