'நம் பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது, இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்' என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
'நீட்' தேர்வு அச்சம் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், இன்று நீட் தேர்வு நடந்து முடிந்தது. நாடு முழுவதும் 3,842 மையங்களில் 15.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
தமிழகத்தில் 14 நகரங்களில், 238 தேர்வு மையங்களில், 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.இந்நிலையில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கை: நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப்போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதை போல அவலம் எதுவுயில்லை.
கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில் கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாக கொண்டு வருகிறது.
ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக்
கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.
தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்து போன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப்பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள் அனல் பறக்க விவாதிப்பார்கள்.நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது.
அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்
கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றுலும் அடித்து கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது. இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்க வேண்டும்.
நமது பிள்ளைகளின் தகுதியையும் திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்ககூடாது. இந்த நியாயமற்ற தேர்வுகளுக்கு அவர்களைத்
தயார்ப்படுத்த துணைநிற்பது போலவே, மாணவர்கள் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளவும் தயார்படுத்த வேண்டும்.
அன்பு நிறைந்த குடும்பம், உறவு,நண்பர்கள் சூழ்ந்த அற்புதமான இந்த வாழ்விற்கு முன்பு தேர்வர்களின் முடிவுகள் அற்பமானது என்பதை உணர்த்துவது முக்கியம்.மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டுமே காணிக்கையாக கேட்டார்கள்.
நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் கடந்து படித்து முன்னேறுகிறவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்.
ஒரேநாளில் நீட் தேர்வு மூன்று மாணவர்களை கொன்று இருக்கிறது, இன்று நடந்ததே நேற்றும் நடந்தது. இனி நாளையும் நடக்கும். நாம் விழிப்புடன் இல்லாமல் போனால் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும். அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது.
சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்... இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
சூர்யா நீங்க கெத்து 🙏
ReplyDeleteWe should have reacted for tet also. There is no big difference between tet and neet
ReplyDeleteTet 2020 வந்தால்
ReplyDelete2013 90 and above
2017 90and above
2019 90 and above
எல்லோரும் சேர்ந்து stay
வாங்கனும்
இல்லையெனில்
மூன்று நாம்தான்
நாம் எவ்வளவு படித்தாலும்
120 தாண்ட முடியாது
அரசு ஏதோ திருட்டு
வேலை செய்கிறது
இவ்வளவு 90 above இருக்கும் பொழுது
மறுபடியும் ஒரு தேர்வு
உஷாராக இல்லையெனில்
நடுரோட்டில்
Tet 2020 வந்தால்
ReplyDelete2013 90 and above
2017 90and above
2019 90 and above
எல்லோரும் சேர்ந்து stay
வாங்கனும்
இல்லையெனில்
மூன்று நாம்தான்
நாம் எவ்வளவு படித்தாலும்
120 தாண்ட முடியாது
அரசு ஏதோ திருட்டு
வேலை செய்கிறது
இவ்வளவு 90 above இருக்கும் பொழுது
மறுபடியும் ஒரு தேர்வு
உஷாராக இல்லையெனில்
நடுரோட்டில்
Tet 2020 வந்தால்
ReplyDelete2013 90 and above
2017 90and above
2019 90 and above
எல்லோரும் சேர்ந்து stay
வாங்கனும்
இல்லையெனில்
மூன்று நாம்தான்
நாம் எவ்வளவு படித்தாலும்
120 தாண்ட முடியாது
அரசு ஏதோ திருட்டு
வேலை செய்கிறது
இவ்வளவு 90 above இருக்கும் பொழுது
மறுபடியும் ஒரு தேர்வு
உஷாராக இல்லையெனில்
நடுரோட்டில்
Tet 2020 வந்தால்
ReplyDelete2013 90 and above
2017 90and above
2019 90 and above
எல்லோரும் சேர்ந்து stay
வாங்கனும்
இல்லையெனில்
மூன்று நாம்தான்
நாம் எவ்வளவு படித்தாலும்
120 தாண்ட முடியாது
அரசு ஏதோ திருட்டு
வேலை செய்கிறது
இவ்வளவு 90 above இருக்கும் பொழுது
மறுபடியும் ஒரு தேர்வு
உஷாராக இல்லையெனில்
நடுரோட்டில்
Tet 2020 வந்தால்
ReplyDelete2013 90 and above
2017 90and above
2019 90 and above
எல்லோரும் சேர்ந்து stay
வாங்கனும்
இல்லையெனில்
மூன்று நாம்தான்
நாம் எவ்வளவு படித்தாலும்
120 தாண்ட முடியாது
அரசு ஏதோ திருட்டு
வேலை செய்கிறது
இவ்வளவு 90 above இருக்கும் பொழுது
மறுபடியும் ஒரு தேர்வு
உஷாராக இல்லையெனில்
நடுரோட்டில்
Comment podung a I'll a post a mathunga admin
ReplyDelete