Skip to main content

SUNDAY'S THOUGHT..

 இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டு வாழுங்கள்.!


எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கதவு சிறியது தான்.


எவ்வளவு பெரிய கதவாக இருந்தாலும் பூட்டு சிறியது தான்.


எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும் சாவி சிறியது தான்.


இவ்வளவு சிறிய சாவியை வைத்து அவ்வளவு பெரிய வீட்டை திறந்து செல்கிறோம்.


வாழ்க்கையும் இதே மாதிரி தான்.


நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ, சிறிய தீர்மானமோ போதும்.


அதுவே அத்தனைப் பிரச்சினையைத் தீர்க்கும் சாவியாக அமைந்து விடும்.


சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை. தீர்வு இல்லாத பிரச்சினைகளை இறைவன் அனுமதிப்பதில்லை.


எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டு இருங்கள்.!


அவன் தான் இறைவன்


பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் உணவு வழங்குகின்றார்.


உலகில் மனிதனாய்ப் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்.


இறைவன் சிலரை வறுமையால் சோதிக்கின்றார்,


இன்னும் சிலரை நோய் நொடிகளால் சோதிக்கின்றார்,


இன்னும் சிலரைக் கடன் தொல்லைகளால் சோதிக்கின்றார்.


ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள்.


நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும் தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் புரிய வரும் மற்ற மனிதர்களும் நம்மைப் போன்றோ, நம்மை விட அதிகமாகவோ சோதனைக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்று.


இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.


நீங்கள் உங்களது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து இருக்கின்றீர். எத்தனையோ பேர் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.  

  

இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.


நீங்கள் உங்களது தொழிலை நோக்கி செல்கின்றீர். எத்தனையோ பேர் தொழில் இல்லாமல்  அலைகின்றனர்.


இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.


நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் உலா வருகின்றீர்.  எத்தனையோ நோயாளிகள் அதைப் பெறுவதற்காக வேண்டி கோடியைக் கொட்டுகின்றனர்".


இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.


நீங்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றீர். எத்தனையோ மரித்த ஆன்மாக்கள் உலகிற்கு வந்து நல்லறம் புரிய ஏங்குகின்றனர்.


இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.


நீங்கள் நீங்களாக இருக்கின்றீர். எத்தனையோ பேர் அவர்கள் உங்களைப் போல் இருக்க ஆசைப்படுகின்றனர்.


இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.


எந்நேரமும் மகிழ்ச்சியுடன் இருக்க பிறரை மகிழ்வியுங்கள்.!


இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே இருங்கள்.!


யார் யார் எந்தெந்த தெய்வங்களை வணங்குகிறீர்களோ அவரவர்கள் அந்தந்த தெய்வங்களிடம் முழுமையாக சரணடைந்து விடுங்கள்.!  

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Minister 2013 Tet batch Mela sema kovaththala irukaru.....pora edathalalam manu kodukarangalam..... yesterday cm kitta Kuda manu koduthu irukanga.... minister than solli irukaru la school open pannathum ellarukum nallathu panranu .... aparam en epadi panranga???.....

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக இது பெரிய
      விளைவை ஏற்படுத்தும்.

      அனைவருக்கும் பொதுவான முடிவு தான் எடுப்பார்கள்.
      2013 க்கு மட்டும் முன்னுரிமை என்பது நடைமுறை சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை.

      TRT உறுதி.
      மீண்டும் தேர்வெழுதி வேலை வாங்கும் முனைப்பில் ஈடுபட என் வாழ்த்துகள் .
      நன்றி

      Delete
    2. புது மினிஸ்டர் கிட்டயும் அசிங்க பட்டாச்சா

      Delete
    3. TRT வாய்ப்பில்லை நண்பா நோ சான்ஸ்

      Delete
    4. அமைச்சர் நிச்சயம் உங்களுக்கு முன்னுரிமை அளிக்க மாட்டாரு

      Delete
  3. இந்த 2013க்கு இதே வேலையா போச்சு. அவங்களும் வாழ மாட்டாங்க அடுத்தவங்களையும் வாழ விட மாட்டாங்க

    ReplyDelete
  4. முதலில் காலிபணியிடம் உள்ளத என்றே தெரியவில்லை

    ReplyDelete
  5. இன்னும் ஒரு மாதம் (upto reopen school ) tet 2013,2017 group,
    cm and minister இவர்களை
    சந்திப்பதை தவிர்பது நல்லது....

    ReplyDelete
  6. Tet 2013 matum ila, pg 1:2 kuda dhan romba issues panitu irukanga.. Onnum nadakkathu, second list ellam chance ae ila..

