Skip to main content

வார்த்தைகளின் பலம்..

நேர்மறை ( positive) எண்ணங்களின் வலிமையைக் கொண்டு நாம் ஆக்கபூர்வமான செயல்களைச் செய்ய முடியும், அழிவுக்கு வகை செய்யும் செயலையும் செய்ய முடியும். 


நாம் வாழ்வதற்கும், வீழ்வதற்கும் நமது எண்ணங்களே காரணமாகின்றன.

வாழ்க்கை எப்போதும் நாம் நினைப்பது போல இருந்தது இல்லை...


எதிர்மறை ( negative) எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக் கூட்டும் திரைப்படம் போல ஓடிக் கொண்டு இருக்கும். 


அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்குத் தோன்றும். அவை நமக்கு கொடுப்பது வலியும் வேதனையும் தான்.


எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது தெரிந்தும், அதை ஓழிக்கும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகிறோம். 


அந்த நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டால், வாழ்வில் நமக்கு தோல்வி என்பதே கிடையாது.


ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் தன் அறையில் தனியாக சோகமாக அமர்ந்து கொண்டு தன் துயரங்களை எழுதிக் கொண்டிருந்தார்:


சென்ற வருடம் எனக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை,கணையத்தில் கல் எடுக்க வேண்டிய சூழ்நிலை. நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்க வேண்டி இருந்தது. அதே வருடம் 60 வயது ஆகி விட்டதால் வேலையிலிருந்து ஒய்வு..


அதே வருடம் என் அன்பிற்குரிய தந்தை காலமானார்..அதே வருடம் என் மகன் ஒரு கார் விபத்தில் மாட்டிக் கொண்டு மருத்துவத் தேர்வு எழுத முடியவில்லை. காரும் பயங்கர சேதாரம்.என்ன ஒரு மோசமான வருடம், என்று வருத்தத்துடன் எழுதி முடித்தார்.


அவருடைய மனைவி அப்போது தான் உள்ளே வந்தார். கணவர் சோகமாக அமர்ந்து இருப்பதைப் பார்த்து பின்னால் இருந்து அவர் எழுதியதைப் படித்தார்.


பின் மெதுவாக வெளியே போய் இன்னொரு பேப்பரில் எதையோ எழுதிக், கொண்டு வந்து, கணவர் எழுதிய பேப்பருக்கு அருகில் வைத்தார்.


சென்ற வருடம் நீண்ட நாட்களாக இருந்த வலியில் இருந்து விடுதலை பெற்றேன்.


60 வயது ஆனதால் வேலையிலிருந்து ஒய்வு பெற்றதால், என் பொழுதை அமைதியாகவும், படிப்பதிலும், எழுதுவதிலும் செலவிடுகிறேன்..


என் அப்பா 95 வயதில் யாருக்கும் இனியும் பாரம் வேண்டாம் என்று அமைதியாக இயற்கை எய்தினார்.


அதே வருடம் என் மகன் விபத்தில் மீண்டு புது வாழ்வு கிடைத்தது. என்னுடைய கார் சேதாரமானாலும் என் மகன் எந்தக் குறைபாடும் இல்லாமல் மீண்டு வந்தான்.


இந்த வருடம் எனக்கு நல்ல வருடம். அவர் மனைவி எழுதியதைப் படித்த கணவர் நன்றிப் பெருக்கால் தன் மனைவியை அணைத்துக் கொண்டார்.


*என்ன அற்புதமான மனதிற்கு வலுவூட்டும் வாக்கியங்கள்...*


*ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும், மகிழ்ச்சிகரமான கணங்களாக மாற்றிக் கொள்வது நமது கையில் தான் உள்ளது.*


*நேர்மறையான  வார்த்தைகளை உபயோகிக்கப் பழகிக் கொள்ளுங்கள்.*

*வாழ்க்கையை ஆனந்தமாக வாழலாம்.*


*நாம் நமது எண்ணங்களை முறைப்படுத்துவோம்.*,

*அதன் மூலம் நமது வாழ்க்கையை வளப்படுத்துவோம்.....*



Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. இனிமேல் எந்த ஏய்டட் ஸ்கூலும் மைனாரிட்டின்னு சொல்லிக்கிட்டு போஸ்டிங் போட முடியாது

    ReplyDelete
  3. மிக அருமையான தீர்ப்பு. மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்காக. இது போன்று நிறைய வழக்குகளில் சிறுபான்மை பள்ளிகளில் டெட் தேர்ச்சி கட்டாயம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இது வரை அரசால் அரசாணை வழங்கப்பட வில்லை... . ( மேலும் சிறுபான்மை பள்ளிகளில் டெட் தேவை இல்லை என உச்ச நீதி மன்றm இடைக்கால உத்தரவு வழங்கி உள்ளது. ) .

