Skip to main content

Posts

இன்றைய சிந்தனை..

சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான். ''ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான். அதற்கு சாக்ரடீஸ், ''மாணவன் என்பவன், #கொக்கைப்_போல இருக்க வேண்டும். #கோழியைப்_போல இருக்க வேண்டும். #உப்பைப்_போல இருக்க வேண்டும். #உன்னைப்_போல இருக்க வேண்டும்'' என்றார். மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்'' என்றான். ''கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும்.  மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும்.  அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்'' என்றார். ''கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான் மாணவன். ''கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும்.  ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும்.  அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத்  தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார் சாக்ரடீ...

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு புதிய விதிமுறைகள்? ஆசிரியர் பொது மாறுதல் குறித்த தகவல்கள் !!!. தந்தி டிவி

ஆசிரியர் பொது மாறுதல் குறித்த தகவல்கள் !!!. இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு இல்லை என்கிற பத்திரிகை உண்மை இல்லை !!!. ஓரிரு நாட்களில் கலந்தாய்வு/பதவி உயர்வுக்கான அரசாணை வெளியாகிறது !!!. பதவி உயர்வு /பணி நியமனம் மூலம் பணியாற்றும் அனைவரும் குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் !!!. முதல்வரின் 110 விதியின் கீழ் அறிவித்தப்படி கலந்தாய்வு நடத்த ஏதுவாக ஜாக்டோ- ஜியோ போராட்டம் மூலம் மாறுதல் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களின் பணியிடமும் காலிப்பணியிடமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் (பாதிக்கப் பட்டவர் பணியாற்றும் இடம்/பாதிக்கப்பட்டவரின் முந்தைய பணியிடம்) !!!. பல ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கட்டாய பணிமாற்றம் கிடையாது என தகவல் !!!. நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் !!!.

கருத்துகள் எல்லாம் தீர்ப்புகள் அல்ல..!!

பெரும்பாலான மனிதர்கள் எதனுடைய மதிப்பையும் அடுத்தவர்களுடைய கருத்துகளை வைத்தே எடைபோடுகிறார்கள். பலரும் ஒரு சாதாரண விஷயத்தை ஒஹோ என்று புகழ்ந்தால் அது உன்னதமாகத் தெரிகிறது. ஒரு உயர்ந்த விஷயத்தையும் பலரும் பரிகசித்தால் அது செல்லாக் காசாகி விடுகிறது. ஆனால் உண்மையான மதிப்பை பெரும்பாலானோரின் கருத்துகளை வைத்து எடை போடுவது சரியானதாக இருக்காது. ஏனென்றால் எல்லோரும் ஆழமாக அறிந்தே ஒன்றைப் பற்றிக் கருத்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. பெரும்பாலான மனிதர்கள் தங்கள் அறிவிற்கேற்பவே கருத்து கொள்கிறார்களே ஒழிய உண்மையான தன்மையின் அடிப்படையில் அல்ல. அவரவர் மனநிலை, அறிவு, அனுபவம், விருப்பு வெறுப்புகளை ஒட்டியே விமரிசனங்கள் எழுகின்றன. சிலர் அந்த சிரமத்தைக் கூட மேற்கொள்வதில்லை. அவர்கள் மதிப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே அவர்களுடைய கருத்தாகியும் விடுகின்றது. நோர்மா ஜீன் பேக்கர் என்ற இளம்பெண் மாடலாகும் கனவுடன் ஒரு மாடலிங் கம்பெனிக்குச் சென்று வாய்ப்பு கேட்டார். அங்கே அவளை "நீயா, மாடலா?" என்று பரிகசித்தார்கள். "ஏதாவது குமாஸ்தா வேலைக்குச் செல். இல்லா விட்டால் திருமணம் செய்து கொண்டு வீட்டைக் க...

PGTRB 2019 REVISED LIST AS PER COURT ORDER..

  Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I - 2018-2019            Release of Revised Provisional Selection List for the Subjects Botany, Mathematics and Geography               The Board had issued notification No.10/2019, dated 12.06.2019 for the Direct Recruitment for the post of Post-Graduate Assistants / Physical Education Directors Grade-I - 2018-2019. As per the said notification, Board conducted written competitive examination from 27.09.2019 to 29.09.2019 and the examination results were published on 18.10.2019 and 21.10.2019. The Board conducted certificate verification for the shortlisted candidates in 1:2 ratio on 08.11.2019 and 09.11.2019.              The provisional selection list for the subjects Botany, Mathematics and Geograph...

பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை ( panel list ) தயார் செய்து அனுப்ப இயக்குநர் உத்தரவு.

  தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் அனைத்து வகை ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை ( panel list ) 01012021 அன்றைய நிலவரப்படி தயார் செய்திட பார்வையில் காணும் இவ்வியக்கக் செயல்முறைகளின்படி அறிவுரை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பார்வையில் காணும் அறிவுரைக்கிணங்க சார்ந்த ஆய்வு அலுவலர்களிடம் தொகுத்து பெற்று , எவர் பெயரும் விடுபடவில்லை இவ்வியக்ககத்தில் என்ற சான்றுடன் இரு நகல்களில் தனிநபர் மூலம் 20.11.2021 - க்குள் ஒப்படைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

ADW - பள்ளிகளில் ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் காலிப்பணியிட விவரம் அனுப்ப ஆணையர் உத்தரவு.

  ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்க 01.03.2021 அன்றைய நிலையில் இடைநிலை ஆசிரியர் / தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் இடைநிலை காப்பாளர்கள் நிலையில் தற்காலிக ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி காப்பாளர்கள் காலிப்பணியிடம் விவரத்தினை அனுப்புமாறு அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் காலிப்பணியிட விவரம் 1.01.03.2021 அன்றைய நிலையில் ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியலினை தயார் செய்து அனைத்து ஆசிரியர்கள் அறியும் வண்ணம் தகவல் பலகையில் விளம்பரம் செய்ய வேண்டும். 01.03.2021 அன்றைய நிலையில் ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியலினை அனைத்து பள்ளிகளுக்கு சுற்றுக்கு அனுப்பட்டு சம்மந்தப்பட்ட ஆசிரியருக்கு சார்வு செய்து கையொப்பம்பெற்று அனுப்ப வேண்டும். மேற்கண்ட தற்காலிக ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியலில் ஆட்சேபனைகள் வரும் பட்சத்தில் உரிய ஆவணங்களின்படி திருத்தங்கள் மேற்கொண்டு இறுதி ஒருங்கிணைந்த பணிம...

TODAY'S THOUGHT..

ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று  நடப்பட்டது. ஏற்கனவே, அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று தென்னங்கன்றிடம் கேட்டது, *" நீ  இங்கே எத்தனை வருஷமா இருக்கே? "* தென்னங்கன்று சொன்னது, *" ஒரு வருஷம் ".* "ஒரு வருஷம்னு சொல்றே ,  ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? *எதாச்சும் வியாதியா ?"* கேட்டுவிட்டு  ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல  சிரித்தது.   தென்னங்கன்றோ அதைக்  காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது. ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின் வளர்ச்சி பெரிதாக  இருந்தது. இரண்டு மாதத்திற்குள் தென்னங்கன்றை விட உயரமாக வளர்ந்துவிட்டது. வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது.  தென்னங்கன்றோ எப்போதும் போல சலனமில்லாமல் புன்னகைத்தது. வாழைக்கன்றை நட்டு  ஒரு வருடம்  ஆவதற்குள் தென்னங்கன்றைவிட  இருமடங்கு உயரமாகி விட்டது. தினமும் தென்னங்கற்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது மட்டும் குறையவேயில்லை. *"கடவுளுக்கு  உன்னை மட்டும் பிடிக்காதோ ? ஒரு லெவலுக்கு மேல வளரவிடாம தட்டியே வச்சிருக்காரே!* "நீ  இருக்குற...

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் எப்போது புதிய தகவல்( பத்திரிகை செய்தி)

 

TODAY'S THOUGHT..

ஒரு ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை உற்சாகமூட்டுவதற்காக ஒரு சிறிய பரீட்சையை நடத்தினார். அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு காலணி (செருப்பு) வழங்கப்படும் என்றும் கூறினார். அனைத்து மாணவிகளும் மிகுந்த சந்தோஷத்துடன் பரீட்சையை எழுதினர்.  இறுதியில் அவர்களது விடைகளை பரிசீலித்துப் பார்க்கும் பொழுது அவர்கள் அனைவரது விடைகளும் சரியாக இருந்தது. ஆசிரியை யாருக்கு பரிசினை வழங்குவது என்று சிந்தித்து விட்டு, குலுக்கல் முறையில் இப்பரிசு கொடுக்கப்படும். எல்லோரும் ஒரு துண்டு தாளில் அவரவர்  பெயரை எழுதி  ஒரு பெட்டியில் போடுமாறு கூறினார். அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு சீட்டை  எடுத்தார். அதில் *தமிழ்ச்செல்வி* என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்கு அப்பரிசு வழங்கப்பட்டது. அம்மாணவி தான் அவ்வகுப்பில் மிகவும்  ஏழ்மையான  மாணவி. பல காலமாகவே  காலணியே இல்லாமல் வந்த இம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி. பின்னர் அவ்வாசிரியை சந்தோஷத்துடன் வீட்டுக்கு வர  ஆசிரியை நடந்த சம்பவத்தை கணவரிடம் கண்ணீருடன் கூறினார்.  கணவனும் சந்தோஷப்பட்டா...