    ReplyDelete
    Replies
    1. ௨ங்களுக்கு வேர வேலையே இல்லையா? ௭ந்த ஜன்மத்திலும் வேலை கிடைக்காது

      Delete
    2. Naanga eligibility certificate vachurukom, ennaikka irundhalum posting potu dhan aganum.. Aana ungalukku dhan 7 jenmam eduthalum possible ila..

      Actually 2013 vida neenga dhan minister ah pakka try panitu irukinga, unga banner culture ellam onnum udhavaathu.. Oru naalum second list varadhu..

      Delete
    3. CV letter
      இ௫க்கு தகுதி நிறுபிக்க

      Delete
    4. CV attend panadha vachu posting ellam claim pana kudathunu exam prospects la potruku, idhula CV letter vachu enna panna mudiyum?

      Delete
    5. உங்களுக்கு ஒரு நாளும் இராண்டாம் பட்டியல் வரப்போவது இல்லை. டெட் பற்றிய உங்களது சாபங்கள் நிச்சயம் பலிக்காது.

      Delete
    6. டெட்டுக்கு மட்டும் பாஸ் பன்னா வேலைனு ௭ந்த ௮ரசனையில் போட்டி௫க்குனு சொல்ல முடியுமா?

      Delete
    7. Cv லெட்டர்ல உங்களுக்கு போட்ருக்கா?? உங்க வெத்து cv லெட்டர்க்கு எங்க செர்டிபிகேட் எவ்ளோவோ தேவலாம்

      Delete
    8. Pass panom vela kudunganu naanga kekkave illaye, weightage system la affect aanadhala kekrom. Ungala madhiri eligibility exam kum competitive exam kum vidhyaasam theriyaadhavanga naanga illa..

      Delete
    9. நீங்க செகண்ட் லிஸ்ட்க்கு பிச்ச எடுக்குறதும் நாங்க வெயிட்டேஜ் முறைல பாதிக்கப்பட்டு போஸ்டிங் கேக்கறதும் ஒண்ணா??

      Delete
    10. Competitive examkum eligibility examkum difference iruku. Athu theriyala athan second list kekrinka.

      Delete
  7. Pls friends pandemic situation la yaraiyum distrub pannatheenga ministers ellarum one month la evlo work panni Irukanga avangalum manishanga thane time koduppom school open aganum corono complete poganum ellathukum wait panni thane aganum

    ReplyDelete
  8. 2013 வெறித்தனம்.

    ReplyDelete
  9. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக திருமதி.லதா நியமனம்

    ReplyDelete
  10. பாண்டிச்சேரி நியமன முறை தெரிந்து கொள்வோம்:

    90% - TET MARKS
    10%- EMPLOYMENT SENIORITY MARKS
    ( EACH ONE YEAR - 1.5 MARKS)

    ReplyDelete
    Replies
    1. இந்த முறை சிறந்த முறை அனைவரும் இந்த முறையை வலியுறுத்துவோம் இல்லையெனில் நியமனத்தேர்வு என்று ஒன்று வந்தால் அனைவருக்கும் மன உளைச்சல் தான்

      Delete
    2. Mr.muniyappan neeinga trt solringa ......pondicherry method solringa.......

      Delete
    3. Ithu ellarukkum porunthura nalla method

      Delete
    4. Ithu ellarukkum porunthura nalla method

      Delete
    5. பாரதி மேடம் :
      நம் அனைவருக்கும் சரியான முறை எதுவோ அதை வலியுறுத்துவோம்.
      எனக்கு தெரிந்த தகவல்களை முடிந்தவரை இங்கு பதிவிடுகிறேன் .
      மற்ற நம் நண்பர்கள் தங்களுக்கு தெரிந்ததை கூறட்டும்.

      2010 இல் TET ஐ பற்றி போதிய தகவல் தெரியாத காரணத்தால் திறமை இருந்தும் வேலை கிடைக்காதவர்கள் வலி கொடுமையானது.

      Delete
    6. ஒரு வருடத்திற்கு ஒன்றரை மதிப்பெண் என்றால் 10 வருட சீனியாரிட்டி உள்ளவர்களுக்கு 10×1.5 = 15 மதிப்பெண்கள் வந்துவிடுமே. ஆனால் சீனியாரிட்டி மொத்தம் பத்து மதிப்பெண்கள் தானே கொடுக்கப்படும் என்று கூறியுள்ளீர்கள்

      Delete
  11. அனைவருக்கும் வேலை அரிதான காரியம்......mr.முனி.......... comments pottaradhunala onnum nadakka pavadhu illai........silla perukku job kidaikkum .......pala perukku kidaikkum......entha method vanthanlum sila perukku gain na irukkum pala perukku ematrama than irukkummm.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...