Skip to main content

நேர்மறை சிந்தனை..

ஒரு சிறுவனுக்கு தப்பு பண்ணா சாமி கண்ணை குத்திடும் என்று சொல்லி கொடுக்கப்படுகிறது. அது உண்மையா பொய்யா என கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அந்த சிறுவனுக்கு வருகிறது.

ஆனாலும், ஒரு வேளை உண்மையாக இருந்து சாமி கண்ணை குத்திவிட்டால் ..என பயந்து அதை பரிசோதித்து பார்க்காமல் இருக்கிறான்!

பள்ளியில் அவனுடைய நண்பன் ஒருவன் ஆபீஸ் ரூமில் இருந்து பேனா திருடுகிறான். இதை இவன் கவனிக்கிறான். அவன் கண்ணை சாமி குத்துகிறதா என பார்க்கிறான் ...குத்தவில்லை!

வீட்டில் போய் ஏன் குத்தவில்லை என்று கேட்கிறான், உடனே குத்தலன்னாலும் கொஞ்சநாள் கழிச்சி குத்திடும் என்று பதில் சொல்ல, கொஞ்சநாளைக்கு அவனை பின்தொடர்ந்து பார்க்கிறான்.

அவனுக்கு ஒன்றுமே ஆகவில்லை!

வீட்டில் சொல்லி கொடுக்கப்பட்டதின் மேல் நம்பிக்கை போய்விடுகிறது. அவனை போல் இவனுக்கும் பேனா எடுக்க வேண்டும் என்று ஆசை வருகிறது. அதேபோல் ஆபீஸ் ரூமில் இருந்து
பேனா திருடுகிறான்!

இவனை வேறு ஒருவன் பார்த்து தப்பு பண்ணா சாமி கண்ணை குத்திடும் என்று சொல்கிறான்,
அதெல்லாம் சும்மாடா, அவனையும் ஒண்ணும் பண்ணல இப்போ என்னையும் ஒண்ணும் பண்ணல, உனக்கு வேணும்னா நீயும் போய் எடுத்துக்கோ என்று சொல்ல அவனும் திருட ஆரம்பிக்கிறான்!

இது எதிர்மறை சிந்தனையின் விளைவு!

அதே சிறுவனிடம் நேர்மறையாக சொல்லி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று பார்ப்போம்.

நல்லது பண்ணா நல்லது நடக்கும் என்று சொல்லிக் கொடுப்பதாக வைத்துக்கொள்ளலாம்.

அவன் சாலையில் பள்ளிக்கு போய்க்கொண்டு இருக்கிறான். வீட்டில் சொன்னதை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. இதை செய்வதில் எந்த பயமும் இல்லை. சாலையின் நடுவே ஒரு கல் இருக்கிறது. எடுத்து ஓரமாய் போடுகிறான்!

பள்ளியில் பரிட்சை பேப்பர் கொடுக்கப்படுகிறது. வழக்கத்தை விட ஏழு மார்க் அதிகமாக வாங்கி இருக்கிறான். எப்படி உனக்கு ஏழு மார்க் அதிகமா வந்துச்சி என்று நண்பன் கேட்கிறான்.

நான் எப்பவும் போல தான் எழுதினேன் என்கிறான். பிறகு யோசித்து காலையில் ஒரு நல்லது பணணேன். ஒருவேளை அதுனால மார்க் அதிகமா கிடைச்சிருக்கும் என்று சொல்கிறான்.  அவனும் கூட நம்புகிறான்.

அவன் அடுத்த நாள் எதாவது நல்லது செய்ய வேண்டும் என்று சாலையில் கல் இருக்கிறதா என்று
தேடுகிறான். அப்படி எதுவும் இல்லை. சாலை ஓரத்தில் ஒரு நாய்க்குட்டி விளையாடிக் கொண்டிருக்கிறது அதனிடம் போய் தன் பாக்கெட்டில் இருந்த பிஸ்கட்டை போடுகிறான்.

அடுத்த நாள் எதேச்சையாக சாலையில் ஒரு ரூபாய் கிடைக்கிறது. நாய்குட்டிக்கு பிஸ்கட் போட்டதால் தான் ஒரு ரூபாய் கிடைத்திருக்கிறது என்று நம்புவதோடு அதை எல்லோருக்கும்
சொல்ல எல்லோரும் அப்படி செய்துபார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

இதை எல்லோரிடமும் சொல்கிறான். தினமும் எதாவது நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்று உறுதியாக நம்புகிறார்கள்; நல்லது செய்துவிட்ட பின் நடக்கின்ற சின்னச்சின்ன விஷயங்களை கூட நல்லது செய்ததால் நடந்த நன்மைகள் என்று கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். தொடர்ந்து நல்லது செய்வதை பழக்கமாக்கி கொள்கிறார்கள்!

மற்றவர்களுக்கும் நல்லது செய்வதை அவர்களை அறியாமல் பரப்பி விடுகிறார்கள்.

