Skip to main content

TODAY'S THOUGHT..

 மருத்துவமனையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்புகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து என் தெரு முழுக்கவும் ரோஜா சாமந்தி பூக்களின் இதழ்கள் சிதறிக்கிடந்தன. தூரத்தில் எங்கோ பறையொலி கேட்டது.


யாராயிருக்கும்? என்று யோசித்துக் கொண்ட தெருவில் மெல்ல நுழைந்தேன்.


பெரியவர் கோவிந்தன் வீட்டு வாசலில் நிறைய மலர்களின் இதழ்கள்... ஒரு வேளை பெரியவர்..? ச்சே இருக்காது. அப்படி இருந்திருந்தால் எனக்கு தகவல் வந்திருக்குமே. அப்போ அவர் வீட்டில் குடியிருக்கும் யாராவது...!


வாசலில் வண்டி நிறுத்தும் போதுதான் கவனித்தேன் தெருவின் எல்லா பகுதியிலுமே பூவிதழ்கள்.


புரியாமல் வீட்டிற்குள் நுழைந்தேன். ஷோபாவில் சப்பணமிட்டு அமர்ந்திருந்த பையன், "ஹாய்! டாடி" என்று சொல்லிவிட்டு மடியிலிருந்த புத்தகத்தில் மீண்டும் கண் செலுத்தினான். லஞ்ச் பையை வாங்கிய மனைவியிடம் கேட்டேன்.


"யாரு"?


"யாருன்னா"?


"தெருவெல்லாம் பூவா இருக்கே, அதான் யாருன்னு கேட்டேன்".

 

மனைவி சிரிக்க மகன் சொன்னான் "அப்பா ...கட்சி வேட்பாளரு ஓட்டுக் கேட்க வந்தாரு. நம்ம வீட்டுக்குள்ளேயே வந்துக் கேட்டாருப்பா" என்று அதை ஒரு நம்ப முடியாத அதிசயமாக சொன்னான்.


சமையலறை உள்ளே போய் வந்த மனைவி ஒரு கவரை என்னிடம் நீட்டினாள்.


"என்னது"?


"பிரிச்சிப் பாருங்க".


உள்ளே புத்தம் புதிய ஐநூறு ரூபாய் தாள் இருந்தது.


"ஏது"?


"அந்தக் கட்சிகாரங்கதான் கொடுத்தாங்க".


"ஏன் வாங்கின".


"ஆன்...எல்லாரும் வாங்கும் போது நாம மட்டும் வாங்காம இருக்க முடியுமா".


எல்லாரும்...என்று மனதில் நினைத்ததை கேட்காமல் வாயடைத்தேன்.


காந்தி ஐநூறில் சிரித்துக் கொண்டிருந்தார்.


தெருவைப் பார்த்தேன். ரோஜா பூவிதழ்கள் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தன.


பறையொலியையும் பூச்சிதறல்களையும் கண்டு யாரோ இறந்துவிட்டார்கள் என்று முதலில் நான் எண்ணியது உண்மை என்றே இப்போது தோன்றுகிறது.


ஆம் செத்தது...

நம்

 *ஜனநாயகம்* .

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. GOOD MORNING MAM. Today's thought superb mam.suitable for present situation. ...

    ReplyDelete
  3. ஆம் செத்தது...

    நம்

    *ஜனநாயகம்* .

    ReplyDelete
  4. செத்தது நம் *ஜனநாயகம்*

    ReplyDelete
  5. Tet pass panna namma valkai than marala,at least intha murai aatchi mattramavathu varuma mam

    ReplyDelete
    Replies
    1. Kandippa aatchi maatram varum sir..

      Delete
    2. Tet pass panna namakkum naladhu nadakkum, kavalapadathinga.. Trt vandhalum adhula seniority ku preference kuduthu namaku edhavathu naladhu nadakkum..

      Delete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...