தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கலாமா என்று சுகாதாரத்துறையிடம் அறிக்கை கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 9, 10, 11ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதேநேரத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 12ஆம் வகுப்பு தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீராஜ்குமார், தேர்வுத்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். இன்றைய கூட்டத்தில் தேர்வு மையங்களை எவ்வாறு அமைப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் தேர்தல் முடிந்த பின்பு மீண்டும் ஆலோசனை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. தேர்வு காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்பது பற்றி சுகாதாரத்துறையிடம் அறிக்கை கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. சுகாதாரத்துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தேர்வை தள்ளிவைப்பதா என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்பட இருக்கிறது.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment