Skip to main content

முன் வைத்த காலை..!!

 அமெரிக்காவைக் கண்டு பிடிப்பதற்காக இருபது மாலுமிகளுடன் ஒரு கப்பலில் புறப்பட்டார் கொலம்பஸ். பல நாட்கள் ஆகியும் கரை எதுவும் தென்படவில்லை. இருபது நாட்கள் கடந்த நிலையில் இன்னும் இருபது நாட்களுக்குத் தான் உணவு கையிருப்பு என்பதனை அறிந்த மாலுமிகள் கொலம்பசிடம், ”இப்போது திரும்பினால், பிரச்சினை இல்லாமல் ஊர் திரும்பி விடலாம். கடலில் வீணாக உயிர் விட வேண்டாம்,” என்றனர்.


ஆனால், கொலம்பஸ் முன் வைத்த காலைப் பின் வைக்கத் தயாராயில்லை. தமது பாதை முன்னோக்கியே தவிர பின்னோக்கி அல்ல என்பதில் அவர் உறுதியாய் இருந்தார். ஆனால் கொலம்பஸின் பேச்சைக் கேட்டால் கடலில் தான் எல்லோருக்கும் சமாதி என்று கூறி மாலுமிகள் கொலம்பசுக்கு எதிராகத் திரும்பினர். கப்பலின் பொறுப்பை அவர்கள் ஏற்கத் தீர்மானம் செய்து விட்டார்கள். அப்போது கொலம்பஸ் ஒரு முக்கியமான முடிவெடுத்தார். மனதுக்குள் சிறு கணக்கு ஒன்று போட்டார்.


அவர் மாலுமிகளிடம் சொன்னார், ”நண்பர்களே, உங்கள் கவலை எனக்குப் புரிகிறது. இருபது பேருக்கு இருபது நாட்களுக்குத் தேவையான உணவு இருக்கிறது. ஒருவர் குறைந்தால் கூடுதலாக ஒரு நாளைக்கு உணவு இருக்கும். எனவே இன்னும் ஒரு நாள் கப்பலை முன்னோக்கி செலுத்துங்கள். அதற்குள் கரை தென்படா விட்டால் என்னைக் கொன்று விட்டுத் திரும்புங்கள். அப்போது உங்களுக்கு ஊர் போய் சேரும் வரை உணவு சரியாக இருக்கும்,” என்றார்.


கொலம்பஸ் இவ்வாறு சொன்னதும் மற்றவர்களுக்கு ஒரு அதிர்ச்சி. ஒன்றும் சொல்லாது கப்பலை முன்னோக்கி செலுத்தினர். அடுத்த சில மணி நேரங்களிலேய கரை தென்பட்டதும் எல்லோரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.


இன்றும் கொலம்பஸின் பெயர் உலகில் நிலைத்திருப்பதற்கு, கொலம்பஸ் சிக்கலான தருணத்தில் எடுத்த சரியான முடிவு தான் காரணம்.

Comments

  1. Wishing everyone a blessed day ahead..

    ReplyDelete
  2. Nice mam. Trt approximately syllabus enna mam. Trt la tamil irukumama? I am English major

    ReplyDelete
    Replies
    1. Kalanithi friend..

      TRT syllabus mostly ug based ah dhan irukum.. Ella major kum irukkum..

      Delete
  3. *🅱️🅱️🔴🔴🅱️🅱️ ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்(2013,2017,2019) மீண்டும் ஒரு போட்டித்தேர்வு நடத்துவதை ரத்து செய்யக்கோரி தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு*


    *🟢🌹2013 முதல் 2019 வரை அனைத்து சங்கம் மற்றும் ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்🌹*

    *🟢போராட்டம் நிகழ்வு:*
    2013 முதல் 2019 வரை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ளும் தொடர் உண்ணாவிரத போராட்டம்.

    *🟢போராட்டம் நடைபெறும் இடம்:*
    ஆசிரியர் தேர்வு வாரியம்,DPI வளாகம்,நுங்கம்பாக்கம், சென்னை.

    *🟢போராட்டம் நடைபெறும் தேதி:*
    28.02.2022(திங்கட்கிழமை).

    *🟢போராட்டம் ஆரம்பம் ஆகும் நேரம்:*
    காலை 8.30 மணி

    *🌷இப்படிக்கு🌷*
    *அனைத்து சங்க தலைமை நிர்வாகிகள்*

    ReplyDelete
  4. Trt exam syllabus eppo vara chance irukku mam

    ReplyDelete
  5. 💪💪👍👍💐💐👍👍💪💪
    என் இனமான அறிவார்ந்த அன்பான ஆசிரியர் சொந்தங்களே!! உங்கள் அனைவருக்கும் பாசார் மு.புகழேந்தியின் நெஞ்சம் நிறைந்த வணக்கம் 🙏🙏

    இதோ போராட்ட களம் தயாராகி விட்டது

    வாருங்கள்

    உங்களை எல்லாம் அன்போடு அழைக்கிறேன்
    வாருங்கள்

    💪💪 போராட்டமே
    வாழ்க்கை 💪💪

    * தேவையை உணராமல் போராட முடியாது

    * போராடாத நீ
    வாழ முடியாது!!

    * போராடு ......
    தோல்விகள் தோற்கும் வரை போராடு!!!

    * துவண்டு விடாமல்
    போராடு....

    * திட்டமிட்டு போராடு....

    * தீர்க்கமாக போராடு......

    * அறவழியில் போராடு ....

