வெற்றி என்றால் என்ன? ஆக்ஸ்போர்ட் அகாரதிப்படி, வெற்றி என்பது ஒருவரது இலக்கை அல்லது நோக்கத்தை அடைந்தது என்று பொருள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
வெற்றி, தோல்வியின் மறுமுனையில் இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
ஒரு தோல்வியில் இருந்து நீங்கள் மனம் துவண்டு போகலாம் அல்லது அதிலிருந்து கற்றுக் கொள்ளலாம். அது உங்களின் விருப்பம்.
வெற்றி; பேர், புகழ், செல்வம் மற்றும் மரியாதையைப் பெற்றுத் தரும்,
ஆனால் தோல்வியை அரவணைத்து செல்வோரும் தங்களின் இலக்கை நோக்கி எந்த ஒரு சலனமும் இன்று பயணிப்பர்.
நீங்கள் முன்னேறிச் செல்ல நினைத்தால் முதலில் தோல்வியில் இருந்து நகர்ந்து செல்லுங்கள்.
அதைப்பற்றி நினைத்து புலம்புவதால் நீங்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு நிரந்தர பாதிப்பை அடைய வாய்ப்பு உள்ளது. நேர்மறையாக சிந்தியுங்கள்.
ஐபிஎம் நிறுவனத்தின் சிஇஒ சர் தாமஸ் ஜே வாட்சன், வார்த்தைகளின் படி,,
“வெற்றிக்கான ஒரு ஃபார்முலாவை என்னிடம் கேட்டீர்கள் என்றால் அது மிகவும் சுலபம் என்பேன்.
உங்களின் தோல்வியை ரெட்டிப்பு ஆக்குங்கள். நீங்கள் தோல்வியை வெற்றியின் பகைவனாகப் பார்க்கிறீர்கள், ஆனால் அது உண்மையல்ல.
நீங்கள் தோல்வியால் துவண்டு போகலாம் அல்லது அதிலிருந்து கற்றுக் கொள்ளலாம். அதனால் தைரியமாக தவறுகள் செய்யுங்கள்..
என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யுங்கள்.நினைவில் கொள்ளுங்கள்! அதிலிருந்து தான் நீங்கள் வெற்றியைக் கண்டெடுக்க முடியும்.
உங்களை உங்கள் தோல்வி அல்லது வெற்றி அடையாளப்படுத்தாது.
அதைவிட நீங்கள் உங்கள் தோல்வியை எப்படி வெற்றியாக மாற்றீனீர்கள் என்றே அனைவரும் பேசுவர்.
Comments
Post a Comment