Skip to main content

2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பணி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணை எப்போது வெளியிடப்படும்?


Recruitment Board எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் 2020 ஆண்டுக்கான தேர்வு அட்டவணை (TRB Calendar 2020) தயாரித்து வருகிறது. வரும் 2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பணி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அட்டவணை டிசம்பர் மாதத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர் பணிக்கு தயாராகி வருவோர், இதை கவனத்தில் கொண்டு, அதற்கு ஏற்ப தயாராகும்படி அறிவுறுத்தப்படுகினறனர்.




தமிழக பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் பணித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 2 ஆயிரத்து 144 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதே போல், தற்போது அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2,331 உதவிப்பேராசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பப்பதிவு முடிந்துள்ளது. விரைவில் இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, காலியிடங்கள் நிரப்பப்படுகிறது.



இந்த நிலையில், அடுத்த ஆண்டு, அதாவது 2020 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பணி தேர்வுகள் குறித்த தேர்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளது. முன்னதாக, அரசு பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகளில் விரிவுரையாளர்களை நியமிக்க 2017 ஆம் ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. ஆனால், அந்த தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக குற்றசாட்டு எழுந்தது. இதனால், விரிவுரையாளர்கள் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து அரசு பாலிடெக்னிக், இன்ஜினியரி்ங் கல்லூரிகளில் விரிவுரையாளர்களை நியமிக்க எந்த தடையும் இல்லை என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, அந்த பணியிடங்களையும் சேர்த்து புதிதாக காலியிடங்கள் நிரப்புவதற்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.



அதுவரையில், தற்காலிக விரிவுரையாளர்களை நியமிக்கவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்தமாக அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் என அனைத்திலும் எத்தனை காலியிடங்கள் உள்ளது என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் சில நாட்களில் நிறைவு பெற்று விடும். இதே போல், 2020 ஆம் ஆண்டில் எப்போது, எந்த தேர்வுகள் நடத்தப்படும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரித்து வருகிறது. 2020 ஆசிரியர் பணித் தேர்வு அட்டவணை டிசம்பர் மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...