    அதற்கு
    உன்னை அர்ப்பணித்து போராடு!!!

    * எதிரியின் ஆயுதம்
    கண்டு போராடு....

    அதைவிட
    பன்மடங்கு ஆயுதம் கையில் கொண்டு போராடு!!

    * போராட்டம் வெல்லும் வரை போராடு....

    காலம் சொல்லும் வரை போராடு!!

    * சாதி, மத, இனம் களைந்து போராடு....

    சரித்திரம் - உன்
    சாதனை சொல்லும் வரை போராடு!!

    * விருப்பம் கொண்டு போராடு.....

    விடியல் வரும் வரை போராடு!!

    * தளராமல் நீ போராடு.....

    தடைகளை தகர்த்தெறிய போராடு!!!

    * வீரநடை போட்டு
    வெற்றி கனி
    கிட்டும் வரை போராடு!!

    * வேட்கை அடைய போராடு.....

    வேங்கை போல் போராடு!!

    * வேண்டியதை அடைய போராடு....

    வெளியுலகம் அறியும் வரை போராடு!!

    * நம்பிக்கையுடன்
    போராடு....

    தன்னம்பிக்கையுடன் போராடு!!!

    * வீறு கொண்டு போராடு.....

    விடாமுயற்சியுடன் போராடு!!!

    * மனம் தளராமல் போராடு.....

    மறுநியமனததேர்வை ரத்து செய்யும் வரை போராடு!!

    * ஏதோ போராடினோம் என்றில்லாமல்....

    எழுச்சியோடு
    போராடு!!

    * உறங்கி கிடந்தால்
    சிலந்தியும் உன்னை
    சிறை பிடிக்கும்!!

    * எழுந்து நடந்தால்
    இமயமும் உனக்கு
    வழி கொடுக்கும்!!

    என் வாழ்க்கை சிதைந்தாலும் பரவாயில்லை

    என் ஆசிரியர் சமூகமே

    என் ஆசிரியர்
    இனமே

    உங்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும்!!

    போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு போராடிய 72 மணி நேரம் மறக்க இயலாது

    நடந்து நடந்து
    என்
    கால்கள் தளர்ந்தது
    என்
    உடலும் தளர்ந்தது!!

    ஆனால்
    மனம் மட்டும் தளரவில்லை!!

    என் கூக்குரல் தங்கள் செவிகளைத் துளைக்கவில்லையா??

    என் ஏக்கம் தங்களுக்கு
    தெரியவில்லையா??

    ஏன் இந்த ஓரவஞ்சனை???

    ஏன் இந்த செயலை முன்னெடுத்தேனோ
    என்று எண்ண வைக்காதீர்கள்...

    நான் முன் வைத்த காலை
    பின் வைக்க மாட்டேன்

    என் கழுத்திற்கே கத்தி வந்தாலும் கூட
    ஒருபோதும் இந்த
    பாசார் மு.புகழேந்தி
    விலை போக மாட்டான்!!

    டி.ஆர்.பி. நம்மை
    உள்ளே விட மறுத்து

    தேர்ச்சி பெற்றும்
    பலன் இல்லாமல் போனதே...
    அய்யோகோ !

    தடைகள் தாண்டி போராட
    ஏற்ற உடைகள் எடுத்து வாருங்கள்

    ஆயிரம் தோல்விகள் கிட்டினாலும்
    ஆங்கொரு வெற்றிக்கு
    அனுபவமே ஆசான்!!

    ஆசான்களாகிய நாம் அனைவரும்

    ஒன்றுபட்டு போராடுவோம்!!

    ஒற்றுமையுடன் போராடுவோம்!!

    நம் குரல் ஓங்கி ஒலிக்கும்
    வரை போராடுவோம்!!

    கடந்து வந்த பாதைகள்
    நம்மை கலங்க வைத்தாலும்.....

    வரவிருக்கும் பாதைகள்
    நம்மை வாழ வைக்கட்டும்!!

    * காலம் கனிந்து விட்டது!!

    களம் தயாராகி விட்டது!!

    டி.ஆர்.பி. முடிந்து விட்டது

    தேர்தலும்
    முடிந்து விட்டது

    கூடவே
    தேர்தல் முடிவுகளும்
    வந்து விட்டது.

    அவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக
    இருக்கும் போது
    நாம் மட்டும் ஏன்
    அழுதுகொண்டும்
    புலம்பிகொண்டும்
    இருக்க வேண்டும்.

    ஆகவே

    களத்தை நோக்கி வாருங்கள்

    சென்னையை நோக்கி
    வாருங்கள்

    டி.பி.ஐ. நோக்கி
    வாருங்கள்

    முயற்சி நமதானால்
    வெற்றியும் நமதே!!

    * ஆயிரம் பிரிவுகள்
    நம்மில் இருந்தாலும்....

    ஆசிரியராய் இணைந்து
    நிற்போம்!!!

    அழைக்கிறேன்...
    ஆசிரியர்
    பாசார் மு.புகழேந்தி

    💪💪புரட்சி ஓங்குக💪💪

    ReplyDelete
    Replies
    1. காசினி மேடம் இது எல்லாருக்குமா ....இல்லை 2013 க்கு preference கேட்டு போராட்டமா???? தெளிவு படுத்துங்கள்

      Delete
    2. No,all passed candidate (82+)pls must come and convey to all

      Delete
  6. Tet marks 90% + b.ed employment seniority 10% padi podunga pa

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..