Skip to main content

சிக்கல்கள் இல்லாவிட்டால்..

சிக்கல்கள் இல்லாத மனிதர்களே இல்லை. சிக்கல் இல்லாத வாழ்க்கையும் இல்லை. அதேபோல தீர்வுகள் இல்லாத சிக்கல்களும் இல்லை...


ஆனால்!, நாம்தான் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. சில வேளைகளில் நாம் ஒன்றும் இல்லாத சிறு செயல்கள் கூட பெரிய சிக்கல்களாக கருதுவதுண்டு...


அதைப் பற்றியே நினைத்து, நினைத்து கலங்குவதுண்டு. ஆனால்!, அவை மிகச் சிறிய செயலாக இருக்கும். முதலில் நாம் சிக்கலுக்குள்ளேயே இருக்காமல், அதைவிட்டு வெளிவர வேண்டும்...


அதை தீர்க்கும் வழிபற்றி சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அதேபோல் உரிய சிக்கலுக்கு, உரிய காலத்தில் முடிவெடுப்பது முக்கியமானதாகும். காலம் தாழ்த்தி எடுக்கும் முடிவுகள் பயனளிப்பதில்லை...


அது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு. அந்தத் தீவு மக்களும் அப்படியே மீன் உணவை விரும்பிச் சாப்பிட, படகை எடுத்துக் கொண்டு சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடற்பகுதிக்குச் செல்வார்கள்...


அங்கிருந்து திரும்பி வர இரண்டு நாட்களாகி விடும். அக்குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் மீன்கள்தான் மிக சுவையானதாக இருக்கும். ஆனால்!, மீன் பிடித்ததும் கொண்டு வர இரண்டு நாட்களாகி விடுவதால் அந்த மீனின் சுவை குறைந்து விடும்...


மீனவர்கள் கையோடு, பனிக்கட்டிகளைக் கொண்டு சென்று அதில் பதப்படுத்திக் கொண்டு வந்தார்கள். ஆனாலும்!, மக்களுக்கு மனநிறைவு இல்லை...


அப்போது பிடிக்கப்பட்ட மீனுக்கும் பனிக்கட்டிகளில் வைக்கப்பட்ட மீனுக்கும் சுவை வேறுபடுவதை உணர்ந்தனர், இப்பொழுது மீனவர்கள், ஒரு சிறு தண்ணீர் தொட்டி ஒன்றைச் செய்து, அதில் மீன்களைப் பிடித்துப் போட்டு கொண்டு வந்தனர்…


ஆயினும், அத்தனைப் பெரிய கடற்பரப்பில் நீந்திக் கொண்டிருந்த மீன்கள், சிறிய தண்ணீர்த் தொட்டியில் இரண்டு நாட்களாக சோம்பிக் கிடப்பதினால் மீனின் சுவை குன்றிப் போவதாக மீண்டும் குறை…


இந்த சிக்கலுக்கு என்ன தீர்வு என்று ஆலோசித்தார்கள் மீனவர்கள், புதிதாக ஒரு வழி கண்டு பிடித்தார்கள்...


குட்டிச் சுறா மீன் ஒன்றைப் பிடித்து அந்தத் தொட்டிக்குள் விட்டார்கள்.இந்தச் சுறாவிடம் இருந்து தப்பிப்பதற்காக. அந்த மீன்கள் எல்லாம் அந்தத் தொட்டிக்குள் வேக வேகமாக ஓய்வின்றி நீந்திக் கொண்டே இருந்தன...


இப்பொழுது இரண்டு நாட்கள் கழித்து வந்த அந்த மீன்கள் முன்பு இருப்பதையும் விட மிகச் சுவையானதாக இருந்தது...