      Delete
    2. இது தவறான விளக்கம்

      Delete
    3. அவருக்கு சாதகமா அவரு சொல்லிக்கிறாரு

      Delete
    4. நண்பா தகவலை தான் சொன்னேன்.. இது வரை அரசால் அரசாணை வெளியிட படவில்லை. .

      Delete
  4. நீதி தேவதையின் கண்கள் இன்று தான் திறக்கப்பட்டுள்ளன. நமக்கும் காலம் வரும் என்று நாம் நம்பிக்கயோடு இருந்தது வீண் போகவில்லை. அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. postgraduate teacher English hall ticket arrived? Has anyone come?

    ReplyDelete
  6. https://youtube.com/user/ponmaniemani
    ������������������

    என்
    இனமான ஆசிரியர்
    சொந்தங்களே.!
    பாசார் மு.புகழேந்தியின் நெஞ்சம் நிறைந்த வணக்கம்.

    இது ஒரு நீண்ட பதிவு தான். தயவுசெய்து ஐந்து நிமிடம் ஒதுக்கி படியுங்கள். படித்துவிட்டு பகிர்ந்து கொள்ளுங்கள். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் யாராவது இருப்பின் தயவுசெய்து நமது LINK யை பயன்படுத்தி இணையுங்கள்.

    நமக்கு நாமே என்னும் கொள்கையை முன்னெடுத்து செல்ல, நமக்கான உரிமையை மீட்டெடுக்க
    காலம் நம்மை உந்தி தள்ளட்டும்.
    அதற்கான ஒரே தீர்வு
    போராட்டம் மட்டுமே.
    போராடினால் மட்டுமே நமது அரசு ஆசிரியர் கனவு நனவாக்க முடியும்.
    முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.

    முதலில் நாம் யாருக்காக போராடுகிறோம் என்பதில் தெளிவு வேண்டும்.

    நமது நோக்கம் ஒற்றுமை மட்டுமே.

    அதாவது 2013, 2014, 2017, 2019 மற்றும் இனிமேல் வரக்கூடிய அனைத்து ஆசிரியர்களுக்கான போராட்டம்.

    முதல் தாள், இரண்டாம் தாள் என்ற பாகுபாடுகளை களைந்து
    82 முதல் 150 வரையுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கான போராட்டம்.

    நாற்பது வயதில் தேர்ச்சி பெற்று அரசு காலம் கடத்தியதால் 48 - 50 வயதை நெருங்கிவிட்ட நமது அக்கா அண்ணன்களுக்கான போராட்டம்.

    ஏதோவொரு ஜீன் மாற்றத்தால் உடலில் சிறு குறைபாடுள்ள ஆனால் மனதளவில் தன்னம்பிக்கையோடு கல்வி கற்று ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நமது மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கான போராட்டம்.

    முதலில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புங்கள் என்று கேட்பதற்கான போராட்டம்.

    ஆம் நாம் முன்னெடுக்கும் போராட்டம் அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான ஒட்டுமொத்த போராட்டம்.
    வெற்றிக்கான போராட்டம்.
    நம் வாழ்வில் ஒளியேற்றும் போராட்டம்.

    நாம் அனைவரும் இனிமேல்
    அண்ணன்-தம்பிகளாக,
    அக்கா-தங்கைகளாக,
    அக்கா-தம்பிகளாக, அண்ணன்-தங்கைகளாக, மாமன்-மச்சான்களாக இணைந்து நல்ல உறவுகளாக, நண்பர்களாக போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்.

    இதுவரை முன்னெடுத்த அனைத்து சங்கங்களும் இனிமேலும் காலம் கடத்தாது ஒற்றுமையோடு ஒன்றுபட்டு போராட வேண்டும் என்பது என் தனிப்பட்ட நோக்கம்.

    நமக்குள் பல்வேறு பிரிவினைகளால் எதற்கெடுத்தாலும் நீதிமன்ற வழக்கு என்று போட்டு கடந்த எட்டு ஆண்டுகளாக நமக்கு நாமே ஆப்பு வைத்துக்கொண்டோம்.

    ஆகவே இத்தகைய போக்குகளை களைந்து துணிவோடு போராட வேண்டும்.

    சிறுவயதில் முயலாமை ஆமையும் முயலும் கதையை,
    நம்மை எல்லாம் ஆசிரியர்களாய் தலைநிமிர வைத்த நமது மகத்தான ஆசிரியர்கள் சொல்லி உள்ளனர்.

    நாம் பிறந்த ஆசிரியர் சமூக முன்னேற்றத்திற்காக போராடாத நாம் அச்சமூகத்தின் சாபக்கேடாக இல்லாமல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்து ஒற்றுமை உணர்வோடு போராட முன் வர வேண்டும்.

