Skip to main content

வீட்டில் இருந்து பணி புரிவதால் 67% இந்தியர்கள் தூக்கமின்மையால் அவதி




இந்தியர்கள் 67 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணி புரியும் சூழ லால் தூக்கத்தை தொலைத்து நிம்மதியின்றி கடும் நெருக்கு தலுக்கு ஆளாகியிருப்பது தெரிய வந்துள்ளது.
பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரியும் வர்த்தக மேலாளரான அன்கீத் சிங் (42) வீட்டிலிருந்து பணி புரிவது என்பது மிகவும் சிரமமானதாக உள்ளதாகக் கூறியுள்ளார்.இதற்குமுன் வீட்டிலிருந்து அலுவலக பணி புரிவது என்ற சிந்தனையே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு தொடங்கியதிலிருந்து தனக்கு ஓய்வு என்பதே இல்லை என்று குறிப்பிடும் அவர், தினசரி காலை 5 மணிக்கு எழுந்துவிடுவதாகவும் அலுவலகப் பணிகளை முடித்து லேப்டாப்பை மூடும்போது இரவு 10 மணி ஆகிவிடுவதாகவும் தெரி வித்துள்ளார்.
வழக்கமாக 7 மணிக்கு பணிகளை முடித்து வீடு திரும்பி விடும் அவர் தற்போது இரவு 10 மணி வரை போராட வேண்டியிருப்பதாகக் குறிப்பிடு கிறார். கடந்த 20 நாட்களுக்கும் மேலான இந்த வேலைப் பளு வினால் ஏற்பட்ட உளைச்சலில் இருந்து விடுபட தற்போது உளவி யல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வருகிறார்.
வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்வதில் பெரும்பாலானோர் மிகப் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.இதற்குக் காரணமே பணிகளை சரிவர கையாளத் தெரியாததுதான். சமீபத்தில் பலர் தன்னிடம் உளவியல் ஆலோசனை பெற்று வருவதாகக் கூறுகிறார் மன நல மருத்துவர் ஸ்வேதா சிங்.
இவர்களில் பெரும்பாலானோர் தூக்கமின்மையால் பாதிக்கப்பட் டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் சமீபத்தில் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில் 67 சதவீத இந்தியர்கள் தற்போது பணிப்பளு காரணமாக இரவு 11 மணிக்குப்பிறகுதான் தூங்கச் செல்வதாகத் தெரிவித் துள்ளது.
ஊரடங்கு முடிவுக்கு வந்தால்தான் தாங்கள் நிம்மதி யாகத் தூங்க முடியும் என்று 81 சதவீதம் பேர் கருத்து தெரிவித் துள்ளனர். சுமார் 1,500 பேரிடம் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. ஊரடங்குக்கு முன்பு வரை இரவு 11 மணிக்கு முன்பே தூங்கச் சென்றுவிட்டதாக 46 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.தற்போது 11 மணிக்கு முன்பு தூங்கச் செல்வதாக 39 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
25 சதவீதம் பேர் இரவு 12 மணிக் குத்தான் தூங்கச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர். 35 சதவீதம் பேர் 12 மணிக்குப் பிறகுதான் தூங்கச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர். 40 சதவீதம் பேர் பின்னிரவில்தான் தூங்குவதாகத் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் தொற்று காரணமாக பலவித நெருக்கு தல் உருவாகியுள்ளதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக தங் கள் வேலை மீதான ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டதாக பல ரும் தெரிவித்துள்ளனர்.குடும்பத் தினரைக் காக்க வேண்டிய சூழல் மிகுந்த உளச்சலை ஏற்படுத்தி யுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் பலரும் தங்களது தூக்கத்தை தொலைத்துவிட்டதாக புலம்புகின்றனர். நன்றி இந்து தமிழ் திசை 16/04/2020

Comments

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...