Skip to main content

கண்ணீரின் வலி..

இந்த ஒற்றை புகைப்படம்  பல லட்சம் மக்களின் வலிகளை பிரதிபலிக்கிறது.

*இத்தாலியின் அதிபர் . மேம்படுத்தபட்ட சுகாதார கட்டமைப்பு இருப்பினும் வைரஸை கட்டுபடுத்த இயலாமல் செய்வதறியாது கண்ணீருடன் நிற்கின்றார்.*

இத்தாலியில் நிமிடத்திற்கு ஒருவர் பாதிப்பும் , சராசரியாக 5 நிமிடத்திற்கு ஒரு இறப்பும் நிகழ்ந்து வருகிறது.

அறிவியலும் செய்வதறியாது விலகி நிற்கிறது. என்ன செய்ய போகிறோம் என வல்லரசு நாடுகளே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்த நிலையில் மக்களது ஒத்துழைப்பு மட்டுமே நிலையை மட்டுபடுத்தும். 

கரோனோவால் பாதித்த பெண் தெரிந்தும் எனக்கு வந்தது பிறருக்கும் வர வேண்டும் என விமானம், தொடர்வண்டியில் பயணித்து பரப்பியது நடந்த நிகழ்வு.

இதுவும் ஒரு மன நோயே. நான் துன்பப்படும் போது மற்றவர் எப்படி மகிழ்வாய் இருக்கலாம் என்பது.

ஞாயிறு ஊரடங்கு என்றதும் சனி அன்று மக்கள்  இரட்டிப்பு கூட்டமிட்டு கூடி  நோய் பரவல் வீதத்தை அதிகரித்ததும் அறிந்ததே.

இவர்களுக்கும் அந்த பெண்ணிற்கும் மனதளவில் பெரிய வித்தியாசம் இல்லை.

மாணவர்களுக்கு விடுமுறை விட்டது பாதுகாப்பிற்கு. ஆனால் அதனை சுற்றுலா போல ஊர் சுற்றி கொண்டாடி மகிழ்வது வருத்தம் தருகிறது என சுகாதார துறை அமைச்சர் வருந்தியது கண்  முன் எட்டி செல்கிறது.

பாதித்த 3 லட்சம்  பேரில் 13 ஆயிரம் பேர் இறப்பு . மீதமுள்ள 2.8 லட்சம் மக்கள் நோய் பரப்பும் இடை உடலங்களாக உள்ளனர்.

பரவும் வைரஸ் நம் ஊருக்கெல்லாம்  வர போகுதா என அதிமேதாவி வசனம் பேசி பொறுப்பின்றி விழிப்புணர்வின்றி நடப்போர் விழித்து கொள்ளுங்கள். உங்களால் உங்கள் ஊரில் பெரும் பாதிப்பு ஏற்படலாம்.

வரும்  நாட்கள் மிக முக்கியமானது . 2வது Stage ல் உள்ள நாம் 3 வது 4வது Stage செல்லாமல் தடுப்பதும் நம் விழிப்புணர்விலே உள்ளது.

நம் வீட்டில் உள்ளவர்களுக்காவது தேவையற்ற பயணம் தவிருங்கள்.

அதிபரின் கண்ணீர் ஒட்டு மொத்த மனித சமூகத்திற்கான அழுகுரல்.

இறந்தவர்களை தனிமைபடுத்தி புதைக்கவே இங்கு இடம் இல்லை  என வருந்தும் இத்தாலி நாட்டு அதிபர்  குரல் நிகழ்வின் முக்கியதுவத்தை உணர்த்துகிறது.

நோய் துவங்கிய முதல் வாரத்தில் 200 பேர் மட்டுமே பாதித்த இத்தாலியில் தற்போது நேற்று மட்டும் 750 இறப்பை கடந்துள்ளது. நோய் பிறப்பிடம் சீனாவையும் மிஞ்சிய பரவல் .

வெயில் அதிகம் இங்கு பரவாது என்பது மடமை. வெப்ப நிலை பரவுதல் வேகத்தை வேண்டுமானால் மட்டுப்படுத்தும். ஆனால் பரவாமல் தடுக்காது.
வெப்ப நிலை அதிகமான பல நாடுகளில் வைரஸ் தீவிரமாய் பரவி வருவது பார்த்து வருகிறோம்.

மருந்தே கண்டறியா நோயிற்கு மருந்து தனிமைபடுதல் மட்டுமே. 
மனித உயிரினத்தை காக்க தற்போது இந்திய மக்கள் நிச்சயம் அரசிற்கு துணை நிற்க வேண்டும்.

நோயிற்கு ஆட்பட்டு தனிமைபடுத்தபடும் போது ஆகப்பெரிய வெறுமையை உணர்வதை தவிர்க்க இன்று வீடுகளில் தனிமைபட்டிருப்பது சிறந்தது. 

வீர வசனம் பேசுவதை தவிர்த்து சமூக பரவலை முறியடிக்க வேண்டிய தருணம் இது. கோரோனா பரவும் சங்கிலியை உடைப்பது மிக அவசியம்.

பல முறை இந்திய முன்னெடுப்புகள் உலகிற்கு பாடமாக அமைந்துள்ளது. இம்முறையும் நம் கட்டுபாடுகளால் உலக நாடுகளுக்கு உணர்த்தி வைரஸிடம் இருந்து மீண்டு வர வழி சொல்லுவோம்.

நாளை காலை 5 மணியுடன் கடமை முடிந்து விட்டது இனி பழைய படி வாழ்வை நகர்த்தலாம் என பயணிக்க  எண்ணினால் அது முட்டாள்தனம். வைரஸை மெது மெதுவாய் நீக்கி இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட கடைசி மனிதனை  குணப்படுத்தும் வரை இந்த உயிரி போர் ஓயாது.

அறிவியலும் மருத்துவமும் ஒரு நாள் துணை வரும் எனும் நம்பிக்கை உள்ளது.
 அது எட்டும் நாள் வரை தனித்து நிற்போம்.
மனிதம் என்ற உணர்வால் இணைந்து  நிற்போம்.

அரசிற்கும் - இதற்காக களத்தில் உயிரை பணயம் வைத்து போராடும் மனிதர்களுக்கும் முழுவதுமாக துணை நிற்போம்.

இத்தாலி அதிபரின் கண்ணீரின் வலி உணர்ந்து மனித சமூகத்தை மீட்டு செல்வோம் விழிப்புணர்வால் ...


Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. வணக்கம் தல

  ReplyDelete
 3. அட்மின் மற்றும் அணைத்து புத்தகசாலை நண்பர்களும் பாதுகாப்பாய் இருக்க இறைவனிடம் பிராத்திக்கிறேன்

  ReplyDelete
 4. Take care admin mam and friends

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

  தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.   தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு   தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால் , தாள்- I ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளது . மேற்படி கணினிவழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ளவிரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . இது குறித்த அறிவிக்கை , தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் .

படித்ததில் பிடித்தது..

                 சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது. நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள். அதற்க்கு அவர் சொன்ன விடை - “சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”. சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.  அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.  தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..