GO NO : 11 , DATE : 18.01.2021 ஆணை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , 13.03.2020 அன்று சட்டமன்றப் பேரவை விதி 110 - இன்கீழ் பள்ளிக் கல்வித்துறை சார்ந்து பிறவற்றினிடையே பின்வரும் அறிவிப்பினை அறிவித்துள்ளார் : " 30 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும் . இப்பள்ளிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் 55 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும் , தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 21 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவிலும் ஏற்படுத்தப்படும் " தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , 20.03.2020 அன்று சட்டமன்றப் பேரவை விதி 110 - இன்கீழ் பள்ளிக் கல்வித்துறை சார்ந்து பிறவற்றினிடையே பின்வரும் அறிவிப்பினை அறிவித்துள்ளார் . " ஏற்கனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக , 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் , மேலும் , 30 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 உயர்நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாகவும் , வரும் கல்வியாண்டில் உயர்த்தப்படும் ". பள்ளிக் கல்வி இயக்குநர் தன...