Skip to main content

தீபாவளி ஸ்பெஷல் !

அம்மா !


என் அம்மாவும் தீபாவளியும்🙏👍👌😥😇😂😊👏👇👔👖👗👨‍👩‍👦‍👦

தீபாவளிக்கு முன் தினம் எங்கள் வீடு ரங்கநாதன் தெரு போல படு பரபரப்பாக இருக்கும்

மறு நாள் வெந்நீர் போட அண்டாக்கள் கழுவி துடைத்து சந்தனம் குங்குமம் இட்டு கங்கா ஜலத்தை வரவேற்க தயாராக பளபளவென தயாராக இருக்கும்
🍶
செக்கு நல்லெண்ணெய்யும்  சீயக்காயும் புதிதாக தனித்தனி மூடியிட்ட பாத்திரங்களில் முன் தினம் இரவே சுவாமியறையில் தஞ்சமடைந்திருக்கும்😂🍯

அவரவர் துணிகளை அவரவர் எடுத்து வைத்திருப்போம்
அப்பா அதிலே மஞ்சள் குங்குமம் இட்டு சுவாமி முன்பு விரித்தருக்கும் பேப்பர் மேல் அழகாக அடுக்கி வைப்பார்👗👔👖👕👚👘

பட்சண வகையறாக்களை எனது அம்மா முன் தினம் இரவே சுவாமி முன்பு அழகுற வரிசையாக வைத்து விடுவார்
🍏🍎🍐🍊🍋🍋🍌🍉
எனது வேலை பட்டாசு வாணங்களை பட்சண புத்தாடை அணிவகுப்புடன் அழகுற சேர்ப்பதே அந்த வேலை எனக்கு மிகவும் பிடிக்கும்
🙏👍✊🤞🏃🕶
ஒவ்வொரு பட்டாசாக மிக அழகாக அடுக்கி வைப்பேன் கடைகளில் கூட அந்த நேர்த்தியிராது எனது ஆவல் தீருமட்டும் அதனை கண்டு ரசிப்பேன்😊🐕

அதிகாலை குளியலுக்கு எங்களை தயார் படுத்த மனைகட்டை துண்டு முதலிய இத்தியாதிகளை என் அம்மா பார்த்து பார்த்து செய்வாள்
🌻🌼🌸☔
அதிகாலை கோலம் போடுதல் என்பது நடவாத காரியமென்பதால் எனது அம்மா ஊரடங்கிய பின் பண்ணிரெண்டு மணிகளுக்கு மேல் அவளது கலையினை தொடங்குவாள்
🐕
எங்கள் செல்ல பைரவர் டைகர் துணையுடன் அழகாய் வண்ணத்துடன் தெருவையே வளைத்து கோலமிடுவாள் என் அம்மா
🌝🌞
காலை விடிந்த பின் தெருவே பேசும் அக்கோல அழகை 👍🌼🌻🌸🌺

ஏண்டி கோமா ராத்திரி பதினொரு மணிக்கு நான் உன்ன பாக்க வரும்போது கூட உங்காத்து வாசல்ல கோலத்த காணலயடி என்னடி மாயமிது எப்ப போட்ட இதை அர்த்த ராத்திரியிலயா தைரியந்தாண்டி உனக்கு சரி சரி என்னையும்கூப்பிடடிருந்தா நானும் எங்காத்துல போட்டிருப்பேனடி என அங்கலாய்ப்பார்கள்
🙊🙉🙈
எனக்கு பெருமையாக இருக்கும் பட்டாசை கூட சற்று தள்ளியே போடுவேன் கோலம் அழியக்கூடாதில்லையா அதற்காக⚡💥

வேற யாரும் அழிக்காமல் இருக்க எனனால் முடிந்தமட்டும் அன்று முழுவதும் அக்கோலத்தை காப்பேன்
🐒🐒🐒
அதிகாலை விடியும் முன் என் அம்மா எழுந்து புது டிகாஷன் இறக்கி பால் காய்ச்சி காபி போட்டு விட்டு எங்களை எழுப்புவாள் ☕

சில நேரம் அந்த டிகிரி காபி வாஸமே எங்களை எழுப்பிவிடும்

ஸ்நானப் படனம்🙏😂

பல் தேய்க்கும் முன் ஒரு வெடி வெடித்து விட்டு வா என்பாள் .. தூக்கக் கலக்கத்தில் வெடித்தப் பின் தூக்கமே சுத்தமாக போய்விடும்😚😙😗😁
பல் தேச்சி காபி பருகி கடன்களை முடித்தபின் எங்களை அம்மா அழைத்து கோலமிட்ட மனைக்கட்டையில் அமர்த்தி ஸ்லோகங்களை உரக்கச் சொல்லி எங்களையும் மீண்டும் கூறச்சொல்லி தலையில் நல்லெண்ணெய் விட்டு தேய்த்து பதமாக கலந்த வெந்நீரில் எங்கள் கங்கா ஸ்நானத்தை செய்து வைப்பாள்🤥👍