இது நேர்மறை சிந்தனை!

இன்றைய காலகட்டத்தில் நிறைய எதிர்மறை சிந்தனைகளை தான் நாம் பிள்ளைகளிடம் வளர்த்துக்கொண்டு இருக்கிறோம் என்பதை சற்று நம் செயல்களை பின் நோக்கி யோசித்து உணர்ந்து கொண்டு அதை இனி திருத்திக் கொள்ளுங்கள்.

குழந்தைகளிடம் நாம் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமானது.

நல்லா படிக்கலன்னா அவனை மாதிரி கஷ்டப்படுவே என்று சொல்லாதீர்கள். நல்லா படிச்சா இவனை மாதிரி சந்தோஷமா இருக்கலாம் என்று சொல்லுங்கள்.

எனவே பிள்ளைகளின் குழந்தைகளின் மனதில் நேர்மறை சிந்தனைகளை விதையுங்கள். சமூகத்தில் சிறந்த மனிதனாக உயரும், உயர்த்தும் நேர்மறை என்ற மந்திரத்தை அவர்கள் அறியாமலேயே அவர்களுக்குள் விதையுங்கள்.

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Positive thought iruntha positive life lead panalanu puriyuthu mam

    ReplyDelete
  3. Very nice motivating thought mam

    ReplyDelete
  4. இனிய காலை வணக்கம் அட்மின் சகோதரி. நேர்மறை எண்ணங்கள் வாழ்வில் இன்றியமையாதவை என்பதை விளக்கும் கருத்து. அதை விட எதிர்மறை எண்ணங்கள் விளைவிக்கும் கேடுகளும் அவற்றின் விளக்கமும் அருமை.

    ReplyDelete
  5. Good Morning.. Good story for Positive thoughts....

    ReplyDelete
  6. இனிய காலை வணக்கம்


    நல்லதை நினைக்க நல்லதே நடக்கும்

    ReplyDelete
  7. சென்னை: உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையத்தில் இன்று முக்கிய ஆலோசனை நடக்க உள்ளது.
    உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக சமீபத்தில் துாத்துக்குடி மற்றும் சிவகங்கை சென்ற மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
    அப்போது தேர்தல் செலவிற்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கலெக்டர்கள் முன்வைத்தனர். அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையர் பழனிசாமி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஆணைய அலுவலகத்தில் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
    மாநில தேர்தல் ஆணைய செயலராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தின் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் தேதி; அதை அறிவிக்கும் தேதி போன்றவை இறுதி செய்யப்படும் எனவும் தேர்தல் அறிவிப்பு நவ. 24ம் தேதி வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. எப்படியோ தேர்தல் வந்தால் சரி தான்

      Delete
    2. தேர்தல் அறிவிப்பு வந்தால் pgtrb councelling நடைபெறுமா அல்லது தேர்தல் முடிந்த பின்பா ?அருள் அவர்களே

      Delete
    3. நண்பர் ராஜவேல் அவர்களே கவலை வேண்டாம் தேர்தல் அறிவிப்புக்கு முன்பு பணி நியமனமே வழங்கி விடுவார்கள்

      Delete
    4. நன்றி அருள் அவர்களே..

      தமிழ் தேர்வர்கள் வழக்கு பிரச்சனை ஏற்படுத்தும் ,பணி நியமனம் தள்ளி போகும் என்று சிலர் கூறினார்கள்.. அதனால் கேட்டேன். உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி sir..

      Delete
    5. நண்பர் ராஜவேல் அவர்களே ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வழக்கு எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை பணி நியமனம் செய்ய முடிவு செய்தால் அவர்களது பணியை முடிக்காமல் விட மாட்டார்கள் இந்த வாரம் இறுதிக்குள் இறுதி தேந்தோர் பட்டியலை எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்

      Delete
  8. காலை வணக்கம் அட்மின் அவர்களே.

    ReplyDelete
  9. தேர்தல் கூட வந்துரும் போல தேர்வு வர மாதிரி தெரியல

    ReplyDelete
  10. *டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை*

    *டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் - உச்சநீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையம் தகவல்*

    ReplyDelete
  11. TNPSC ANNOUNCED

    Tamil nadu Animal Husbandary service Total post=1141, Last-17-12-19, Exam date=23-2-20, Qualification -B. V.SC Degree

    ReplyDelete
  12. Flash News: 30 ஆண்டு பணி முடித்த ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் . அரசாணை ஒருவாரத்தில் வெளியிடப்படும். -கல்வியமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.
    30 வருடம் பள்ளிகளில்
    பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்ற விஷயம் பரிசீலனையில் உள்ளது. ஒரு வார காலத்திற்குள் அது குறித்து அறிவிக்கப்படும் என்றார்

    ReplyDelete
  13. Any idea about TNPSC group4 cutoff marks for BC

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...