Skip to main content

அன்பளிப்பு..

“பளார் பளார் “என பலத்த அடி பலமுறை விழுந்தது அப்துல் கலாமுக்கு !

அப்போது அவருக்கு வயது 11 ; 
அடித்தவர் அப்துல் கலாமின் அப்பாதான் !

அப்பா எதற்காக தன்னை அடிக்கிறார் எனப் புரியாமல் , 
அடி விழுந்த கன்னத்தை தடவியபடி அசையாமல் நின்றார் கலாம்.

அதை அப்துல் கலாமே இப்படிச் சொல்கிறார் :

“எனது தந்தை ராமேஸ்வரத்துக்கு நாட்டாமையாக நியமிக்கப்பட்ட காலத்தில் எனக்கு 11 வயது ;
 ஒரு நாள் எனது தந்தை தொழுகைக்காக சென்று விட்டார். 

ஊரிலுள்ள ஒருவர் , ஒரு தாம்பாளத் தட்டில் ஏதோ கொண்டு வந்து அப்பாவிடம் கொடுக்க வேண்டும் என்றார்.
நான் அப்பா தொழுகைக்கு சென்று விட்டார் என்றேன். 
அம்மாவை அழைத்த போது அம்மாவும் வீட்டில் தொழுகையில் ஈடுபட்டிருந்தமையால், 
வந்த அந்த மனிதரிடம் நான் .. “அதை இங்கே வைத்து விட்டு செல்லுங்கள்.... நான் அப்பா வந்தவுடன் சொல்கிறேன்” என்றேன். அந்த மனிதரும் அவ்வாறே செய்தார்.

வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் நடந்ததை சொன்னேன். அவ்வளவுதான்.
அப்பா என்னை பளார் பளாரென்று அடித்தார்.

பின்னர் என்னை அருகில் அழைத்து அறிவுரை சொன்னார்.

அதில் அவர் திருக்குரானை மேற்கோள் காட்டி , பதவியில் இருப்பவர்கள் , பரிசுப் பொருளாக யார் எதைக் கொடுத்தாலும் வாங்கக்கூடாது .
அது பாவம்.
பதவியில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் பரிசு தருவது , 
வேறு எதையோ எதிர்பார்த்துத்தான் என்று எடுத்துச் சொன்னார்.”

கள்ளமில்லா மகனின் மனதில் பதியும்படி கலாமின் அப்பா சொன்ன அந்த வார்த்தைகள் , 
அந்தச் சின்ன வயதில் சிறுவன் கலாமின் உள்ளத்தில் சிற்றுளியால் செதுக்கிய கல்வெட்டாக பதிந்து விட்டது.

சிறுவன் பெரியவன் ஆனான்.
இந்திய நாட்டின் ஜனாதிபதியும் ஆனார்.

பதவிக் காலம் முடிந்து ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறும்போது , 
பலரது பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும் அப்துல் கலாமின் காதுகளில் வந்து விழுந்தாலும் ,
சிறு வயதில் கலாமின் அப்பா சொன்ன சில வார்த்தைகள் மட்டுமே அந்த வேளையில் அவர் காதுகளில் தாரக மந்திரமாக தனித்து ஒலித்திருக்கும் .

அப்படி என்ன சொன்னார் கலாமின் தந்தை ?

“ இறைவன் ஒருவரை ஒரு பதவியில் நியமிக்கின்றார் என்றால் அவருக்கான அனைத்தையும் ஆண்டவன் கொடுத்து விடுகிறார் என்று அர்த்தம் ;  
அதையும் விட மேலாக மனிதன் வேறு ஏதாவது எடுத்தால் அது தவறான வழியில் வந்த ஆதாயம்.”

ஆம் !
அப்பா சொன்னது அப்துல் கலாமின் காதுகளில் திரும்ப திரும்ப ஒலிக்க , 
தான் வரும்போது கொண்டு வந்த இரண்டே இரண்டு சூட்கேஸ்களுடன் 
ஜனாதிபதி மாளிகையை விட்டு புறப்பட்டு விட்டார் கலாம்.
பதவியில் இருந்தபோது தனக்கு வழங்கப்பட்ட  பரிசுப் பொருட்கள் அத்தனையையும் , 
அங்கேயே விட்டு விட்டு வந்துவிட்டார்.

“ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும், நல்ல ஒழுக்கத்தையும் விட சிறந்த அன்பளிப்பை வழங்கமுடியாது.”


Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Gdmg admin mam. Trt will come for sure mam.

    ReplyDelete
    Replies
    1. Many time's we had this kind of hope. I searched and reserched about the thing truely and lively by my self without belive on any one. At Finally I got nothing .I spent one year completely to clear TET with lot of pain and passion. One of the toughest exam in my life. Now I feeling all the effort is useless to me and my family. True is there is no vacant post for BT in school education. tears only left in my face.
      Now, I will say one to you all
      Don't believe about these kind of news.... Try for some other exams .

      Delete
  3. Good Morning Admin mam. Nice information about honourable kalam sir.

    ReplyDelete
  4. இனிய காலை வணக்கம் அட்மின் சகோதரி. அறத்தில் சிறந்த அப்துல் காலம் பற்றி அருமையான தகவல். நன்றிகள்

    ReplyDelete
  5. Bt vaccant all majorku serthu 2000avathu varuma mam

    ReplyDelete
    Replies
    1. Kandippa 2000 postings
      achum ella subjects yum sendhu varum..

      Delete
  6. pg and b.ed ku equivalent go number kekutu ...pg trb cv ku....athukudukalana accept panala enna pandrathu ethachum theriuma anomam

    ReplyDelete
    Replies
    1. Google la keyword type pani search podunga kandippa kedaikkum apdiyum ilana trb ku call pani ipave complaint register panidunga.

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here