13,000 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்ப உத்தரவு!
தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள்:
13,000 ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
7500 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கவும் நடவடிக்கை.
ஜூலை 1ஆம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு.
இது ஆசிரியர் பணியை எதிர்நோக்கி காத்திருக்கும் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Appointment Procedure - Download here
தற்போது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி , நடுநிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4989 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 5154 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநாடுநர்களை தேர்வு செய்து நிரப்பப்படும் வரை ஜீலை 2022 முதல் ஏப்ரல் 2023 முடிய 10 மாதங்களுக்கும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 3188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை ஜீலை -2022 முதல் பிப்ரவரி -2023 முடிய மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக அந்தந்த ஊர்களில் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகாமையில் உள்ள பகுதியில் உள்ள தகுதியுள்ள நபர்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் , உயர் / மேல்நிலைப் பிரிவிற்கான உதவித் தலைமையாசிரியர் மற்றும் மூத்த பட்டதாரி / முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு மூலமாக தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அவ்வாறு தேர்வு செய்யும்போது இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை நியமனம் செய்யப்படும் நபர்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ .7500 / - பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ .10,000 / - முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ .12,000 மதிப்பூதியம் வழங்கப்படும்.
பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த பணிநாடுநர் இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தகுதித் தேர்வு ( TET ) தேர்ச்சி பெற்றவர்களுக்கும் , அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கிட வேண்டும். அவ்வாறே முதுகலை ஆசிரியர்கள் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் அவ்வாறு இல்லையெனில் , இல்லம் தேடி கல்வி பணிபுரியும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.
Mam good morning. Trt annual plannerpadi varuma? illai late aguma mam.
ReplyDelete100%late. Aagum. 2023la exam varum
DeleteThiru sir, nichayama trt dhan varum..
ReplyDelete