Skip to main content

TODAY'S THOUGHT..

ஒரு சமயம் இரண்டு அமெரிக்க போர்ப்படைக் கப்பல்கள் கடலில் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் பயணித்துக் கொண்டு இருந்தன.பனிமூட்டத்தினால் சில நாட்கள் தொடர்ந்து அவர்களுடைய பயணம் தாமதப்பட்டு வந்தது.


ஒருநாள் இரவு கடும் பனிமூட்டத்தில் கடற்பகுதி மூடியிருந்ததால் முன்னால் சென்று கொண்டு இருந்த போர்ப்படைக் கப்பலின் மேற்தளத்தில் கப்பலின் கேப்டன் நின்று மேற்பார்வை இட்டுக் கொண்டு இருந்தார்.

அப்போது தொலைநோக்கி வழியாக கண்காணித்துக் கொண்டு இருந்த கடற்படை வீரர் கேப்டனிடம் சொன்னார். “ஐயா நாம் போகின்ற பாதையில் சற்று தொலைவில் விளக்கு வெளிச்சம் தெரிகிறது. இன்னொரு கப்பலாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுகிறேன்”

“அது நின்று கொண்டு இருக்கிறதா இல்லை, நகர்கிறதா?”
“நகராமல் தான் இருக்கிறது”

“உடனடியாக அவர்களுக்கு சிக்னல் அனுப்பு. நமது கப்பல் போகின்ற வழியில் அது நிற்கிறது என்று தெரிவி. 20 டிகிரி விலகிப் போகச் சொல்.”
அப்படியே சிக்னல் அனுப்பப்பட்டது. அங்கிருந்து உடனடியாக மறுமொழி வந்தது. “நீங்கள் 20 டிகிரி விலகிப் போவது நல்லது”.

எரிச்சலடைந்த கேப்டன் சிக்னல் அனுப்பினார். “நான் கேப்டன் சொல்கிறேன். 20 டிகிரி விலகிப் போங்கள்”

மறுமொழி உடனடியாக வந்தது. “ஐயா நான் கப்பல்படையின் இரண்டாம் நிலை ஊழியன். தயவு செய்து 20 டிகிரி விலகிப் போங்கள்”

கேப்டனுக்கு ஒரு இரண்டாம் நிலை ஊழியன் இப்படி கீழ்படியாமல் நடந்து கொள்வது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. “இது போர்ப்படைக் கப்பல். உடனடியாக 20 டிகிரி விலகுங்கள்”

பதில் உடனடியாக வந்தது. “இது கலங்கரை விளக்கம்”

மறு பேச்சு இல்லாமல் போர்ப்படைக் கப்பல்கள் தங்கள் பாதையை 20 டிகிரி மாற்றிக் கொண்டன.

(இது அக்கப்பலில் பயணித்த கடற்படை வீரர் கடற்படையினரின் பத்திரிக்கையில் தெரிவித்து அதை ஸ்டீபன் கோவே தன் புத்தகம் ஒன்றில் மேற்கோள் காட்டியிருந்தார்).

ஒவ்வொருவர் வாழ்க்கைப் பாதையிலும் இப்படி சில கலங்கரை விளக்கங்கள் குறுக்கிடத்தான் செய்கின்றன. நம் விருப்பப்படி மாறவோ, நமக்காக விலகி வழி விடவோ செய்யாத சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன மாற்றவே முடியாத இது போன்ற குறுக்கீடுகள் வரும் போது நாம் தான் நம் பாதையை சற்று மாற்றிக் கொண்டு செல்ல வேண்டும். அதை விட்டு விட்டு நான் மாற மாட்டேன், அதை மாற்றியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து எதிர்த்து நின்றால் அது வடிகட்டிய முட்டாள்தனமாகவே இருக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தங்களை மாற்றிக் கொள்ள நேரிடுவது சிலருக்கு கௌரவக்குறைவாக தோன்றுவதுண்டு.

மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கேப்டனுக்கு வந்த கோபம் போல “ஈகோ” பிரச்சினை எழுவதுண்டு. ஆனால் சந்தர்ப்பங்களின் தன்மை அறிந்து தெளிவுடன் மாறுவதும், வளைந்து கொடுப்பதும் பக்குவமேயன்றி தோல்வியல்ல.

ஒரு ஆங்கிலக் கவிஞன் கடவுளிடம் பிரார்த்தனை செய்தான். “கடவுளே! உலகில் மாற்ற முடிந்த விஷயங்களை மாற்றும் சக்தியையும், மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும், இந்த இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்து தெளியும் ஞானத்தையும் எனக்குத் தருவாயாக!”

கடவுளிடம் நாம் வேண்டுவதும் அதுவாகவே இருக்கட்டும்...

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. All the best to all pg aspirants.. I have always told that exam will come for sure and no second list will stop it.. YOU CAN'T CHANGE EVERYTHING, SOMETIMES YOU SHOULD ACCEPT THE WAY THEY ARE!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    Also age criteria is something which can't be ruled out since it was as per NEP..

    ReplyDelete
    Replies
    1. You are always right madam

      Delete
    2. தங்கள் வார்த்தைகளை நம்பியது வீண்போகவில்லை .....மிக்க நன்றி அட்மின் சகோதரி ......God bless you....

      Delete
    3. Thanks for believing me..

