Skip to main content

இன்றைய சிந்தனை..

உன்னை வெற்றிபெற வைக்க வேண்டியது உன் வேலை.. அது மற்றவர்கள் வேலை அல்ல..

                                

'எனக்கும் தெரியுமுங்க. செய்தால் நல்லாத்தான் வருமுங்க. எல்லாரும்

இதைச் சொல்லிட்டாங்க. வரட்டுமுங்க. செய்யலாமுங்க.' இப்படியே சொல்லிகொண்டு இருந்தால் ஒரு

முன்னேற்றமும் வராது. நமக்குப்பின் தொடங்கியவர்கள் கூட

நம்மைத்தாண்டி ஓடுவார்கள். வாழ்க்கையில் எதுவும் மாறாது. ஆகட்டும்

பார்க்கலாம் கதைதான். எது முக்கியம் என்று முடிவெடுத்தால், அதற்கான

நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கிவிடுவோம். செயல்பாடுகள்

அதிகமாகும். அந்த ஏதோ ஒன்றை நோக்கி குவியும். வெற்றி கிட்டும்.


ஒரு தோப்பு. அதில் நிறைய மரங்கள். அந்தத் தோப்பின் சொந்தக்காரரும்

அவனுடைய மகனும் தோப்பின் வழியாகப் போனார்கள். அப்போது அப்பா

சொன்னார். *“மகனே இந்த தெக்கால இருக்கிற மரத்தை எல்லாம் ஒரு நாள் வெட்டணும்டா.'* இருவரும் பேசியபடியே நடந்து போனார்கள்.


அங்கிருந்த மரம் ஒன்றில் ஒரு பறவை கூடு கட்டி இருந்தது. அதில் ஒரு

குருவியும் சில குஞ்சுகளும் இருந்தன. தோப்புக்குச் சொந்தக்காரர்

பேசியதைக் கேட்டுகொண்டிருந்த குஞ்சு ஒன்று, தாய்க் குருவியிடம்

சோகமாகக் கேட்டது. *அப்ப நம்ம கூடு அவ்வளவுதானா அம்மா?* மரத்தை

வெட்டிட்டாங்கன்னா, நாம காலிபண்ண வேண்டியிருக்குமே!'

தாய்க்குருவி சொன்னது. *தேவையில்லை.'*


அடுத்த நாள் ஏதும் ஆகவில்லை. அன்று மாலை, அதேபோலத் தந்தையும்

மகனும் அந்த வழியாக நடந்துபோனார்கள். தந்தை மரங்களைப்

பார்த்ததும், முதல் நாள் சொன்னது போலவே சொன்னார்.

*'இதையெல்லாம் வெட்டணும்டா* என்றார்.. ஆளுக்குச் சொல்லிவிடணும்.'

அம்மாவின் முகத்தைப் பார்த்த குஞ்சுகளிடம் தாய்குருவி சொன்னது,

*'தேவையில்லை.*

அடுத்த சில நாட்களும் அதே காட்சிகள் இரண்டுப் பக்கமும் நடந்தேறின.குஞ்சுகளுக்கு, நமது அம்மா எதை வைத்து இப்படிச் சொல்கிறார்கள் என்று

வேடிக்கையாகக்கூட இருந்தது.


அதற்கும் அடுத்த நாள் காலை. ஆளுங்க ஒண்ணும் கிடைக்கிற மாதிரித்

தெரியலை. *நாமளே இன்னைக்கு மத்தியானம் இறங்கி வெட்டிடுவோம்.'*

கேட்டுகொண்டிருந்த தாய்க்குருவி பரபரப்புடன் சொன்னது, இனிமேல்

நாம் இங்கு இருக்க முடியாது. இன்று மதியம் நம்முடைய மரத்தை

வெட்டிவிடுவார்கள். நாம் வேறு இடத்துக்குக் கிளம்பவேண்டியதுதான்.'

*'செய்ய வேண்டும்.' 'செய்துவிடலாம்.' 'ஒரு நாள் செய்யலாம்'*

என்பதெல்லாம் வெறும் நினைப்புத்தான். அவை செயலாகும் வாய்ப்புகள் குறைவு. 


