Skip to main content

வாழ்க்கையின் யதார்த்தம்..

*** எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...


*** தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்.


***உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை.


***வயதானவர்களிடம் மற்றும் அனுபவ மிக்க்கவர்களிடம்  மென்மையாக  பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்க வேண்டும்  என்பது முழுமையாகப் புரியும்.


*** ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது  "ஊமையாய் "  இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது  ""செவிடனாய்" இருங்கள்...! எளிதில் வெற்றி பெறுவீர்கள்.  சங்கடங்கள் வரும் போது "தடுமாற்றம்"" அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது  ""தடம் " மாறாதீர்கள்.


 ***வளமுடன் (பணமுடன்) வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி " நீங்கள் " நன்றாக அறிவீர்கள் -  யார் உண்மையான நண்பர்கள் என்று...?


*** ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு " நீங்கள் " மட்டுமே காரணம்.


***நீ சிரித்துப் பார்..!  உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்..


*** எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.


***நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை "முட்டாள்"  என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழுமையான  நம்பிக்கையையே" ஆகும்.


***அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும்  "திறமை " படைத்தவன் என்பதே அர்த்தம்.


***மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை. அவர்கள் மற்றவர்களிடம்  நடந்து கொள்ளும் விதத்தை,  செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!


*சிலநேரங்களில் சிலரிடம் விளக்கம் கொடுத்து தக்க வைப்பதை விட, விலகி நின்று புன்னகை செய்வது சிறந்தது.*


*தேவையற்ற நினைவுகளை மனதில் கொண்டு குழப்பமான சூழ்நிலையில் இருப்பதை விட, எதையும் சிந்திக்காமல் தெளிவான மனநிலையில் இருந்து விடுவது சிறந்தது.* 


*காரணத்தை உருவாக்கி வெறுக்கும் மனிதர்களை விட, காரணமே இல்லாமல் நேசிக்கும் மனிதர்களை நேசித்து அவர்களை தக்கவைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை அழகாகும்.* 


*பிறர் மனம் மகிழ நீங்கள் காரணமாக இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் சரியாக வாழ்கிறீர்கள்.* *அத்தகைய வாழ்க்கை பாதையை வாழ்வின் இறுதி வரை தவற விடாதீர்கள்.*

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கான தகுதித் பெற்றவர்களுக்கு மீண்டும் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. Ippo tet ku irukkura go athu than so antha reply koduthu irukkanga so let's wait and see

      Delete
  3. Tet pass pannavangaluku nalla kalam eppo than varum mam , daily news pakkumpothu innum namma ethana varusam Tet postings poduvangala nu kathirukanumnu theriyala mam, atleast consolidated pay la job podalam but entha govt um nammala pathi mattum pesavea mattranga vallkeye veruthu ponathu than micham

    ReplyDelete
  4. Today thanthi newspaper la 2020 la 66 lakhs a iruntha students strength ippo71 lakhs a irukku

    so students teachers ratio padi pani niyamanam seiyya nadavadikai edukka padum nu solli irukkaru

    ReplyDelete
  5. Ithu ellam nalla soldra neenga process pandra mari therila

    Trt syllabus Vidala or enna method la posting poduvanga nu sollala

    Increase ana students strength posting podala na kandippa decrease aidum apram school la excess a teachers irukkanga nu solluvinga

    So no posting nu solluvinga ponga boss innum engala paithiya karanave ninachuttu irukka la

    ReplyDelete
  6. Cm and all ministers neenga padikka elutha solli koduthathu teachers than
    Ana ippo engala mari teachers a romba savadikkuringa enga sabam unga la summa vidathu

    Government a mattume kurai solla mudiyathu 2013 tet batch um posting podama thaduthathil mukkiya pangu ungalukku than
    15000+ posting vangittu vera yarukkum posting poda kudathu marupadium engalukku mattume posting podunga nu soldra nalla manasu yarukku varathu😏😡😡😤

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..