அதன்படி என்ஜினீயரிங் படிப்புகளில் உள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்கலாம் என்று ஏ.ஐ.சி.டி.இ அறிவித்தது. பல்கலைக் கழகங்கள் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்காக அங்கீகாரத்தை ஜூலை 15-ந்தேதிக்குள் வழங்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கல்லூரி தேர்வுகளை நடத்துவது குறித்து ஆராய தமிழக அரசு குழு ஒன்றை நியமித்துள்ளது
உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உள்ளிட்ட 11 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். கொரோனா பொது முடக்கத்தால் தடை செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது பற்றி இக்குழு ஆராய உள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்கள்படி, தேர்வுகளை நடத்துவது குறித்து இந்தக் குழுவினர் அரசுக்கு பரிந்துரை வழங்க உள்ளனர்
Comments
Post a Comment