 *'நாமே செய்வது'* என்று முடிவு செய்யப்படும்

வேலைகள் *கண்டிப்பாக நடந்துவிடும்.* அது அந்தக் குருவிக்குத் தெரிந்திருக்கிறது.

நாம் எடுக்கும் தீர்கமான முடிவுகளே நமக்கு வெற்றியை தேடி தரும்..

வெற்றிபெற வாழ்த்துக்கள்..

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. 2013ஆம் ஆண்டு தகுதித்தேர்வில் வென்றுள்ளேன் அப்பொழுது சிறிதளவு பணிவாய்ப்பு நடைபெற்றது மீண்டும் கடினமாக உழைத்து 2017 ஆம் ஆண்டு தகுதித்தேர்வில் தாள் 1 தாள் 2 இரண்டிலும் வென்று இதோ பணிவாய்ப்பு வழங்குகிறேன் என கூறிய அமைச்சர் இத்தனை வருடங்களாக எங்களை ஏமாற்றி உள்ளார் இப்பொழுது மீண்டும் காலிப்பணியிட விபரம் சேகரிக்கப்படுகிறது இதிலாவது வேலை கிடைக்குமா அல்லது இப்படி வாசித்து வாசித்து ஏமாற்றமடைந்து எங்கள் வாழ்க்கையை இழந்து தவிப்பதா இந்த அரசு பழைய கல்வித்துறை அமைச்சர் போலல்லாமல் துரிதமாக செயல்பட்டு வேலை வழங்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Comment pottu enna akapogudhu mr.............neeraiya case irukku.........neeraiya Peru thanakku mattum than job kidaikkanum neenaikarainga ......ellarukkum job kidaikkadhu .....appadiye kidaichalalum pala varudam akanum...mr

      Delete
    2. உங்களுக்கு அவர்களின் வேதனையை உணரமுடியாது இதற்கு எல்லாம் காரணம் அந்த அம்மாதான் வாழ்க்கையை நுட்பம் செய்த புண்ணியவதி....அவங்களும் உணரல இதனால் எத்தனை பேர் வாழ்க்கை நாசமா போகுமுனு...போய் சேந்துட்டாங்க...இப்ப யாருக்கு வலியும் வேதனையும்... கொள்ளைகார கூட்டம் சுருட்டும் வரை சுருட்டுக்கிட்டு மகிழ்ச்சியா இருக்கு வீட்டுல... நாங்க(2013) வாழ்க்கைக்காக போராடுறோம்.அந்தந்த இடத்துலே இருந்து பார்த்தா தான் வலியும் வேதனையும் புரியும்...

      Delete
    3. 2013 la sirithalavu posting pottangala Ada pavingala 10000+posting pottangale ithu kammi ya

      Delete
    4. போஸ்டிங் போடுவார்களான்னு தெரியல அதுக்குள்ள எதுக்கு இப்படி

      Delete
    5. எல்லாருக்கும் வேதனை ஒன்னு தான். எல்லாரும் கஷ்டப்பட்டுட்டு தான் இருக்கோம்.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. 2013ஆம் வருடம் நடந்த தேர்வில் வென்றவர்களுக்கு 2014ஆம் வருடம் வேலை வழங்கப்பட்டது அப்பொழுது தாள்-2 காண பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டது 2014 இல் இருந்து இன்றுவரை அதாவது 2017 2019 தகுதி தேர்வில் வென்றவர்களுக்கு இதுவரை வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை இதற்கு இடையில் 2013 ஆம் ஆண்டு வென்றவர்கள் மனசாட்சி இல்லாமல் எங்களுக்கு போட்டுவிட்டு மீதிதான் அடுத்தவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள் அரசு மீண்டும் எந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப் போகிறது எனத் தெரியவில்லை அல்லது வேலை கிடைக்குமா என்பதும் ஒரு கேள்விக்குறி தான் அதற்குள் நீயா நானா என மோதிக்கொள்ளும் நிலைமை நம் ஆசிரியர் மக்களிடையே நிலவி வருகிறது எதுவாக இருந்தாலும் முதலில் பணிவாய்ப்பு என்ற ஒரு செயல் எட்டு வருடம் கழித்து நடைபெற வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நடைபெறும் நடைபெறும்

