Skip to main content

இன்றைய சிந்தனை..

1×9=7

2×9=18

3×9=27

4×9=36

5×9=45

6×9=54

7×9=63

8×9=72

9×9=81

10×9=90


மேலே உள்ள சமன்பாடு ஆசிரியை ஒருவரால் கரும்பலகையில் எழுதப்பட்டது. இந்த சமன்பாடு எழுத ஆரம்பிதது முதல் வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்து கொண்டிருந்தது. காரணம் முதலாவது சமன்பாடு பிழையாக எழுதப்பட்டிருந்தது. மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது.


சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை நோக்கிய ஆசிரியை சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பேசத் துவங்கினார்..


நான் முதல் சமன்பாட்டை பிழையாக எழுதியிருக்கின்றேன். இவ்வாறு எழுதியதற்கு ஒரு காரணமுண்டு. இதன் மூலம் உங்களுக்கொரு படிப்பினையைக் கற்றுத் தருவதே அதன் நோக்கம்.


இந்த உலகம் உங்களை எவ்வாறு மதிப்பிடுகின்றது என்பதை நீங்கள் இதன் மூலம் புரிந்து கொள்வீர்கள்.


நான் இங்கு 9 முறைகள் மிகச் சரியாக  எழுதியிருக்கின்றேன். அதற்காக நீங்கள் யாரும் என்னைப் பாராட்ட முன்வரவில்லை. ஆனால் நான் பிழையாக எழுதிய ஒரே ஒரு விடயத்தைக் காரணங்காட்டி அனைவரும் சிரித்து கேலி செய்து விட்டீர்கள்.


நீங்கள் இலட்சம் தடவைகள் விஷயங்களைச் சரியாக செய்த போதிலும் இந்த உலகம் உங்களை ஒரு போதும் பாராட்டப் போவதில்லை.ஆனால் நீங்கள் செய்த ஒரு பிழையைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு ஒருமித்து நின்று மிகக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்..


இவைகளைக்கண்டு ஒரு போதும் தளர்ந்து விடாதீர்கள். உங்களைப் பார்த்து சிரித்தவர்கள்,  உங்களை விமர்சித்தவர்கள் முன்னால் உயர்ந்து நிற்கும் முயற்சியில் உறுதியாக நில்லுங்கள்..Comments

Post a Comment

Popular posts from this blog

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

  தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.   தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு   தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால் , தாள்- I ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளது . மேற்படி கணினிவழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ளவிரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . இது குறித்த அறிவிக்கை , தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் .

படித்ததில் பிடித்தது..

                 சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது. நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள். அதற்க்கு அவர் சொன்ன விடை - “சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”. சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.  அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.  தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..