      All the best brother 🙂🙂

      Delete
  3. 1:2 அன்நோன் நான் எக்ஸாம் வந்தா கிழிக்க மாட்டேன்னு நீங்க பாத்திங்களா? நீங்க தான் பேராசை புடுச்சு அலைஞ்சிங்க இப்போ என்ன ஆச்சு? வெச்சாங்களா ஆப்பு 😁😁😁😁😁😁

    ReplyDelete
  4. எக்ஸாம் வராது செகண்ட் லிஸ்ட் தான் வரும். எக்ஸாம் வந்தாலும் கேஸ் போடுவோம்னு குதிக்கலயா நீங்க? இப்போ என்னமோ நடிக்கிறிங்க

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா மினிஸ்டரை பாக்குறதும் முதல்வரை பாக்குறதும் என்ன என்ன வேல காட்னாங்க

      Delete
  5. ஒ௫ காலத்தில் டீஆர்பி தேர்வு வந்தால் தேர்வர்கள் சந்தோசபடுவாா்கள் ஆனால் தற்போது கோச்சிங் காரன் மட்டுமே சந்தோசபடுகிறாா்கள் ௭ல்லாம் பணத்துக்காக மட்டும் தான்

    ReplyDelete
  6. ௮னைத்து பாடத்திற்கும் கோச்சிங் ௭ல்லாம் வேஸ்ட் பணம் மட்டுமே குறிக்கோள் வீட்டில் இருந்து படிக்கலாம் வீண் செலவு வேண்டாம்

    ReplyDelete
  7. Kaviya & VIP Coaching Center
    1.PG TRB English (14 Booklets)
    2.PG TRB Maths
    3.PG TRB History-(4 Booklets)
    3.PG TRB Chemistry -(4 Booklets)
    3.PG TRB Tamil -(4 Booklets)
    Study material + Questions bank கோரியார் வழியாக தேவைப்படும் ஆசிரியர் நண்பர்கள் கீழே உள்ள கைபேசி எண்ணிற்கு உங்கள் Whatsapp -எண்ணிலிருந்து முகவரி அனுப்பவேண்டும்.
    Whatsapp number only
    Phone:9 3 6 1 4 2 2 6 5 5
    Unit wise Free questions bank
    Cell no / Enquiry
    9 6 0 0 7 3 6 3 7 9
    Only send through St Courier
    👆👆👆👆👆👆👆👆👆👆
    Forward to all teacher
    👆👆👆👆👆👆👆👆👆

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete

  9. 60 வயதில் உள்ளவர் பாடம் நடத்த முடியும் 40,45வயதுஉள்ளவர்களால் பாடம் நடத்தமுடியாதா இதற்காகத்தான் இந்த ஆட்சி வர காத்திருந்தோம்.அரசியல்வாதியின் கையில் நமது தலையெழுத்தா....கடவுளே நீ இருந்தால் கேள்

    ReplyDelete
  10. Exam date postpone aga chance irukka mam pls reply

    ReplyDelete
  11. Exam date postpone aga chance irukka mam plz reply

    ReplyDelete
    Replies
    1. Third wave and lockdown vandha matum postpone aga chances iruku.. Vera enna kaaranathukagavum thalli pogathu..

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. BUDDHA ACADEMY
    PGTRB HISTORY ONLINE COACHING
    தருமபுரி.
    +91 99620 27639 / +91 88380 72588



    ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள முதுகலை வரலாறு பணித் தேர்விற்கு இணையவழி (Online) மற்றும் நேரடி வகுப்பு வரலாறு பாடத்திற்கு எங்களது புத்தா அகாடமி தருமபுரி, மூலம் மிகச் சிறந்த முறையில் பயிற்சி அளிக்க உள்ளோம்.
    வகுப்புகள் 12.09.2021 தொடங்கி தொடர்ச்சியாக நடைபெறும். வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வரலாற்று பாடப்பிரிவு ஆசிரியர்கள் இவ்வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

    இங்ஙனம்
    புத்தா அகாடமி,
    தருமபுரி.

    தொடர்புக்கு
    புத்தா அகாடமி
    இடம்: பிஷப் ஹவுஸ்
    ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்டல் எதிரில், தருமபுரி.
    +91 99620 27639 / +91 88380 72588

    ReplyDelete
  14. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் அனைத்து பாடப்பிரிவு தேர்வுகளுக்கான உளவியல் (Psychology) பாடப்பிரிவுக்கு இணைய வழி மூலம் பயிற்சி 12.09.2021 முதல் தொடங்குகிறது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

    வகுப்பில் இணைய விருப்பம் உள்ள தேர்வர்கள் மேலே உள்ள கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்

    இங்ஙனம்
    புத்தா அகாடமி,
    தருமபுரி.

    தொடர்புக்கு
    புத்தா அகாடமி
    இடம்: பிஷப் ஹவுஸ்
    ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரில், தருமபுரி.
    +91 99620 27639 / +91 88380 72588

    ReplyDelete
  15. Mr.Arulmuthusamy sir one time post Panna pothatha

    ReplyDelete
  16. Tet pass pannavangaluku postings poduvangala mam

    ReplyDelete
    Replies
    1. Inoru tet varumnu solirkangala so apo theriya chances iruku..

      Delete
  17. நண்பர்களுக்கு வணக்கம். 100 %trt தான் . . Next academic year la TRT exam எதிர்பார்க்கலாம்... Age limit 45. பண்ணிட்டாங்க... வரும் காலங்களில் பணி நியமன தேர்வு தான் . .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..