    நாம் போராடாவிட்டால் வேறு யார் போராடுவார்கள்.
    அதுவும் இப்போது இல்லை என்றால் வேறு எப்போது என்ற எண்ணம் நமது மனதில் வைத்து போராட்டக் களத்தில் இறங்கி விளையாடுவோம்.

    களம் தயாராகி வருகிறது. சென்னையை நோக்கி நகர்வோம். அடுத்தவன் சென்ற பாதையில் செல்லாமல் நமக்கான பாதையை நாம் தான் உருவாக்க வேண்டும். அதற்கு நமக்கு தேவையான ஒரே ஆயுதம் ஒற்றுமை.

    நான் மட்டுமே முன்னேறினால் போதாது. நம்மை சார்ந்தவர்களையும் முன்னேற்ற வேண்டும் அதுதான் கல்வி.

    நாம் கற்ற கல்வி இந்த ஆசிரியர் சமூகத்திற்கு பயன்படாவிட்டால் நாம் இருப்பதை விட இறப்பதே மேல்.

    நாம் ஆயிரம் போராட்டங்களில் தோல்வியை சந்தித்தாலும் இப்போது நடக்கும் போராட்டம் நமக்கு அரசு ஆசிரியர் என்ற கனவை வெற்றி பெற்றே தருவதற்கான நம்பிக்கை போராட்டம்.

    ஆகவே யாரும் மனம் தளர வேண்டாம்.

    அமைப்பாய் திரள்வோம்.
    அரசு ஆசிரியர் என்ற அதிகாரம் பெறுவோம்..
    அரசியல்படுத்துவோம்...

    கடந்த எட்டு ஆண்டுகளாக நம் வாழ்க்கையில் விளையாடிய அரசியல் கட்சியினருக்கு நாம் அரசியல் பாடம் கற்று கொடுப்போம். நாமே மையம் என்பதை புரிய வைப்போம். அதற்கான ஆயுதமும் நம் கையில் தான் உள்ளது. அது தான் வாக்கு அரசியல்.

    நம் வாழ்க்கையில் வாக்கரிசி போட்ட அரசியல் கட்சிகளுக்கு நாம் வாக்கரிசி போடுவோம்.

    அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நமது LINK யை உங்களுக்கு தெரிந்த அனைத்து குழுக்களிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    நமது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம்.ஒற்றுமைப்படுத்துவோம்.

    ஒற்றை குரலாய் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நமக்கு இன்னொரு நியமனத்தேர்வு என்ற அரசாணை 149 என்ற அரக்கனை ஒழித்து கடந்த எட்டு ஆண்டுகளாக ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பாத ஆட்சியாளர்களை கண்டிக்கும் வகையில் நமது போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். அதற்கு நாம் தான் முன்னேறி வரவேண்டும். அதிலும் குறிப்பாக பெண் ஆசிரியைகள் வர வேண்டும். துணிச்சலுடன் வர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் என்று கதையை திருப்பி விடுவீர்கள் கடைசியில்.... உங்களை பற்றி தெரியாதா?
      ----2017 &2019
      தேர்வர்கள்.

      Delete
    2. 2013ல் தேர்ச்சி பெற்ற நீங்கள் தான் 8 வருசமா போஸ்டிங் போடவிடவில்லை. இந்த அரசு ஏதாவது செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் மீண்டும் எவருக்கும் வேலை கிடைக்க கூடாது என்று மறுபடியும் ஆரம்பித்து விட்டிர்கள். உங்களுக்கு ஆள் பத்தவில்லை என்பதற்கு காக இப்போ 2017 மற்றும் 2019 கூட துணைக்கு கூப்பிட்டு கொண்டு இருக்கீங்க.

      இனி எவனுக்கும் வேலை கிடைக்க விடமாட்டிங்க

      Delete
  7. Morning pgtrb tamil questions epdi erunthuchi easya

    ReplyDelete
  8. Tell me friends how is question paper

    ReplyDelete
  9. https://forms.gle/8BmC1J4qaRCVUbEK7

    🌹🌹☝️☝️ அனைத்து ஆசிரியர்களும் இந்த இணைப்பில் சென்று போராட்டத்திற்கு உங்கள் வருகையை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.☝️☝️☝️🌹🌹🌹

    ReplyDelete
  10. How is pg tamil question paper friends?

    ReplyDelete
  11. இங்கிலிஷ் ஹால்டிக்கெட் யாருக்கும் வரல.

    ReplyDelete
    Replies
    1. Ama varala , morning trb ku call pannean 17th exam ku today evening, 18th exam ku tomorrow admit Card varumnu sonnanga

      Delete
    2. உறுப்புடாத trb

      Delete
  12. Second admit card botany ku varala nethu date kuduthuranthanga

    ReplyDelete
  13. Botany hall tickets 2nt eppa varum

    ReplyDelete
  14. Hallticket released for botany.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here