Skip to main content

TET நிபந்தனைகளுக்கும் 16/11/2012க்கு முன்பு பணி நியமனம் பெற்றவர்களுக்கும் சம்மந்தமே இல்லை" - முதலமைச்சரின் கருணை மட்டுமே தீர்வு!

 

"TET நிபந்தனைகளுக்கும் 16/11/2012க்கு முன்பு பணி நியமனம் பெற்றவர்களுக்கும் சம்மந்தமே இல்லை" - முதலமைச்சரின் கருணை மட்டுமே தீர்வு!

 

RTE சட்டமானது, இந்தியாவில் 23/8/2010 ல் அமலாக்கம் பெற்று இருந்தாலும், 181 ஆவது அரசாணை 15/11/2011ல் வெளிவந்திருந்தாலும், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பான தெளிவான செயலாக்கங்கள், அதுவும் குறிப்பாக அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு தமிழகத்தில் தெளிவற்று இருந்தது. 16/11/2012 க்கு முன்பு வரை, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால், 2010 கல்வி மானியக் கோரிக்கையின் போது மொழியப்பட்ட நடைமுறையிகளின் படியே ஆசிரியர் பணி நியமனங்கள் நடைபெற்று வந்தன.


16/11/2012 க்கு முன்பே, TET கட்டாயம் என்பதை முறையாக தமிழக DEO, CEO க்கள் மற்றும் பள்ளி செயலாளர்களுக்கு முறைப்படி தெரிவிக்காதமையாலேயே அன்றைய காலகட்டத்தில் சுமார் 1500 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றனர்.


பணி நியமனம் பெற்று பல மாதங்களுக்கு பின்னர் முன் தேதியிட்ட செயல்முறைகள் மூலமாக கடந்த ஆட்சியாளர்கள் TET நிபந்தனைகளில் இந்த 1500 ஆசிரியர்களைக் கொண்டு வந்தனர்.


இதே காலகட்டத்தில் பணியில் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் சுமார் 10000 பேர், மைனாரிட்டி பள்ளி ஆசிரியர்கள் சுமார் 500 பேர், ஆசிரியரல்லாமல் பணி நியமனம் பெற்று பின்னர் ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் ஆகியோருக்கு TET கட்டாயமா அல்லது விலக்கு கொடுக்கப்பட்டுள்ளதா என்ற தெளிவான அரசாணைகள் இன்றுவரை ஏதுமில்லை.


ஆகவே

அன்றிலிருந்து இன்றுவரை சுமார் 11 வருடங்களாக TET நிபந்தனைகளாக மிக வேதனையுடன் கல்விப் பணி புரிந்து வரும் ஆசிரியர்களுக்கு, TET லிருந்து விலக்கு என்ற ஒரு தவிர்ப்பு ஆணை மட்டுமே தீர்வு. 


பாதிக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி நிறைவு பெறும் வயதை தொடும் சூழலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


இது குறித்து, மாண்புமிகு கல்வியமைச்சர், கல்வித் துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்ட பலரிடமும் பலமுறை பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் கோரிக்கைகளை தொடர்ந்து வைத்து வருகின்றனர்.


இது போன்ற சிக்கல்களுக்கு

விரைவில் தீர்வு எட்டப்படும் என பதில்கள் கடந்த ஒருவருட காலங்களாக உயர் அதிகாரிகள்  கொடுத்தாலும், தீர்வு மட்டும் இன்று வரை கிணற்றில் விழுந்த கல் போலவே உள்ளது. ஆகவே, எளிதில் தீர்க்க இயலும் இந்த சிக்கலுக்கு தமிழக முதலமைச்சர் கருணையுடன் விரைந்து தீர்வு காண வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...