UGC NET EXAM DATE ANNOUNCED

  Date and Subject wise Schedule for UGC - NET December 2020 and June 2021 cycles The National Testing Agency ( NTA ) will be conducting the UGC - National Eligibility Test ( NET ) December 2020 and June 2021 cycles for Junior Research Fellowship and eligibility for Assistant Professor between 20 , 21 , 22 , 24 , 25 , 26 , 29 , 30 November and 01 , 03 , 04 & 05 December 2021 in Computer Based Test ( CBT ) mode . The schedule of UGC - NET December 2020 and June 2021 cycles ( Date , Subject and Shift wise ) is as follows : UGC NET EXAM DATE NOTIFICATION - Download here

இன்றைய சிந்தனை..

ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் வாங்க சந்தைக்கு போனான். ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கி கொண்டு ஓட்டி வந்தான். ஒட்டகம் வாங்கிய வியாபாரிக்கோ மகிழ்ச்சி. நியாயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று.  வீட்டுக்கு வந்ததும் தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்க சொன்னான். அதற்கு முன்பாக ஒட்டகத்தின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயற்சித்தான். அவனால் முடியவில்லை. தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தின் சேணத்தை அவிழ்க்க சொன்னான்.. ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள், பொத் என ஏதோ கீழே விழுவதை கண்டு எடுத்து பார்த்தான். அது ஒரு சிறிய பொக்கிஷப்பை. உள்ளே பிரித்தால், ஆச்சரியத்தால் அவன் கண்கள் விரிந்தது. விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள். தகதகவென மின்னியது. அதை எடுத்து கொண்டு முதலாளியிடம் ஓடி காண்பித்தான். உடனே வியாபாரி, அந்த பையை இப்படி கொடு, உடனே அந்த ஒட்டக வியாபாரியிடம் கொடுக்கணும்னு சொல்லி புறப்பட்டான். பணியாளோ, ஐயா இது யாருக்கும் தெரியப் போவதில்லை. இது இறைவனின் பரிசு. நீங்களே வைத்து கொண்டால் என்ன என வற்புறுத்தினான். வியாப...

' இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் பணிபுரிய 1.61 லட்சம் பேர் விண்ணப்பம்

‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் பணிபுரிய இதுவரை 1.61 லட்சம்தன்னார்வலர்கள் விண்ணப்பித் துள்ளனர். கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில்தாமதம் ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில்தான் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டன. எனினும், அவை நேரடிக் கற்பித்தலுக்கு இணை இல்லாததால், பெரும்பாலான குழந்தைகளின் கற்றலில் தேக்கநிலை ஏற்பட்டது கண்டறியப்பட் டது. இதையடுத்து, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைச் சரிசெய்ய ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. பெண்கள் ஆர்வம் இந்த திட்டத்தின்படி, பள்ளி நேரத்துக்குப் பின், மாலை நேரங்களில் தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க முடிவு செய்யப்பட்டு, இதில் பணிபுரிய விருப்பமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, ஏராளமானோர் இந்தப்பணிக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 1.61 லட்சம் தன்னார்வலர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் 1.3 லட்சத்துக்கும் மேற்ப...

TODAY'S THOUGHT..

கணவனுக்கு  திடீர் சந்தேகம் வந்தது தன்னுடைய மனைவிக்கு காது கேட்கவில்லையோ ? ஆனால் இதை மனைவியிடம் நேரடியாகக் கேட்க அவருக்குத் தயக்கம்.  தயக்கம் என்ன, பயம் தான். இந்த விஷயத்தை அவரின் உறவிலுள்ள   டாக்டரிடம்  தெளிவாக விளக்கி கடிதம் எழுதினார். டாக்டரிடம் இருந்து வந்த பதிலில்... "இருபது அடி தூரத்தில் இருந்து மனைவியிடம் ஏதாவது பேசிப் பாருங்கள் , மனைவியின் காதில் விழவில்லை எனில் சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள், பின் பத்து , ஐந்து இப்படி குறைத்துக் கொண்டே நெருங்கிச் சென்றுப் பேசுங்கள். எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் மனைவிக்கு காதுக் கேட்கவில்லை எனத் தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம்" என்றிருந்தது. அதைக் பார்த்தவுடன் கணவனுக்கு ஒரே குஷி. வீட்டு வாசலில் இருந்தபடியே உள்ளிருந்த மனைவியிடம் இன்று என்ன சமையல்? எனக் கேட்டார். பதில் எதுவும் இல்லை.  பின் வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியைக் கேட்டார். அதற்கும் பதில் இல்லை.  ஹாலில் இருந்து கேட்டார் , சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்.  ம...