      Delete
    2. 2013 முடிச்சு அவ்ளோ நாள் வெயிட் பண்றங்கனே வச்சுப்போம் நாங்களும் அப்படி தான

      Delete
  5. Pg 1:2 ministera pathankala..second list vitutankalamla

    ReplyDelete
    Replies
    1. நேத்து பாக்க மாட்டேன்னு அனுப்பிட்டாராம்

      Delete
    2. என்னை நேரில் பார்க்க வர வேண்டாம்! முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்! இது தான் காரணம் புரியுதா?

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. நீங்க பாக்க போனது கல்வி அமைச்சர் தான

      Delete
  6. Life time validity nala pass panna year ku mark kodukka mattanga nu ninaikkuren mam

    ReplyDelete
    Replies
    1. Unknown frnd..

      Wait pani paapom.. Nammalae negative ah yosikka vendam..

      Delete
  7. இனிய காலை வணக்கம் வட்டார கல்வி அலுவலர் தேர்வி ன் இறுதி பட்டியல் எப்பொழுது வரும்

    ReplyDelete
  8. வட்டார கல்வி அலுவலர் தேர்வு முடிவு 27.01.2021 வெளியிடப்பட்டது ஆனால் இறுதி பட்டியல் வெளியிடவில்லை

    ReplyDelete
  9. 80,000 teachers kkum velai ready pattial thayar ena sonna admk summa sonnatha? Students pudusaga govt school il ethanai per sernthargal ena entha govt sollavey ellai palaya paniedam pattrieay solgirathu pudusa govt school strength enna school govt headmaster ta athaum kanakkittu kalippaniedam evvalavu enna kanakkidavum kalvi Amaichareay..

    ReplyDelete
  10. TET Mark and employment seniority thaan best. TET seniority ketta namma thalaiyila naamale mannu pottuka vendiyathu thaan. Life Time validity kuduthathala 2013 ku 1st preference ellam kuduka maatanga. Intha tima aavathu 13 batch konjam amaithiya irunga... Appo thaan yaarukavathu posting kedaikum. Naanum 13 thaan. En Mark 84. Irunthalum enakku job kedaikumo kedaikatho theriyala. Government edukara solution ku naama ellarum cooperate panna thaan konjam posting aavathu poduvanga pls

    ReplyDelete
    Replies
    1. அப்போ trt எழுதணும்

      Delete
  11. 2022 ல் டெட் தேர்வு நடத்தி 2013,17,19 அவர்களோடு எங்களையும் சேர்த்து எம்ளாயிமெண்ட் சீனியார்டி படி போடுங்கள் என்று சொல்கிறார்கள் வைத்து கொள்ளுங்கள் அப்பொழுது 13,17,19 டெட் தேர்வர்களைவிட 2022 தேர்ச்சி பெற்றவர் சீனியாரிட்டி யில் முன் இருந்தால் அவருக்கு தான் வேலை கிடைக்கும்.இதே போன்று தான் நாளை 2023,2024.....

    ReplyDelete
    Replies
    1. அது எப்படி சார் 2022க்கு சீனியர்டி வரும்?? அவங்க ஜூனியர் தான

      Delete
  12. அதனால் தான் வருடத்திற்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது.

    ReplyDelete
  13. கலந்து போடுங்கள் கலந்து போடுங்கள் என்று கூறுபவர்களே.இன்றைக்கு 2013 தேர்வர்கள் போட்டி என்று என்னாமல் முன்னாள் தேர்ச்சி பெற்றவர்கள் என்று எண்ணிணால் சீனியாரிட்டி படி நம் அனைவருக்கும் படி படி யாக பணி வாய்ப்பு உள்ளது.இல்லை எங்களுக்கு தான் முன்னுரிமை என்று நினைத்தால் 2022தேர்ச்சி பெற போகிறவர்கள் எங்களுக்கு தான் முன்னுரிமை கேட்க போகிறார்கள்.அப்பொழுது நினைப்பீர்கள் வருட சீனியாரிட்டி படி போட்டிருந்தாளே வேலை கிடைத்திருக்கும் என்று வருத்த பட வாய்ப்பு அதிகம்.

