தஞ்சையை ஆண்ட மாமன்னர் ராஜராஜசோழன் அரியணை ஏறிய நாள் இன்று சதயவிழாவாக கொண்டாடப்படுகிறது.
ராஜராஜசோழன் கி.பி.985 ஆம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் முடிசூட்டப்பட்டது. இந்த நாளை நினைவுகூறும் விதமாக விழா கொண்டாடப்படுகிறது.
1032வது சதயவிழா கொண்டாட்டத்திற்காக ராஜராஜ சோழன் சிலை மற்றும் பெரியகோவிலின் முகப்புப் பகுதியில் மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் நடைபெறும் இந்த விழா தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு சதய விழாவில் பட்டிமன்றம், கருத்தரங்கம், கவியரங்கம், தேவார இசை, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. மேலும், சதய விழா நாளான அக். 30-ம் தேதி பெருவுடையாருக்குப் பேரபிஷேகம், திருமுறைகள் ஒதும் நிகழ்ச்சி, ராஜராஜன்சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதை முன்னிட்டு, பெரியகோயிலில் கடந்த வியாழக்கிழமை காலை மங்கல இசை முழங்க, தீப ஆராதனையுடன் பந்தல்கால் நடப்பட்டது.
Comments
Post a Comment