Skip to main content

இன்றைய சிந்தனை..

ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் வாங்க சந்தைக்கு போனான்.


ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கி கொண்டு ஓட்டி வந்தான்.


ஒட்டகம் வாங்கிய வியாபாரிக்கோ மகிழ்ச்சி. நியாயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று. 


வீட்டுக்கு வந்ததும் தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்க சொன்னான்.


அதற்கு முன்பாக ஒட்டகத்தின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயற்சித்தான். அவனால் முடியவில்லை.


தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தின் சேணத்தை அவிழ்க்க சொன்னான்..


ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள், பொத் என ஏதோ கீழே விழுவதை கண்டு எடுத்து பார்த்தான்.


அது ஒரு சிறிய பொக்கிஷப்பை. உள்ளே பிரித்தால், ஆச்சரியத்தால் அவன் கண்கள் விரிந்தது. விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள். தகதகவென மின்னியது.


அதை எடுத்து கொண்டு முதலாளியிடம் ஓடி காண்பித்தான்.


உடனே வியாபாரி, அந்த பையை இப்படி கொடு, உடனே அந்த ஒட்டக வியாபாரியிடம் கொடுக்கணும்னு சொல்லி புறப்பட்டான்.


பணியாளோ, ஐயா இது யாருக்கும் தெரியப் போவதில்லை. இது இறைவனின் பரிசு. நீங்களே வைத்து கொண்டால் என்ன என வற்புறுத்தினான்.


வியாபாரியோ ஒத்து கொள்ளாமல் புறப்பட்டு போனான்.


ஒட்டக வியாபாரியிடம் சேணத்தை அவிழ்த்த போது கிடைத்த பொக்கிஷப் பையை கொடுத்ததும் நன்றியோடு வாங்கி கொண்டவன், அந்த பொக்கிஷப் பையை வியாபாரியிடம் கொடுத்து, உங்கள் நேர்மையை நான் மெச்சுகிறேன். தங்களுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்புகிறேன். இதிலிருந்து உங்களுக்கு பிடித்தமான கற்களை சிலவற்றை எடுத்து கொள்ளுங்கள் என்று நீட்டினான்.


அதற்கு அந்த வியாபாரியோ சிரித்து கொண்டே உங்களிடம் இந்த பொக்கிஷத்தை தரும் முன்பே இரண்டு விலையுயர்ந்த ரத்தினங்களை நான் வைத்து கொண்டேன் என்றான்.


உடனே ஒட்டக வியாபாரியோ கற்களை எண்ணி பார்க்க எதுவுமே குறையவில்லை. சரியாக இருந்தது கண்டு குழம்பினான்.


உடனே அந்த வியாபாரி நான் சொன்ன இரண்டு ரத்தினங்கள்...


*1. எனது நேர்மை.*

*2. எனது சுயமரியாதை என்றான் கம்பீரமாக.*


*நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல. தவறு செய்யக்கூடிய சந்தர்ப்பமும், வாய்ப்பும், வாய்த்தாலும் நேர்மையாக வாழ வேண்டும்.* 


*வாழ்வில் ஒரு நாள் நேர்மையையாய் வாழ்ந்து பார்த்தால் அதன் ருசி  உணர்ந்து விட்டால், நாம் எதற்காகவும் நேர்மையை இழக்க மாட்டோம்.*

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. பகுதி நேர ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வளர்கள் என்று கரிசனம் காட்டும் அரசு டெட் தேர்வர்களை மட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏனோ

    ReplyDelete
  3. டெட்டில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி என்று கூறும் அரசு பகுதி நேர ஆசிரியர்களை எவ்வாறு பணி நிரந்தரம் செய்ய இயலும்? டெட் தேர்வர்கள் விழித்து கொள்ள வேண்டும்

    ReplyDelete
  4. பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் டெட் தேர்வர்களுக்கு எதிரானது. கவனத்தில் கொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப அறிவாளித்தனமா பேச வேணாம். பார்ட் டைம் டீச்சர்ஸ்ல கூட டெட் பாஸ் பண்ணவங்க இருக்காங்க. அப்போ அவங்க போஸ்டிங்க்கு தகுதியானவங்க தான

      Delete
  5. Education minister onnum udanadiya part time teachers permanent pannuvom nu sollala ithu varai 303 therthal arikkai niraiverti ullom part time teacher kum pani nirantharam seiya muyarchi eduka padum nu than sonnar so namakku three month munnadi(Tet) ippadi than sonnaru pannitara

    ReplyDelete
    Replies
    1. நன்றி சொல்றேன்னு போய் நச்சரிச்சே போஸ்டிங் வாங்கிருவாங்க சிஸ்டர்

      Delete
  6. நாட்ல சங்கம் வச்சு ஊரை ஏமாத்துற குரூப்ல பகுதி நேர ஆசிரியர்களும் உண்டு. எனவே நாம் ஜாக்கிரதையாக இருப்பது நலம்.

    ReplyDelete
  7. இல்லம் தேடி கல்வி Training also give to the volunteers mam.

    ReplyDelete
    Replies
    1. Yes unknown frnd, training will be given bt govt teachers..

      Delete
  8. Tetku postings poduvangala intha yearla, Tet pathi mattum pesavea mattranga namma nillami coronova vida kodumaiyanathu yarukum ippadi oru nillami varakudathu

    ReplyDelete
  9. Mr Unknown

    Where r u?

    Blog la neenga illama chatting konjam kammiya ...

    Vazhakkam Pola ethavathu ... 😂😂😁😁😀😁😂

    ReplyDelete
  10. Posting poduvanga next academic tet candidates and part time teachers don't feel .

    ReplyDelete
  11. Mam,when shall we expect PG trb exam?

    ReplyDelete
    Replies
    1. Mam, we can expect either by end of November or after second week of December..

      Delete
    2. 🤦‍♂️🤦‍♂️

      Delete
  12. இன்றைக்கு 12 மணிக்கு tet list varum...

    ReplyDelete
    Replies
    1. Ketkum pothu happy ah tha irukum but nadakathu nu therinchum itha nambitu iruntha avlo tha

      Delete
  13. Aga PG ku yarum padikkakudathu. Correctaaa

    ReplyDelete
  14. எந்த 12மணிக்கு unknown சார்

    ReplyDelete
  15. 👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿

    ReplyDelete
  16. Transfer counselling முடியாமல் ஒன்னும் வராது.


    வரும் போது வரட்டும் அதுவரை

    Pgtrb க்கு prepare பண்ணுவது புத்திசாலிதனம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...