Skip to main content

TODAY'S THOUGHT..

இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.._

_எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை.._ ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை..
ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை..

எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்..

என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாமல் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்?

கடைசி நாள் சண்டை.. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்..

உடனே தளபதி வீரர்களை அழைத்து, *“சரி வீரர்களே.. நாம் ஒரு முடிவுக்கு வருவோம்.. இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன்.. அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே.. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம்.. இப்படியே திரும்பிவிடுவோம்.. வெற்றியா தோல்வியா.. நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்.. சரியா..?”*

_*“ஆ.. நல்ல யோசனை..  அப்படியே செய்வோம்..”*_

_நாணயத்தைச் சுண்டினான் தளபதி.._

_காற்றில் மிதந்து, விர்ரென்று சுழன்று தரையில் விழுந்தது நாணயம்.._

*தலை..!*

வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்..
*_வெற்றி.. வெற்றி.._* என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர்.. _வெகு வேகமாக சண்டையிட்டனர் எதிரி நாட்டவர்களோடு.._

_*அட.. என்ன ஆச்சர்யம்.. அந்த சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது!*_

துணைத் தளபதி வந்தான்.. *‘நாம் வென்றுவிட்டோம்.. கடவுள் தீர்ப்பை மாற்ற முடியாதல்லவா..”* என்றான் உற்சாகத்துடன்..

_*“ஆமாம்.. உண்மைதான்”*_ _என்றபடி அந்த நாணயத்தை துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி.._

*_நாணயத்தை பார்த்த துணைத் தளபதிக்கு தலை சற்றியது.._*

*அந்த நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலையே பொறிக்கப்பட்டிருந்து..*


_*நமது நம்பிக்கையே நமது இறைசக்தி..*_
_*அது இருக்கும்வரை நம்மை யாராலும் வெல்ல முடியாது..*_

*நம்பிக்கை = இறைவன்*


Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
    Replies
    1. Mam... 10.3.2020 க்கு முன் உயர்கல்வி முடித்த ஆசிரியர்களின் ஊக்க ஊதியத்திற்கு நிதித்துறையின் ஒப்புதல் பற்றிய தகவல் ஏதேனும் உண்டா?

      Delete
    2. I hve posted the RTI copy, check it out mam..

      Delete
  2. #Breaking | அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்படும் என அறிவிப்பு.

    ReplyDelete
  3. Madam pgtrb 2019 maths question paper send pannunga

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...