Skip to main content

SUNDAY'S POSITIVE VIBES..


பிரபஞ்சத்தை

இயக்கும் பேராற்றலே

உம்மை

சரணடைகிறோம்...


பிரபஞ்சமே,

உம்மை 

வணங்குகிறோம்.


நம்பிக்கைதான் 

வாழ்க்கை என்பதை முழுமையாக 

நம்புகிறோம்.  


ஆற்றலை 

அளிக்கும்

பிரபஞ்சத்திற்கு 

நன்றி கூறுகிறோம்.


நன்றியுணர்வை

சுவாசித்தலுக்கு 

நிகராக உணர்கிறோம்.


அன்பு உணர்வை 

ஆகப் பெரும் சொத்தாக

அகத்தில் வைக்கிறோம்.


பஞ்ச பூதங்களின் 

துணை

எப்பொழுதும்

இருக்கிறது 

என நம்புகிறோம்.


விழிப்புணர்வு 

எங்களைக் காக்கும் 

என பகிர்கிறோம்.


"வாழ்க வையகம் 

வாழ்க வையகம்" 

என வாழ்த்திக்கொண்டே

இருக்கிறோம்.


நல்லெண்ண 

அலைகள்

நம்பிக்கை தரும் 

என உணர்கிறோம்.


வாழ்க வளமுடன் 

வாழ்க வளமுடன்

என்ற 

மந்திரம் சொல்லி

நேர்மறை எண்ணங்களை வளர்க்கிறோம்.


'இதுவும் கடந்து போகும்" 

என மனஉறுதி 

கொள்கிறோம்.


"மகிழ்வித்து மகிழவே" 

இப்பிறப்பு 

என உணர்கிறோம்.


"மாறும்" என்பதும்

"மாறிக்கொண்டே 

இருக்கிறது" என்பதும்

தெளிவாக 

உணர்கிறோம்.


மனவுறுதியே 

மாமருந்து 

என அறிகிறோம்.


சங்கடங்கள் தீர

சரணாகதியே

சிறந்த வழியென

சரணடைகிறோம்.


இறை நினைப்பே,

உயிர் பிழைப்பு 

என உணர்கிறோம்.


பய உணர்வை

பக்தியால் 

கரைக்கிறோம்.


அச்சம் நீங்குவது 

உன் அருளால்தான்

என அகமகிழ்வு

கொள்கிறோம்.


ஆரோக்கியத்தை

மேம்படுத்தும்

ஆலோசனைகள்

அத்தனையும்

பின்பற்றுகிறோம்.


அறிவே தெய்வம்

என அறிந்து,

அதையே 

துணைக்கு அழைக்கிறோம்.


ஒவ்வொரு 

சுவாசத்திற்கும் 

நன்றி நன்றி நன்றி

சொல்லியே 

மகிழ்கிறோம்.


வாழ்க வளத்துடன் 

வாழ்க வளத்துடன்

என்ற 

மந்திரம் சொல்லி

நேர்மறை எண்ணங்களை வளர்க்கிறோம்.


பிரபஞ்சத்தை

இயக்கும் பேராற்றலே

உம்மை

சரணடைகிறோம்..Comments

 1. Wishing everyone a blessed Sunday ahead..

  ReplyDelete
 2. Trt exam confirm ....ma madam

  ReplyDelete
  Replies
  1. Bharathi mam..

   TRT GO matum dhan ipo live la iruku, so adhu varadhuku vaaipugal adhigam dhan adhey samayam ipo DMK aatchi do employment seniority ku percentage wise preference kudukka chances iruku..

   2013 & 2017 rendu groups yu manu kuduthu insists panranga idha munkutiye predict panni theva illadha cases ah stop panna dhan TRT nu GO la romba theliva mention panirpaanga..

   Ungalukku time irundha GO la last two paragraphs padichu paarunga apo puriyum TRT evlo strongnu..

   Delete
  2. திமுக ஆட்சியமைத்த பின் ஆளுநர் உரையில் முந்தைய ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட அரசாணைகளை ரத்துசெய்யவோ மாற்றியமைக்கவோ இந்த அரசுக்கு முழுஅதிகாரம் வழங்கப்படுவதாக ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது

   Delete
  3. Kuripidattum.. Changes pannavo or cancel pannavo rights iruku, aana cancel dhan pannuvanganu epdi solringa?? Trt vachu athoda marks, tet marks and seniority ku marks nu change pani kuda pannalame..

   Andha changes ennanu government dhan decide pananum, adhum change pana decision edutha illana adhum ila..

   Change panradhum cancel panradhum TRT ku porundhanumnu endha kattayamum ila..

   Delete
  4. ஆனா ஏதாவது மாற்றத்தோட நியமன தேர்வு வரலாம்னு நம்பிக்கையா இருக்கலாம் தான மேடம்.

   Delete
 3. காலை வணக்கம் அட்மின் சகோதரி .....

  ReplyDelete
  Replies
  1. Gudmrng brother, study well.. All the best..

   Delete
 4. அப்போ வெறும் டெட் மார்க்ஸ் எம்பிளாய்மென்ட் சீனியரிட்டி அல்லது டெட் சீனியரிட்டி வச்சு போட மாட்டாங்களா மேடம்

  ReplyDelete
  Replies
  1. Neenga solra method la pottalum adha ellarum accept pannanum, but oru silar accept pannamaatanga case poduvanga so issue agum adhan problem ippo..

   Delete
  2. Case pottu case pottu nasamathan poganum ellarum

   Delete
  3. உண்மை தான் அட்மின் மேடம். இங்க நெறைய பேரு தானும் படுக்கமாட்டாங்க தள்ளியும் படுக்க மாட்டாங்க.

