Skip to main content

TODAY'S THOUGHT..

The need, necessity and urge to achieve something will make you succeed..


ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன்! அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன்!!


அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்...


அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாது போது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!"என விவரித்தான் இளவரசன்...


மன்னர் சிரித்துவிட்டு "எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார்.உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது...


அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். "என்ன அரசே..நீங்களும்இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்றார்.


அதற்கு அரசர் நடந்ததை கூறினார். "நம் நாட்டு பூனைகள் எதற்கு லாயக்கு...? ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம்" என்றார் மந்திரி. அதேபோல் அவ் நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.


ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத்தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான். மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. "என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார்...


உடனே இளவரசர் மறித்து "சரி...எடுத்து வா உனது பூனையை" என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் "லபக்" என்று கவ்விச்சென்றது.இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். "என்ன இது அதியசம்!


ஜப்பான், பாரசீக அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்?" என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார்...


அதற்குக் காவலாளி "பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே... என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான்" என்றான்...

உடனே இளவரசருக்கு "சுரீர்" என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவெற்று தெரிய வாய்பில்லை. எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?.


ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றாள், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும்!!!

அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்!!!

உண்மைதானே..

Comments

  1. Gudmrng friends, brothers and Sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Hi ano mam and my dear frnds gud mng

    Happy to inform u all that computer instructor counselling is to be held on 2nd. Heartfelt thanks to ano mam and my frnds for the encouragement and support

    ReplyDelete
    Replies
    1. Wow that was really great and am so happy for u mam..

      U were always in touch with me, u were strong enough to face the situations even when u filed case, god has crowned u at right time..

      Keep in touch mam..

      Delete
  3. Really Our success is based on our needs / hungry. Great story.👌👌👌👌

    ReplyDelete
  4. Ellarukkum posting pottu nammala mattum deal la vittanungale in trb...😖😖

    ReplyDelete
  5. Mam pgtrb only major mattum focus panni pass pandranga ana Namma tet la ella subject laum strong a iruntha than pass panna mudium apdi pass pannium innoru exam eluthanuma avanga 11 and12 ku teacher avangalukke oru exam than ana namakku 2 exam thevaya tet um competitive exam a consider pannalam la pgtrb ya vida romba tough tet than a mam it's my opinion only mam

    ReplyDelete
    Replies
    1. Whatever u said was right, but TRT was not over night decision..

      Its because candidates only government took that decision..

      Pg competitive exam adhulaye pass panna posting kekka kudathu, TET eligibility exam adhula pass panni wait panrom posting podunganu aal aaluku case potathoda vilavu dhan TRT..

      Delete
    2. Ama mam Namma nilamaiku Karanam case mela case pottu Namma thalaila mammale manna alli kottitom ini enna than nadakkum nu pappom

      Delete
  6. கடந்த 2013,2017,2019ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் B.Ed பதிவு செய்த சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியருக்கு அரசு பணி வழங்க வேண்டும் .
    இது அனைத்து TET தேர்ச்சி பெற்றவர்களும் எப்போதாவது வேலை வாய்ப்பு உறுதி என்று அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்
    TRT EXAM நல்லதல்ல.
    அரசாங்கம் இனியாவது நல்ல முடிவை எடுக்க வேண்டும் யாருக்கும் பாதகம் இல்லாமல்

    ReplyDelete
  7. Ano mam
    Tet pass pannavankalukku enn B.Ed Employment seniority adipadaiyil posting podaloma, why govt next TRT EXAM vaikiranga

    ReplyDelete
    Replies
    1. Sir..

      Andha method ellam neriya suggest panniyum endha method vandhalum oru group case poda ready ah irupanga, adhan common ah exam nu GO la ye potrukangala sir.

      Delete
    2. Theva illama case podravangala court 1 lakh fine potta yarum poda mattanga court eppaum soldra mari arasin kolkai mudivukku utpattathu nu sollittu polam

      Delete
  8. ஜனவரி 15 க்கு முன்பு trt or எந்த அறிவிப்பும் வந்தால் உண்டு. இல்லை எனில் எதுவும் நடக்க வாய்ப்பு இல்லை

    ReplyDelete
  9. ஜனவரி 12, 2021 ல் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி அவர்கள்

    ReplyDelete
  10. January 2013 batch Ku tet posting confirm solranga unmaiya mam... S சட்டமன்ற உறுப்பினர் கிட்ட சைன் வாங்கி cm ku send panitanga lam...

    ReplyDelete
    Replies
    1. Sattamandra urupinara??? Inga CM sign pannalae onnum vela agathu, adhu just petition avlo dhan..

      Delete
    2. மதிப்பிற்குரிய Unkown அவர்களே அது சட்டமன்ற உறுப்பினர் கையொப்பம் இல்லை அமைச்சரவை ஒப்புதல் என்பதாக இருக்கும் எந்த ஒரு அரசு அறிவிப்பும் முறைப்படுத்த அமைச்சரவை ஒக்புதல் தேவை

      (ஒவ்வொரு மாதமும் அந்த மாதத்தின் கடைசி புதன் அன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறும்)

      ஆனால் நீங்கள் கூறுவது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை பொறுத்து இருந்து பார்ப்போம்

      Delete
    3. Correct than sir amaichar oputhal than antha copy antha channel katinargal

      Delete
    4. Athula Kalvi amaicharuku sattamantra urupinar parinthuraitha mathiri thana katturanga

      Delete
  11. கள்விகதிர் channel la potrunga

    ReplyDelete
  12. Chemistry 4 Monday join panranga

    ReplyDelete
  13. Chemistry 4 Monday join panranga mam

    ReplyDelete
    Replies
    1. Konjam candidates select panni order kudupanga sir.. Kandippa 2013 ku matum order ellam chanceless..

      Delete
    2. Ano mam
      Konjam candidates select panni order kudupangala?
      Tet ikka?

      Delete
    3. Ila vino sir, chemistry candidates ku sonen..

      Delete
  14. Mam go 149 ethukku appear agala nu ethuvum thagaval therinjatha mam

    ReplyDelete
  15. Pg pending subjects list inaiku poduvangala mam

    ReplyDelete
    Replies
    1. Innoru cv ku chance irukunu sonanga for those pending subjects..

      Delete
  16. ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று ஏதேனும் தகவல் வெளியிடுமா என பார்ப்போம்

    ReplyDelete
  17. Cbse exam start may 4 to june 10.....
    Tn election before May 4....
    Election April la irukum pola....feb 3rd week date solliduvanga...
    Jan end kula trb notification varanum .....

    ReplyDelete
    Replies
    1. January fist week appram mid, apparam last week appuram february last week exam cansel

      Delete
  18. PSS sir surely pg before election expect pannalama?

    ReplyDelete
    Replies
    1. Sir pg kandipa varuthu.....exam before or after election nu terila...but notification exam date announce panrathukulla varum....

      Delete
  19. சின்ன சந்தேகம் 40 வயது மேல் Tet எழுத தகுதி இல்லை என்றால் PG தேர்வுக்கும் 40 வயது உள்ளவர்கள் தேர்வு எழுத முடியாது தானே.

    ReplyDelete
  20. சண்முகம் சார்.
    January tet posting poda vaipu ullatha sir

    ReplyDelete
  21. Chemistry posting will be kept pending for 15days as per court order..

    ReplyDelete
  22. Replies
    1. கேஸ் போட்டே வீணா போனது நம்மளா தான் இருப்போம்

      Delete
  23. Mam and all of my friends in this blog,wish u all a very happy New year 2021.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here