Skip to main content

சி.பி.எஸ்.இ., வினாத்தாள் 'லீக்': விசாரணை வளையத்தில் ஆசிரியர்கள்

புதுடில்லி : சி.பி.எஸ்.இ., வினாத்தாள், 'லீக்' ஆன விவகாரத்தில், கையால் எழுதப்பட்ட வினாத்தாளை, இணையதளத்தில் பரப்பியவர்கள் குறித்து, விசாரணை துவங்கியுள்ளது. இதில், பள்ளி நிர்வாகிகளும், பயிற்சி மையத்தினர் சிலரும் சிக்கியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

'சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொருளியல் தேர்வும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, கணித தேர்வும் மீண்டும் நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டு பாடங்களுக்கும், தேர்வுக்கு முன், வினாத்தாள் லீக் ஆனதால், மறு தேர்வு நடத்தப்படுகிறது. இது குறித்து, சி.பி.எஸ்.இ., வாரியத்தில் இருந்து, டில்லி போலீசில், மூன்று புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் மீது, சிறப்பு பிரிவு, எஸ்.ஐ.டி., போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

முதற்கட்டமாக, இணையதளத்தில் பரவிய வினாத்தாள், சைபர் ஆவணங்களை சோதனை செய்துள்ளனர். அதில், இடம் பெற்ற, கணினி ஐ.பி., எண் வழியாக, சிலரை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. டில்லியில் உள்ள சில பயிற்சி மையத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் சிலர், விசாரணையில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.

இதனிடையே, மறுதேர்வில், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாத வகையில், வினாத்தாள்களை, 'பாஸ்வேர்ட்' வைத்து, டிஜிட்டல் முறையில் தேர்வு நாளில் வழங்க, சி.பி.எஸ்.இ.,யின் தேர்வு வாரியம் முடிவு செய்து உள்ளதாக, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Comments

Popular posts from this blog

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை!

  வரும் 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை காணொலியில் நடைபெற உள்ள கூட்டத்தில் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்கள் பங்கேற்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் வரும் 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் காணொளி வாயிலாக ஆலோசனை