   Delete
  4. கேஸ் போடணும்னு இல்லை யாரும் வேலைக்கு போயிர கூடாதுனு பலபேரு ரெடியா இருக்காங்க

   Delete
 5. Replies
  1. ஏம்பா... மேடம் ௭ன்ன கல்வித்துறை ௮திகாாியா? ௮வங்களே 2017பாஸ் பன்னிட்டு முழுச்சிட்டு இ௫க்காங்க2013 படுத்துர பாட்டுல😂😂😂

   Delete
  2. நீங்க செகண்ட் லிஸ்ட் வராம முழிச்சுட்டு இருக்கிங்க அத விடவா 😆😆

   Delete
  3. Unknown frnd..

   Pgtrb cases clear panra process poitu iruku, very soon we can expect the exam..

   Delete
  4. Pg trb பற்றி உங்களுக்கு என்ன தெரியும்....மேல்நிலைக்கல்வியின் சிறப்புவிதிகளின் படி தான் பணியாளர்களை நியமனம் செய்யமுடியும்..2019இல் நடத்தப்பட்ட தேர்வின் Estimate. Period of time 1.6.2019முதல் 31.05.2020வரை தோற்றுவிக்கப்படும் பணியிடங்கள் 1.6.2019அன்றையநிலவரப்படி அறிவிக்கப்பட்ட 12மாதக் காலத்திற்குச் செல்லக்கூடியவை....
   1.06 2019 நிலவரப்படி நடத்தப் பதவி உயர்வில் மீதமான காலிப்பணியிடங்கள் 1.8. 2019நிலவரப்படி கூடுதலாக உருவாக்கபட்ட 1575(50%)பணியிடங்கள் 30.05.2020இல் ஓய்வுபெற்ற காலிப்பணியிடங்கற் என 2000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன..மேற்கண்ட பணியிடங்கள் இரண்டாம் பட்டியலுக்குச் செல்லும். இதைல்லாம் நானாகச்சொல்லவில்லை Rti மூலம் தகவல் வாங்கி வைத்து ஆணையர்நந்தகுமாரிடம் சென்று சமர்ப்பிக்கப்பட்டு கேட்டதற்கு பள்ளிகள் திறந்தபின் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.....
   Pg teacher. அரசாணைப்படி முயற்சி எடுக்கிறார்கள்.......உங்களின் முட்டாள்தனமான பேச்சுகளுக்கு அரசே பதில் சொல்லும்....

   Delete
  5. நண்பா... பாவம் இது௭ல்லாம் இந்த ௮ட்மினுக்கு தெரியாது, ௮ரசானை ௮ப்படினா ௭ன்னானு கேட்பாங்க ௮து௭ல்லாம் ஒன்னும் தெரியாது

   Delete
 6. Dear NAMELESS & SHAMELESS unknown sir,

  As you are telling 'Let the admin mam is blinking'. but let us know what do you have plucked regarding Tntet issues?? You needn't pluck anything for anyone but pluck atleast something for you plzzzzz.

  ReplyDelete
  Replies
  1. சரியான பதிலடி கொடுத்திங்க தர்மதுரை சகோதரரே

   Delete
  2. அருமை தர்மதுரை நண்பரே.

   Delete
 7. That was an awesome reply
  Mr. Dharmadurai sir👏👌

  ReplyDelete
 8. மேடம் கல்வித்துறை அதிகாரி தான் உங்களுக்கு என்ன பிரச்சனை செந்தில் சார். செகண்ட் லிஸ்ட்க்காக அடுத்து யார் கால புடிக்கலாம்னு யோசிங்க

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் யார் காலில் விழுந்து பிச்சை ௭டுத்தீர்கள் சொல்லுங்கள் மாது மேடம்

   Delete
 9. Trt than varuma friends .syllabus sonnalum padikalam

  ReplyDelete
 10. இப்பொழுது உள்ள சூழ்நிலையில் நியமன தேர்வு வரவே சாத்திய கூறுகள் அதிகம். 2013 மற்றும் 2017 தேர்ச்சி அரசுக்கு கொடுக்கும் அழுத்தம் அதை உறுதி செய்கிறது.

  ReplyDelete
 11. 2013 &2017 சில பேர் சேர்த்து கொண்டு அரசை குழப்பம் செய்து trt வர வைத்து விடுவார்கள்..

  பணி நியமனம் மட்டும் பண்ண சொல்லிமனு கொடுத்தால் நல்லது

  Dmk தேர்தல் அறிக்கைபடி
  (177) trt வருவதற்கு வாய்ப்பில்லை....

  ReplyDelete
 12. நியமன தேர்வு தான் வர போகிறது. தயாராக இருப்பது நலம்.

  ReplyDelete
 13. NEET தேர்வும் வேண்டும்

  ReplyDelete
 14. Ella thervum vendum ana vela mattum poda mattanga 😁😁😁😁

  ReplyDelete
 15. ஓய்வு வயது 58 ஆக குறைக்கப்பட உள்ளது....பணி நியமனம் பள்ளிகள் திறந்தவுடன் நிச்சயம் உண்டு

  ReplyDelete
 16. அப்போ trt வரது உறுதியா

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete

Post a Comment

Popular posts from this blog

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

  தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.   தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

படித்ததில் பிடித்தது..

                 சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது. நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள். அதற்க்கு அவர் சொன்ன விடை - “சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”. சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.  அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.  தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..

TODAY'S THOUGHT..

 இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன.. ஒன்றில் எப்பவுமே ரயில் வராது.... மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்... ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. அத்தருணத்தில் ரயில் வருகிறது.... தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..... உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது.... நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....? இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்... ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்..... உண்மையாக நாம் என்ன செய்வோம்...? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்.. ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்.... உண்மை தான் என்றோம்... இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது. ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அ