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

   

மழையின் மனு..

 *அறிவியலை அறியா நாளில்,* *அறிவை மட்டும் உபயோகிச்சு,* *ஆறுகளும், ஏரிகளும்,* *ஆழமான குளங்களையும்* *ஆங்காங்கே வெட்டி வச்சான்,* *அடைமழையை தேக்கி வச்சான்!* *ஓடிவரும் தண்ணீரை ஓடைக்குள்ள ஓட வைச்சு,* *கண்டபடி ஓடாம கால்வாயை வெட்டி வச்சு,* *நீதி,நெறி ஓட்டம் போல,* *நீரினையும் ஓட வச்சான்!* *பெருமழைதான் பெய்தாலும், உருண்டோடி* *ஊருணிக்குள் புரண்டோடயார்தை கண்டான்!* *ஆண்ட்ராய்டு  மக்கள் நாமோ அதையெல்லாம் மறந்து போனோம்!* *கூடையில கொட்டாம, குப்பையை ஓடையில கொட்டிவிட்டோம்!* *வீட்டுக் கழிவுகளை, விசமான பிளாஸ்டிக்கை,* *சாக்கடையில் கொட்டிக் கொட்டி,* *தண்ணீர் போக்கிடத்தை அடைச்சுப் புட்டோம்!* *கால்வாயில் போகும் தண்ணி, இப்போ கரைபுரண்டு ரோட்டினிலே!* *ஆட்சியர் மாளிகையும்,*  *மனுநீதி மன்றங்களும்,* *ஏரியில் தான் கட்டுவதென்பது எழுதாத சட்டமாச்சு!* *பாவம் அந்த மழைத் தண்ணி மனு கொடுக்க எங்கே போகும்?* *ஊருணியும், குளக்கரையும்,* *உசரமான பில்டிங் ஆச்சு!* *வாய்க்காலும், ஓடைகளும், ஆளுங் கட்சி, எதிர்க் கட்சி ஆட்களோட ஃப்ளாட்டாப் போச்சு!* *வரைமுரை ஏதுமின்றி வளைச்சு வளைச்சு வீட்டைக் கட்டி,* *சென்னையை விழுப்புரத்தில்...

தமிழ் கணிதன்- Maths shortcut Memes

தமிழ் கணிதன்- Maths shortcut Memes விளையாட்டாக, மகிழ்ச்சியாக கணக்கு கற்க கீழ்காணும் 74 பக்க தமிழ் கணிதன் Maths Short cut memes பாருங்கள்... கணக்கை எளிமையாக கற்று விடலாம்...  இதை வைத்துக் கொண்டு TNPSC உள்ளிட்ட அரசு தேர்வுகளுக்கு பயன்படும்... Thanks to-   9566954702  - PDF FILE- AVAIL IN BELOW LINK 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 CLICK HERE TO DOWNLOAD-PDF

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு - PDF

  பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு - 08.12.2021 முதல் 12.12.2021 வரை நடைபெறுகிறது!!! CLICK HERE TO DOWNLOAD-PDF

கர்மா என்பது என்ன..?

கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்!  அந்தக் கதை இதோ: ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம்..  “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்! அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்! அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான்! அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்! அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் “ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்!  சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்!  நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர்,  ஆனால் யாரும்...

TRB - முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மேலும் நீட்டிப்பு

  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-2021 ஆம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் .01 / 2021 நாள் 09.09.2021 முதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது . இந்நிலையில் தற்போது , தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக இணையவழியாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்வதில் சில சிரமங்கள் உள்ளதால் மேற்காண் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 09.11.2021 லிருந்து 14.11.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என TRB அறிவித்துள்ளது

ஆத்திரம் எதைத் தரும்?

