Skip to main content

மாற்றங்கள்..

 *வார்த்தைகளால் சொல்லும் பதில்களை விட... 'வாழ்க்கையால்' சொல்லும் பதில்களே 'வலிமை' வாய்ந்தவை..!!*


*'அன்பு' என்பது ஒரு சிறந்த பரிசு..!! அதை பெற்றாலும் கொடுத்தாலும் சந்தோஷமே..!!*


*அளவோடு உண்டால் உடலுக்கு நல்லது..!!அளவோடு பழகினால் உறவுக்கு நல்லது..!!*


*போதிக்கும் போது கற்றுக்கொள்ளாத பாடத்தை... பாதிக்கும் போது கற்றுக் கொள்கிறோம்..!!*


*விட்டு கொடுத்து வாழ பழகிகொள்ளுங்கள்... இல்லையெனில், வாழ்க்கை நம்மை விட்டு போய்விடும்...*


*'மனதில்' பட்டதையெல்லாம் பேசினால்... 'மனதிற்கு' பிடித்தவர்களை இழப்பீர்..!!*


*பணத்தை தொலைத்தாவது வாழ்க்கையை தேட வேண்டும்..!!வாழ்க்கையை தொலைத்து விட்டு பணத்தை தேடக்கூடாது..!!*


*யாரேனும் நம்மைக் கண்காணிக்கிறார்களா... என்ற எண்ணம் தோன்றாத வரை நாம் நாமாகவே இருக்கிறோம்..!!*


*வாழ்க்கையில் தோற்பவர்கள் இரண்டு பேர்.ஒருவர் வாழ்க்கையில் எல்லோர் பேச்சையும் கேட்பவர். மற்றொருவர் யார் பேச்சையும் கேட்காதவர்....


தெரிந்தே தவறு செய்பவர்களிடம் நியாயம் கேட்காதே.. அவர்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்த பல பதில்கள் வைத்திருப்பார்கள்.......*


*மாற்றங்கள் என்ற ஒன்றே. இந்த உலகில் இறைவன் தோற்றுவித்த  மாறாத நியதி. வாழ்க்கையில் இதைப் புரிந்து வாழ பழகிவிட்டால் யாருடைய மாறுதலும் நம்மை பலமிழக்க செய்யாது...*

Comments

  1. Gudmrng friends, brothers and sisters. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Pg vacancy increase pana chance irruka mam

    ReplyDelete
  3. Admin mam neenga exam syllabus ellam complete panniyacha mam

    ReplyDelete
    Replies
    1. Unknown frnd..

      I haven't decided yet to write the exam or not..

      Delete
  4. Enna orey amaithiya irukku oru vela trb ku verithanama padikkurangalo

    ReplyDelete
  5. Appadi than tet than oothikiduche so pgtrb avathu kai kodukattum nu padikinrom

    ReplyDelete
  6. Hard work never fails, focus on pgtrb. This is very good chance..

    ReplyDelete
  7. தமிழ் படித்தவர்கள் தமிழ் வழியில் படித்த சான்று பதிவு செய்ய வேண்டுமா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...