Skip to main content

2018ம் ஆண்டு TET தேர்வே நடக்கவில்லை - ஆசிரியர்கள் நியமனம் குறித்து அமைச்சர் அறிவிப்புக்கு தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் கண்டனம்.

 


2018 ம் ஆண்டு தகுதி தேர்வே நடத்தாமல் , ஆசிரியர் நியமனம் நடைபெறும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளது கேலிக் கூத்தாக உள்ளது என தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது. 

கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று முன்தினம் கோபிச் செட்டிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் , 2018 ல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வழக்கம் போல் வெளியிட்டார். அமைச்சரின் அறிவிப்பை கேட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். காரணம் கடந்த 2018 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வோ அல்லது முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வோ தமிழகத்தில் நடைபெறவில்லை.

அமைச்சரின் அறிவிப்பு அர்த்தமற்று உள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து , 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்க மாநில ஒருங் கிணைப்பாளர் இளங்கோவன் கூறுகையில் , 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று ஏறக்குறைய 80 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த ஏழாண்டுகளாக அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம் . இரண்டாண்டுகளுக்கு முன் பள்ளிகல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு வாரத்தில் பணி வழங்கப்படும் என கூறினார். ஆனால் இது வரை எந்த பணி நியமனமும் மேற்கொள்ளவில்லை. இதை தவிர இவர் அறிவித்த பல அறிவிப்புகள் முன்னுக்குப்பின் முரணாகவே இருந்து வருகிறது. 


இவ்வாறு இருக்கையில் , தற்போது 2018ம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு ஓரிரு நாளில் பணி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருப்பது கேலிகூத்தாக உள்ளது. ஏனென்றால் 2018ம் ஆண்டு ஆசிரியர் தகு தித்தேர்வோ நடத்தப்பட வில்லை என்பதுதான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார் .

Comments

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...