*ஆம் நண்பர்களே...!*


🟡 *நாம் வாழ்கின்ற வாழ்க்கையும் அப்படித்தான். வாழ்க்கையை சுவைக்க கவலைகளோடே இருக்கக் கூடாது...!*


🔴 *சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். சிக்கல்கள் என்கிற சுறா இருந்தால் மட்டும்தான் வாழ்க்கை என்ற மீன்கள் சுவையானதாக இருக்கும்...!!*


⚫ *சிக்கல்கள் இல்லாவிட்டால் நாம் ஓட மாட்டோம், சோம்பியேதான் கிடப்போம், சுறுசுறுப்பாக ஓடி வாழ்க்கையை சுவையானதாக மாற்றுவோம்...!!!*



Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. மேலே ஆகாசம் கீழே பூமி நடுவுலே ஆடுது வாழ்க்க இதுல Bless க்கு எங்கம்மா?

    ReplyDelete
    Replies
    1. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

      Delete
    2. ஏதோ அவங்க ஒரு நல்ல வார்த்தை சொல்ராங்க அதுல என்ன நக்கல் உங்களுக்கு எல்லாம்

      Delete
    3. Yes. Some people are fools

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
    5. This comment has been removed by a blog administrator.

      Delete
    6. Delete pani seruppala adichutangoooo😆😆😆😆😆😆😆😆😆😆

      Delete
    7. இது தேவையா 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

      Delete
  3. #BREAKING | அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 வயதில் இருந்து 60 வயதாக உயர்த்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு

    ReplyDelete
  4. #BREAKING | 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்

    - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

    ReplyDelete
  5. Tet Posting ku sangoooooo ooooooohhhhh thana idiot govt and palanisamy

    ReplyDelete
    Replies
    1. பழனிசாமி நீ நெனைக்கிறது நடக்காது

      Delete
  6. 2013 டெட் டில் பாஸ் செய்து பணிக்காக காத்திருந்த தருணம் போய் இப்பொழுது மாதம் சம்பளம் கிடைக்குமா என்று காக்க வச்சிடிங்களாடா என்ன பண்ணுவது என்று வழி தெரியாமல் வாழ வச்சிட்டிங்களடா.ஒரு 5000 ஆயிரத்தில் பொழப்பு போகிட்டு இருந்தது இப்போ அதுவும் போச்சி.என்னை போன்ற தனியார் பள்ளி ஆசிரியர்கள் நிலை.

    ReplyDelete
    Replies
    1. Y govt ku namma kannuke theriyalaiya

      Delete
    2. இந்த தடவ ஒரு ஓட்டு கூட போட கூடாது

      Delete
  7. Intha corona periodla athigama suffer anathu temperory teachers than

    ReplyDelete
  8. அழிச்சாட்டாங்க கல்வித் துறைய புத்தியில்லாத அரசு தமிழ் நாட்டின் கேடு நல்ல நிர்வாகம் கிடைக்காதது. நமது காலத்தில் மாற்றம் வர வாய்ப்பில்லை. தலைஎழுத்து இன்னும் வரும் காலம் எப்படியோ பகவானே

    ReplyDelete
  9. இத தாங்க சொன்னேன் சாவு எப்படி வந்தாலும் பொணத்துக்கு பேரு பொணம்தான்னு.இதுல நம்மள பொணமாக்குறாங்களா இல்ல இவங்க பொணமாகுறாங்கன்னு மட்டும் தெரியல

    ReplyDelete
  10. Pg trb notification stay order vangirukanga

    ReplyDelete
    Replies
    1. Stay order vaangitangala...enna reason sir?
      But entha news vararalaye
      Mam ithu vunmaiya?

      Delete
  11. முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு 40-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாது என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக தேர்வு நடந்த விட மாட்டோம்

      Delete
    2. 2019-2020 காலி பணியிடம் மறைக்கப்பட்டுள்ளது

      Delete
    3. Athaellam onnum nadakkadhu..

      Delete
    4. நீங்க யாரு நடத்த விடாம பண்றதுக்கு

      Delete
  12. ௮டுத்தடுத்த வழக்குகளைசந்திக்க வேண்டும் டீஆர்பி

    ReplyDelete
  13. Ethana case potalum 40years issue change panna matanga.. Pg exam yum kandippa nadakkum..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...