ஒரு கிராமத்தில் ஒருவன் அழகிய புள்ளிமான் ஒன்றை தன் வீட்டில் வளர்த்து வந்தான். ஒரு நாள், அந்த மான் காணாமல் போய்விட்டது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மனிதர், அந்த மானை பிடித்துப் போயிருப்பவனை பழிவாங்கத் துடித்தான். கடவுளிடம் முறையிட்டான். கடவுளும் வந்தார். கடவுளிடம் அந்த மனிதர், தான் ஆசையாய் வளர்த்த மானை தாருங்கள் என்று தானே கேட்டிருக்க வேண்டும்? ஆனால் அவ்வாறு கேட்கவில்லை.மாறாக, ஆத்திரத்தில், "நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மானை திருடியவன் யாராக இருந்தாலும் அவனை என் முன் நிறுத்த வேண்டும்" என்று கேட்டான். அதற்கு கடவுள், "பக்தா! மானை நான் உனக்குத் திருப்பித் தருகிறேன். ஆனால், மான் காணாமல் போனதற்கு காரணமானவர்கள் யார் என்று கேட்காதே" என்றார். "கடவுளே! நான் மிகுந்த கோபத்தில் உள்ளேன். மானை திருடியவனை பழிவாங்காமல் விட மாட்டேன். எனவே, திருடியவனை இங்கு வரவழைக்க வேண்டும்" என்று பிடிவாதமாக கேட்டான். இதனைக் கேட்ட கடவுள், "சரி. நீ கேட்கின்ற வரத்தை தருகிறேன். ஆனால், பின்னால் வருத்தப்படக் கூடாது" என்றார். அந்த மனிதரும் சரி...

பிஎஸ்சி நர்சிங்,பி.பார்ம் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நாளை கடைசி நாள்.

  பிஎஸ்சி நர்சிங்,பி.பார்ம் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நாளை கடைசி நாள்.

தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம்..

*தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் என்பது ஒரு ஜப்பான் நாட்டுக் கதையாகும்.* முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது. *அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும்.* இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம். அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த போது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்கினர். நாளடைவில் அந்த‌த் தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார். ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன் மலைப்பகுதியில் கொண்டு விட்டு விட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான். தந்தையைப் பிரிய அவனுக்கு மனமே வரவில்லை.  எனினும் அரச தண்டனைக்குப் பயந்து அவன் தன்னுடையத் தந்தையை மலைப்பகுதிக்கு முதுகில் சுமந்து சென்றான். மலைப்பகுதியை அடைந்த போது அவனுடைய மனம் மிகவும் வருந்தியது. ஆதலால் அவன் தந்தையை தன்னுடனே அழைத்துக் கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்து விட்டான். *வீட்டின் பின்பகுதியில் தந்தையை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தான். ம...

ASSOCIATION SEEKS -COMPUTER SCIENCE- TEACHERS APPOINTMENT IN CLASS 6 ONWARDS @ ALL SCHOOLS

 

SUNDAY'S THOUGHT..

*இறைவன் எதையாவது ஒன்றை உன்னிடமிருந்து எடுத்துக்கொண்டால் அதை விடச் சிறந்த ஒன்றை கொடுத்தே தீருவான் என்பதை காலம் நிச்சயம் உனக்கு காட்டித்தரும்.. நம்பிக்கையோடு காத்திரு.!* *யாராவது ஒருவரிடம் உள்ளதொன்றை பார்த்து பொறாமைப்படாதே.. ஒருவேளை நீ அவருக்கு அது அருள் என்று நினைத்திருப்பாய்.. ஆனால் அதுவே அவருக்கு பெரும் சோதனையாக இருக்கும்.!* *யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்காதே.. அது உன் நிம்மதியை தொலைக்க வைக்கும்.. காலம் அதன் கருமத்தை கச்சிதமாக செய்யும் வரை பார்த்துக் கொண்டிரு.!* *நீ வாழ்வில் எதை இழந்தாலும் அதற்கு பதிலீடாக எதையாவது பெறுவாய்.. ஆனால் இறைவனின் மீதான நம்பிக்கையை நீ இழந்தாயேயானால் அதை ஈடு செய்ய உன்னால் எதையும் தேட முடியாது.!* *எல்லா சூழ்நிலையும்* *ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.* *ஓஹோ என்று வாழ்ந்து* *ஒன்றுமில்லாமல்* *போனவர்களும் உண்டு.* *ஒன்றுமில்லாமல் வாழ்ந்து* *ஓஹோ வென்று போனவர்களும் உண்டு...!* *மற்றவர்களிடம் இருப்பதில் எவை என்னிடம் இல்லை என்று சிந்திப்பதை விட மற்றவர்களிடம் இல்லாதது எவை என்னிடம் உள்ளது என்று தேடிப்பாருங்கள்.* வெற்றியும், தோல்வியும் வண்ணத்துப்பூச்சி போலத்தா...

ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியீடு!!!

ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியீடு!!!