Skip to main content

Stay at home..

கிட்டத்தட்ட அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப் போயிட்டாங்க.

இனிமேல் உங்களை கை கழுவு ன்னு எல்லாம் யாரும் சொல்லப் போறது இல்லை.

மூன்றாவது கட்ட ஆட்டம் ஆரம்பம் ஆயிடுச்சு.

தனியார் மருத்துவமனையில் டெஸ்ட் பண்ண இப்ப அனுமதி கொடுத்து இருக்காங்க. இன்னையில் இருந்து யாருக்கும் வெளி நோயாளிகள் அப்பாயின்மெண்ட் கிடையாது.

காரணம் இல்லாமல் நீங்க எந்த மருத்துவ மனை படியையும் மிதிக்க முடியாது. கார்ப்பரேட் ஆபிஸ் மாதிரி பல கேள்விகள் கடந்து தான் உள்ளே வரமுடியும்.

அப்போல்லோ வில் இரண்டு ப்ளோர் கொரோனா வார்டுக்கு ஒதுக்கப் பட்டு இருக்கிறது.

அரசாங்க மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகள் அவசரமாக ஏற்படுத்தும் பணி நடந்து கொண்டு இருக்கிறது.

இதற்கு மேல் உங்களை காத்து கொள்ளும் ஆயுதம் உங்கள் கைகளில் மட்டும் தான் இருக்கிறது.

#stay_at_home

நீங்களும் யார் வீட்டுக்கும் போகாதீங்க. உங்க வீட்டுக்குள் யாரையும் வர விடாதீங்க.

வீட்டுக்குள் ஆளுக்கு ஒரு மூலை செலக்ட் செய்து படுக்கை போட்டுக்கோங்க.

பெரியவர்களுக்கு ஒரு அறை கொடுத்து அவங்களை அந்த அறைக்குள் இருந்து வெளியே வர விடாதீங்க. அங்கேயே நடமாட்டம் கட்டுப்படுத்துங்கள்.

இருபது வயது ஆட்களை அறுபது வயது ஆட்கள் கூட சேர விடாதீங்க.

அறுபது வயது ஆட்களை நாம காப்பாத்தி ஆகனும்னா வீட்டுக்குள் இதை எல்லாம் செய்து தான் ஆகனும்.

இன்னைக்கு இருந்து அத்தியாவசிய தேவைக்கு தவிர மீதி யாரும் வெளியே வர நினைச்சு கூட பார்க்காதீங்க.

வெளியே எந்த விஷயம் நடந்தாலும் எட்டிப் பார்க்காதீங்க. குதிரைக்கு கடிவாளம் கட்டின மாதிரி வீடு விட்டு வெளியே போகக் கூடாதுன்னு மட்டும் தான் எண்ணம் இருக்கனும்.

அரசாங்கம் சொல்லி அதை எல்லாம் செய்ய ரெம்ப லேட் ஆயிடும். பொறுப்புள்ள குடிமக்களாக நாம நாளைக்குப் போடுற தடை உத்தரவு ஒரு மாத காலம் கடைப்பிடிப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்ளுவோம்.

இது மட்டும் தான் நம் கையில் இருக்கும் ஒரே ஆயுதம்.

இந்த ஒரு மாத காலத்தை தவற விட்டு தான் இத்தாலி இன்று இந்த நிலையில் உள்ளது.

இதைக் கடைப்பிடித்து தான் சவுத் கொரியா நோயாளிகளை குறைத்து இந்த நோயை வென்று உள்ளது.

இனிமேல் நமது வீட்டில் உள்ளேயும் தொடர்புகள் எல்லாம் இணைய வழி நடக்கட்டும். இணைய வழி தொடர்புகள் உறுதி செய்வோம்.

பிஎஸ்என்எல் ஒரு மாத காலத்திற்கு இலவச இணைய வழி சேவை கொடுத்து உள்ளது.

இணையம் பயன்படுத்துவோம்

நலமாக இருப்போம்

#stay_at_home

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Stay at home friends, thats the only medicine which can save us from this corona.. Trust almighty, stay at home, stay safe..

    ReplyDelete
    Replies
    1. Trb ஆ விட கொடுமையான நோயா இருக்கும் போல

      Delete
  3. வணக்கம் தல

    ReplyDelete
  4. Iruka koduma pathathunu intha koduma vera

    ReplyDelete
  5. Mam apo trt avlo thana mam

    ReplyDelete
    Replies
    1. Trb ku eppavume corona dhana.. TRT varum mam..

      Delete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..