Skip to main content

நாராயணசாமி..

*மதுரை ஒத்தக்கடைல ஒரு சின்னப்பையன் இருந்தான் . அவன் பெயர் நாராயணசாமி.*

*க்ளாஸ்ல மிகமிக மோசமான முட்டாள் பையனா இருந்தான் நாராயணசாமி.*

*படிப்புல எல்லாருக்கும் பின்னால இருந்தாலும் அவனோட அடிமுட்டாள்தனத்துக்கு ஒரு அளவே இல்லாம இருந்தது. . சகிக்க முடியாத ஹெட்மாஸ்ட்டர் T.C - யை கொடுத்து அவன ஸ்கூல விட்டே வெளியேத்திட்டார்....*

*சங்கடத்தோட அவனோட அம்மா ஒத்தக்கடையிலிருந்து வீட்டைக் காலி பண்ணி சென்னைல குடியேறி அங்க உள்ள ஒரு ஸ்கூல்ல அவன சேர்த்தாங்க.*

*25 வருஷத்துக்கு அப்புறம்.....*

*பழைய ஹெட்மாஸ்டர் இதயவால்வு சிகிச்சைக்காக சென்னைக்கு வருகிறார்.*

*எல்லா டாக்டர்களும் பரிசோதித்தார்கள். அவர்கள் கூறினார்கள். நீங்கள் கிரிட்டிக்கல் சிச்சுவேஷனில் இருக்கிறீர்கள். இந்த நிலையில் ஆபரேஷன் வெற்றிகரமாகச் செய்ய ஒரே ஒரு ஸ்பெசலிஸ்ட் டாக்டர்தான் இருக்கிறார் அவரால் மட்டுமே இதை செய்யமுடியும்.....*

*அதன்படி ஆபரேஷனும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.*

*ஹெட்மாஸ்டரை வென்டிலேட்டருக்கு மாற்றினார்கள்.*

*ஹெட்மாஸ்டர் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தார்..... எதிரே அழகான இளவயது டாக்டர் தன்முன்னில்.....*

*தன் உயிரை காப்பாற்றிய டாக்டருக்கு நன்றி கூற முயற்சி செய்தார் ஹெட்மாஸ்டர்.....*

*ஒரு சிறு புன்சிரிப்போடு டாக்டர் ஹெட்மாஸ்டரின் நெற்றியில் வருடும்போது ஹெட்மாஸ்டரின் முகம் அதிர்ச்சியில் விளறியது.....*

*என்னமோ சொல்வதற்காக முயற்சி செய்து கையை . தூக்கினாலும் உயர்ந்த கை கீழே விழுந்தது..... கண்கள் நிரந்தரமாய் மூடியது....*

*திடீரென்று என்ன நடந்தது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்த டாக்டர் திரும்பி பார்த்தபோது........*

*வெண்டிலேட்டரோட பின்ன புடுங்கி வாக்வம் க்ளீனர் ப்ளக்கில் சொருகி அறையை சுத்தம் செய்துகொண்டிருந்தான் நம்முடைய நாராயணசாமி. அவன் இப்போ அங்க கிளீனரா வேல பாக்குறான்.*

*ரொம்ப சாரி..... அந்த இளவயது டாக்டர்தான் நாராயணசாமியா இருக்கும்னு நீங்க நெனச்சிருந்தீங்
கன்னா அதுக்கு காரணம்*

*நீங்க சினிமாவும், சீரியலும் பார்த்து வளர்ந்ததுனாலதான்.*

*நாராயணசாமி என்னைக்கும், எப்பவும் அதே நாராயணசாமிதான்.😜😍😜😍😜

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Devi Mam..

    Gudnoon.. Sorry yesterday I didn't replied u, saw ur comment late night..

    Sure we'll have TRT exam, time being concentrate for PGTRB..

    ReplyDelete
  3. goodafternoon admin mam. so there will be trt exam soon know mam??

    ReplyDelete
  4. Tet exam mathirthan pg exam questions irukkuma mam

    ReplyDelete
    Replies
    1. கவலை பட வேண்டாம்TETஐ விட கஷ்டமா தான் இருக்கும்...

      Delete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...