Skip to main content

TODAY'S THOUGHT..

 மன்னர் அசோகர் ஒரு முறை வேட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு எதிரில் ஞானத்துறவி ஒருவர் வந்து கொண்டிருந்தார்..

மன்னரும் அவரது ஆட்களும்
செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக
துறவி ஒதுங்கி நின்றார்.

அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார்.

உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, 
இறங்கிச் சென்று துறவியின் காலில் நெடுஞ்சாண கிடையாக விழுந்து வணங்கினார்..

அவரது சிரம் (தலை) துறவியின் காலில் பட்டது.

துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார்..

இதைப் பார்த்துக்
கொண்டிருந்த அமைச்சர்
சங்கடப்பட்டார் *"ஒரு மன்னன் ஒரு பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பரியக் கவுரவம் என்னாவது?'*
என்ற எண்ணம் அவரை அலைக் கழித்தது.

அரண்மனைக்கு சென்றதும்.. அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர்
சிரித்தார்.

அமைச்சரின் கேள்விக்குப்
பதிலளிக்காமல்,
_ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார்_ *"ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே,''*
என்றார்.

மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது.. _எனினும் அரச கட்டளையாயிற்றே!_ _அதை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர்.._

*ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம் இருக்கவில்லை.*
*ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது.*

புலித் தலைக்கு அலைந்தனர்.
*அது ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது.*
_அன்றுதான் அவன் ஒரு புலியை வேட்டையாடியிருந்தான்._

_மனிதத் தலைக்கு எங்கே போவது?_ _*கடைசியில் சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர்..*_

மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், *"இம்மூன்றையும் சந்தையில் விற்று வாருங்கள்.''* என்றார்.

_மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவன் திணறினான்._

*ஆட்டுத் தலை அதிகச் சிரமமின்றி விலை போனது.*

_புலியின் தலையை வாங்க ஆளில்லை._ _பலர் அதை வேடிக்கைத் தான் பார்த்தனர்._
*_கடைசியில் ஒரு வேட்டைப் பிரியர் அதனை தன் வீட்டில் அலங்காரமாக மாட்டி வைக்க வாங்கிக்கொண்டார்._*

_மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம் அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின் வாங்கியது._
*ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை..*

அரண்மனை திரும்பிய அமைச்சர் *ஆட்டுத் தலை உடனே விலை போனதையும்,* *_புலித்தலை சற்றுச் சிரமத்துடன் விலை போனதையும்,_* *மனிதத் தலையை வாங்க ஆளில்லை..* என்பதையும் தெரிவித்தார்.

*"அப்படியானால் அதை யாருக்காவது இலவசமாகக் கொடுத்து விடுங்கள்!''* என்றார் அசோகர்.

*இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை.*

இப்போது அசோக மன்னர் கூறினார்...
*"பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய்விட்டால், இந்த உடம்பு கால் காசுகூடப் பெறாது.*
*_இலவசமாகக் கூட இதனை யாரும் தொடமாட்டார்கள்._*
*இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது!*
_*செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும்.*_
*_ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் ஞானிகள்._*
*அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு?* *_சொல்லப்போனால் அதுதான் ஞான வாயிலின் முதல் படி! '_*
என்றார்.

*தன் தவறை உணர்ந்தார் அமைச்சர்..*


*பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை.*

Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. Mam ippo kandippa tet certificate pathiya venduma yen mam

  ReplyDelete
 3. Hi admin sister tet certificate register pannunga nu ellathiliyum mrg varuthu ithanala use iruka.already ithey news 2016 layum vanthuthu but register panna oru use hmm illa enpathu unmai.unka opinion enna

  ReplyDelete
 4. Dear Unknown friends..

  Edhukkum register panni vachukonga fri, because incase DMK vandhuta adhuku mark nu sonnalum soluvanga..

  ReplyDelete
 5. Admin mam ippo register panna intha year dhane seniority fix pannuvaanga, passed year ah seniority fix pannuvaanga ,nan doubt la dhane idha ketgirane mam

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிந்தனைச் சிதறல்..

மனம் ஒருமுகப்பட.. *காற்று ஒருமுகப்பட புயலாகிறது! மேகம் ஒருமுகப்பட மழையாகிறது.!  நீர் ஒருமுகப்பட நதியாகிறது!  நதி ஒருமுகப்பட கடலாகிறது!  மனம் ஒருமுகப்பட வெற்றி உருவாகிறது!  உங்களைக் கையாள மூளையைப் பயன்படுத்துங்கள்! மற்றவரைக் கையாள இதயத்தைப் பயன்படுத்துங்கள்!  இதயத்தைக் கவர்ந்துவிட்டு, எதைச் செய்தாலும், அது இணக்கமாகவே இருக்கும்.  வாயில் உதிரும் வார்த்தைகளை விட இதயத்திலிருந்து உதிரும் வார்த்தைகளால் அன்பு மலரும்! அன்பே ஆனந்தம் தரும்.*_ கோபம் ஒரு சுயதண்டனை, அடுத்தவர் செய்த தவறுக்கோ அல்லது அடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற நிலையிலோ நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனைதான் கோபம்!  கோபத்தில் நடிப்பிருக்கலாம்! துடிப்பிருக்கக்கூடாது!*_  *உறவுகள் கூட நிலவைப் போன்று தான்..!* *"தூரத்தில்" இருக்கும் வரை* *ரசித்துக் கொண்டாடப்படும்..!!* *எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..!* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..!!* *அன்று "வயதைப்"* *பார்த்து வந்தது..* *இன்று "வசதியைப்"* *பார்த்து தான் வருகிறது..!!* *"மரியாதை"* *செல்லும் பாதை*  *சரியானதாக இல்லாத போது..*

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல.

படித்ததில் பிடித்தது..

 கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ  நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான். கடவுள் உடனே,  “ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. ”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது,  மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்.. உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி