Skip to main content

TRB மூலம் 9494 ஆசிரியர்கள் விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்ப ஜூன் 2022 இரண்டாவது வாரத்தில் போட்டித் தேர்வு


2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வுக்கான தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறையில் நடப்பாண்டில் பணியிடங்களை நிரப்புவதற்காக 2022-ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் 2022ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 9494 ஆசிரியர்கள் விரிவுரையாளர் உதவிப் பேராசிரியர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான தகுதி தேர்வு ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் நடத்தப்படும். மேலும் இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் 2022 ஜூன் இரண்டாவது வாரத்தில் போட்டித்தேர்வு நடைபெறுகிறது.

மேலும் 3902 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 1087 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் என மொத்தம் 4989 பணியிடங்களுக்கு ஜூன் இரண்டாவது வாரத்தில் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியாகும் எனவும் தெரிகிறது. நவம்பர் இரண்டாவது வாரத்தில் தேர்வுகள் நடத்தப்படும். இதற்கான அறிவிப்புகள் ஜூலை மாதம் வெளியிடப்படும். மேலும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கட்டட சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 வரைவாளர் பணியிடங்களுக்கு நவம்பர் இரண்டாவது வாரத்தில் தேர்வுகள் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும்.

பொறியியல் கல்லூரிகளில் 104 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்படும். ஆசிரியர் பணியின் போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு இந்த தேர்வு கால அட்டவணை பயனுள்ளதாக இருக்கும். தேர்வர்கள் தாங்கள் விரும்பும் பணியிடங்களுக்கு முன்னுரிமை அளித்து விண்ணப்பிக்கவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..