நரி ஒன்று தாகத்தால் தவித்தது எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.
என்ன செய்வது…?
தண்ணீரைத் தேடி அலைந்தது.
தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது.
கிணற்றின் அருகே சென்றது, கிண்ற்றில், கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரி, வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உட்னே வாளி ‘விரி’ரெனக் கிண்ற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. ‘எப்படி வெளியேறுவது’ என்று யோசிக்கத் தொடங்கியது.
‘மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால்தானே என்னால் மேலே போக முடியும். என்ன செய்வது?’
நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது.
அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிண்ற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது.
அங்கு நரி இருப்பதைக் கண்டது.
“அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்?” எனக் கேட்டது.
“நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்” என்றது நரி
ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாளி ‘சரசர’வென்று கிணற்றின் உள்ளே போயிற்று. அப்போது நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது.
நரி மேலே வரும் போது பாதி வழியில் ஓநாயைப் பார்த்தது.
“நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன்”. என்று கூறிக் கொண்டே மேலே சென்றது. மேலே வந்ததும் கிணற்றுச் சுவரின் மேலே தாவிக் குதித்துத் தப்பியோடியது.
பாவம் ஓநாய்…………….!
ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும், செயல் முடிந்த பிறகு யோசித்து பயனில்லை..
நம் நிலையும் அந்த ஓநாய் போலத்தான் நம்மை ஏமாற்றவும் ஒரு சில நயவஞ்சக நரிகள் அலைகின்றன.. நாம் தான் திறமையாக நம்மை தப்புவித்து கொள்ள வேண்டும்..
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeletehttps://youtu.be/YbVw4Krh7bo
ReplyDeleteEnna koduma sister ithu naakku vela podama savadikkuranga
ReplyDeleteUnmai than namaku matum throgam panuraga
DeleteTeachers vaccancy niraya irukkum pola ana today thanthi paper la amaichar nithi patrakurai sari seitha udan bt vaccancy fill panna padum nu sonnaru
ReplyDeleteEppo nithi patra kurai mudium nu than therila
Video la nithi patrakurai pathi amaichar pesave illa newspaper appidi potrukanga
DeleteFull video va namakku poda mudiyathu sir ana paper la short a important news mattum pottu iruppanga
Delete