    ReplyDelete
    Replies
    1. Apdilam pass panna ellarukkum job podra alavuku vaccancy illa atha mothalla purunjukkonga
      Pgtrb la kuda ellarukkum job poda mattanga 85 cut off na 84 eduthavangalukku no job ok va a ang adutha exam ku padikkanum ana tet ku mattum year seniority kodutha kenathula potta
      kal mari than Namma nilamai agidum konjamavathu practical a pesunga

      Delete
    2. Tet mark90%+employment seniority 10%
      Ithu than ellarukkum best method ok va
      Pass panna ellarukkum entha exam laum job kodukka mattanga
      High mark with senior get job ok va

      Delete
    3. Iiiiii comedy nalaiku sirikuren pa
      Ok illanu solli thana ellaroda lifem pochu
      Live and let be live please

      Delete
    4. 2013க்கு தான் முன்னுரிமை

      Delete
    5. Ipdiye pannitu irunthingana trt than ellarukkum ore munnurimai
      Ok va

      Apram ellarukkum pimbilikka pilappi than pathukkonga

      Delete
  14. Tnpsc மாதிரி cutoff ஒரே மதிப்பெண் என்றால் additional qualification, அதுவும் ஒரே மாதிரி என்றால் age, அதுவும் ஒரே மாதிரி வந்தால் employment seniority, அதுவும் ஒரே மாதிரி வந்தால் applay date

    ReplyDelete
    Replies
    1. Trb எதுலயும் சேராது சார்

      Delete
    2. Tnpsc method pathi இதுவரைக்கும் யாரும் case file பண்ணியதே இல்லை trb will not merche tnpsc but avanga selection method follow பண்ணலாம்

      Delete
    3. Trb ரூட் தனி ரூட்

      Delete
  15. 2017 2019 ஆகிய இரண்டு வருடங்களில் நடந்த தகுதி தேர்வில் வென்றவர்களுக்கு இன்னும் சில நாட்களில் இந்த மாத இறுதியில் இப்படி பொய்யான வெற்று வாக்குறுதிகளை கொடுத்து அதை நம்மை நம்ப வைத்து நம் வாழ்க்கை மற்றும் நம் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி வைத்துவிட்டார் செங்கோட்டையன் அவர்கள் பொய்யாமொழி என்னும் பெயரில் விளங்கும் இவராவது பொய் அல்லாமல் நம் வாழ்வில் விளக்கேற்றி வைப்பார் என நம்பிக்கையுடன் காத்திருப்போம்

    ReplyDelete
    Replies
    1. பொய்யாமொழி பொய்க்க மாட்டார் என நம்புவோம்

      Delete
  16. BEO CV list eppa varum mam

    ReplyDelete
  17. ஆசிரியர் தகுதித் தேர்வில் சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்கப்படவில்லை - மு.கா. ஸ்டாலின் குற்றச்சாட்டு

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. சரி அப்போ நீங்க வழங்குங்க

      Delete
    3. சொன்னது உண்மை தான். பூரண மது விலக்கு கொண்டு வரப்டும் என்றும் கூறினார். தற்போது என்ன நிலைமை... அரசியலுக்காக கூறுவார்கள்.... ( Enna method nu உறுதியாக சொல்ல முடியாது.. காலம் கடத்துவார்கள். தற்போது கொரோனா. நிதி நெருக்கடி) முதல்வர் அவர்களின் ஆட்சி 2026 ஐ குறி வைத்து தான். நிச்சயமாக அதிக அளவில் பணியிடங்கள் நிரப்ப வாய்ப்புகள் உள்ளது. ஆனால் எந்த method nu உறுதியாக சொல்ல முடியாது... அரசியல் அரசியல் அரசியல் அரசியல் . பொறுமையாக காத்திருப்போம். ( நடப்பது dmk ஆட்சி தான் . ஆனால் கலைஞரின் ஆட்சி இல்லை. இது m.k.stalin அவர்களின் ஆட்சி)

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here