Skip to main content

இன்றைய சிந்தனை..

உடைத்து வைத்திருந்த உருண்டை வெல்லத்திலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து டீயில் போடும்போது,அதிலிருந்துg  ஒரு சிறு உருண்டை கைதவறி கீழே விழ...தரையில் விழுந்ததை எடுக்க வேண்டாம் என்று அப்படியே விட்டுவிட்டு,டீ யை குடித்துவிட்டு,எதேச்சையாய் கவனிக்கிறேன்,அந்த வெல்ல உருண்டையின்மேல் அவ்வளவு எறும்புகள்..!!


இனிப்புக்கு எறும்புகள் வருவது இயற்கைதான் என்று எடுத்துக்கொண்டாலும்...


அந்த உருண்டை விழுந்த இடத்தைச் சுற்றிலும்,சுமார் 30 மீட்டர் சுற்றளவுக்கு காலி இடம்.அதுவும் சுத்தமாக துடைக்கப்பட்டது.


இது விழுந்த அடுத்த சில விநாடிகளில் எப்படி அந்த எறும்புகள் எல்லாம்,வெல்லம் இருக்கும் திசையை கண்டறிந்து அதைநோக்கி வந்துவிடுகின்றன என்பது ஆச்சர்யமான ஒன்று..!


யார் அவைகளுக்கு சமிக்ஞை கொடுத்தது..?!!!


இங்குதான் இயற்கையின் இயக்க ஒழுங்கின் அற்புதத்தை காணமுடிகிறது.


எறும்பு மட்டுமே உணவை தேடவில்லை...

உணவும் எறும்பை தேடியிருக்கிறது..!


தோற்றத்தில் இவற்றுள் ஒன்று ஜீவனாகவும்,

மற்றொன்று பொருளாக இருந்தாலும்,இவையிரண்டுக்குமான மையப்புள்ளி ஒரேத்தன்மையாக இருக்கவேண்டும்.


அந்த புள்ளியிலிருந்து எழுந்த அலையே ஒன்றையொன்று ஈர்த்திருக்கின்றன.


நீ எதைத் தேடுகிறாயோ,

அதுவும் உன்னைத் தேடிக்கொண்டு இருக்கிறது.

என்று ஞானியர்கள் கூறுவது எவ்வளவு பேருண்மை..!!!

நிற்க,!


இந்த இடத்தில் நமக்கு நியாயமான ஒரு சந்தேகம் ஏற்படும்...

எறும்பு தேடியது விரைவாக கிடைத்துவிடுகிறது,நாமும் தேடுகிறோம்,ஆனால் நமக்கு அப்படி கிடைப்பதில்லையே...அல்லது காலதாமதமாகிறதே...?!


ஒரே வித்தியாசம்தான்...எறும்பு தனது தேவைக்கு தேடுகிறது...

நாம் தேவைக்கும்மேல் தேடிக்கொண்டிருக்கிறோம்..!


நமக்குத் தேவையானது ஆல்ரெடி நம்மிடம் இருக்கிறது,அல்லது தேவைப்படும் நேரத்தில் அது கிடைத்துவருகிறது.


நமது முயற்சிகள் மேற்கொண்டு தேடுவதிலேயே இருப்பதால்,தேவைக்கு நம்மிடம் உள்ள இருப்பு,நம் கவனத்திற்கு வருவதில்லை...!

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. ஆளுக யாரயும் காணோமே எல்லாருக்கும் விடியல் கெடச்சிடுச்சோ

    ReplyDelete
    Replies
    1. இருட்டில் மாட்டிக்கொண்டு உள்ளார்கள். வழித்தெரியாமல்???????

      Delete
  3. _*🔥👉இன்று நடைபெறும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வில் காண்பிக்கப்படும் சுமார் 2348 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மாவட்ட வாரியாகவ

    http://www.kalvichudar.com/2021/09/2348.html





    🔵

    ReplyDelete
  4. South side a la 1 vaccancy kuda illaye😔

    ReplyDelete
  5. Replies
    1. 🤔🤔🤔🤔TET mattum dhan pending

      Delete
    2. Any good news varuma mam

      Delete
    3. Please reply pannunga mam

      Delete
    4. Inaikku enga school la teacher's day celebration, adhanala dhan blog la inform panen.. Sorry for the late reply..

      Inaiku trb la irundhu edho oru info varumnu sonanga adhan..

      Delete
    5. மாற்றுத்திறனாளிகளின் இடஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படாததால் Pg trb தேர்வு நடைமுறைக்குத் தடை News 18 flash. News

      Delete
    6. Adhuku apuram andha news varave illa..

      Delete
    7. அட்மின் மேடம் அது போல ஒரு நியூஸ் இப்போ இல்லவே இல்ல

      Delete
  6. அடுத்த டெட் வருதா மேடம்

    ReplyDelete
  7. BRTE selection method sollunga mam..

    ReplyDelete
  8. Tet pathi any good news ethum solrangala mam pls reply

    ReplyDelete
    Replies
    1. Tet porutha vara adhutha tet dhan varum..

      Delete
    2. Yepaaaaa yerganave posting pottu thallittanunga ithula innoru tet Money amparikka vera vali therilaya pakkingala

      Enga valgai la yen da vilayaduringa mana ulaichal la suicide pannikalam pola irukku

      Delete
  9. Today counselling

    BT vacancy

    Tamil- 453

    English -254

    Maths -485

    Science- 788

    Social science- 388

    Total -2348

    ReplyDelete
  10. Friends, trb la inaikku edho announcement varumnu oru info kedachuthu, adhan sonen..

    45age ku thirumba case vera file agi irukam..

    ReplyDelete
  11. Replies
    1. Age 45 ku oru group ketutu irukanga, oru vela relaxation kudukalam due to pandemic but adhukaga exam ku stay ellam kudukka matanga..

      Don't believe rumors..

      Delete
  12. இதுல 1:2 காமெடி வேற தாங்க முடியாது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..