பின் அம்மா அப்பாவிடம் சுவாமியறையில் நமஸ்கரித்து அவர்களது ஆசியுடன் புத்தாடை பட்டாசுகள் பெற்று மிகவும் மகிழ்வாக எங்கள் தீபாவளியை கொண்டாடி மகிழ்வோம்
😇😂
பட்டாசுப் படனம்.👣🎆🎇
நான் தான் 4 மணிக்கே எழுந்து தெருவின் முதல் வெடி வெடித்தேன் என்ற பெருமையுடன் , கார்த்திகைக்கு வைத்த வெடி போக மற்ற வெடிகளை நண்பர்களுடன் திறமையாக வெடிப்பது ... The Law of Utility , Law of Demand & Supply க்கு ஏற்ப ,
சரவெடியை உதிர்த்து ஒவ்வொன்றாக வெடிப்பது ,
எல்லோரும் வெடித்து முடிந்த பின் ஒரு சர பாக்கெட்டை (ஒளித்து வைத்தது) வெடித்து பெருமை படுவது . பால்கார பையனை , ஊதுவத்தி கொடுத்து பட்டாசை கொளுத்தச் சொல்வது. எங்கள் வீட்டு வாசலில் தான் அதிக குப்பை எனக் குப்பையை பெருக்கி அதையும் எரிப்பது. வெடிக்காத பட்டாசுகள் அப்போது வெடிக்கும். சின்னச் சின்ன குஷி ...😂
நான் இழந்தது அம்மாவை மட்டுமல்ல , இந்த சின்னச் சின்ன குஷிகளையும் தான்🙏😢
நமஸ்கார படனம் ..
அன்றைய தினம் நமஸ்காரம் பண்ணினால் 25 பைசா , 50 பைசா .. ஓரு ரூபாய் வரை கிடைக்கும் ..😄 அத்தை ,மாமா வருகை போனஸ் (Extra Collection) ...Jewel Thief படம் at  New Elephant Stone😝😎 ஒரு வருடம் ஊட்டி வரை உறவு ...(Shanthi)🙂

ஆனால் அன்றைய நாட்களில்
என் அம்மா புத்தாடை அணிந்தாளா..? வேட்டு போட்டாளா..? சுவைமிகு இனிப்பு உண்டாளா..? என நான் கருதியதில்லை பார்த்ததமில்லை🙃😌😢😰

அன்று முழுவதும் அடுப்படி வேலையில் சாதாரண புடவையில் எப்போதும் போலத்தான் தோற்றமளிப்பாள்🙂😢

வாங்கிய புடவையை அணிய கூட நேரமிருக்காது பாவம்😚

மதியம் அனைவரும் உணவினை உண்டு விட்டு சிரமபரிகாரமாக கும்பகர்ண உருளலில் அரை மயக்க தூக்கத்தில் இருக்கும் போது கட்டி பார்த்து அவிழ்த்து வைப்பாள்😚😢😥

அவளது புத்தாடைகளும் பட்டாடைகளும் வெளியூர் திருமணம் கோவில் என என்றேனும் தான் வெளிவரும்
😊🙂😇☺
மக்களுக்காகவும் கணவனுக்காகவும் வாழ்ந்து வாழ்ந்து அவளது வாழ்வு என்ற ஒன்றை வாழாது மறந்திருந்தவள்
😇🙂😎😢😥😰
அவளுக்கும் பல பல திறமைகள் உண்டு அவள் அதனை எங்கள் மீது மட்டுமே பிரயோகித்திருந்தாள்
🙂😇
அகத்திய கமண்டல காவிரியாக என் அம்மா தம்மை சுருக்கிக் கொண்டாள்
😎😕😟🤥🙄🤔
எங்கள் மகிழ்வே அவள் மகிழ்வு😊

எங்கள் ஆசையே அவள் ஆசை😋

எங்கள் துக்கமே அவள் துக்கம்
🤒😷🤕🤐🙄
என எங்களுக்காகவே வாழ்ந்த தெய்வம் என் அம்மா
👍🙏
எங்கள் இல்லத்தில் அவளுக்கு தான் முதலுரிமை மற்றும் பூரண சுதந்திரமும் உண்டு
🙏👍
அனைத்து முடிவுகளும் அவளது ஆலோசனைக்கு பிறகே அரங்கேறும்.
🙏👍
எங்கள் வீட்டில் விகடன் தீபாவளி மலர் வாங்குகிறோம். நீங்கள் வேற கல்கி , அமுதசுரபி வாங்குங்கள். எல்லோரும் எல்லாம் படிக்கலாம் ...என்ன ஒரு நல்ல சிந்தனை🤔🎁📒📕📗📘📘📙

ஆயினும் அவள் தனது ஆசை என்று எதையும் நிறைவேற்றாமல் எங்களிடமும் கூறாமல்,
 எங்களுக்காகவே வாழ்ந்து எங்களை கண் போல காத்தவள் என் அம்மா.
என் அம்மா மட்டும் அல்ல எல்லா அம்மாக்களும் அப்படிதான்.
🙏🙏🙏

வாழிய... அம்மாக்கள்.

🙏🙏🙏🙏

நான் தான் புலம்புகிறேனா?
உங்களுக்கும் அனுபவம் உண்டா ?😊

வருகிறது தீபாவளி ! ஆனால் வராது அது போன்ற நாட்கள்.... !

தீபாவளி நல்வாழ்த்துகள் !

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Wishing everyone in Puthagasalai family, a very happy deepavali..

    ReplyDelete
  3. இனிய காலை வணக்கம் அட்மின் சகோதரி. இன்றைய பதிவு எப்படி இருக்கும் என பார்க்க ஆவலாக இருந்தேன். அம்மா பற்றிய தீபாவளி பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  4. இனிய காலை வணக்கம் அட்மின் சகோதரி. இன்றைய பதிவு எப்படி இருக்கும் என பார்க்க ஆவலாக இருந்தேன். அம்மா பற்றிய தீபாவளி பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  5. Good morning friends
    புத்தாடையுடன் புன்னகையும் சேர! இனிப்புக்கள் பரிமாறி உறவுகள் தொடர! வேட்டுச் சத்தத்தில் உள்ளம் மகிழ! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. Gdmg admin mam. Happy deepavali to all friends and to you also admin mam

    ReplyDelete
  7. Gdmg admin mam. Happy deepavali to all friends and to you also admin mam

    ReplyDelete
  8. மதிப்பிற்குரிய நமது வலைதள நண்பர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..