Skip to main content

TODAY'S THOUGHT..

நாம் கடவுளுக்கு படைக்கும் உணவை அவர் சாப்பிடுகிறாரா இல்லையா? என்ற சந்தேகம் சிலர் மனதில் எழுவதுண்டு. அதே சந்தேகம் ஒரு சிஷ்யன் மனத்திலும் எழுந்தது.

இதற்கான விடையை உடனே தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த அவன், தன் குருவிடம் சென்றான்.

குருவே, நாம் கடவுளுக்காக படைக்கும் நைவேத்யத்தை அவர் சாப்பிடுகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் அதை சாப்பிட்டால் நைவேதியத்தின் அளவு குறையவேண்டும் அல்லவா? பிறகு எப்படி அதை கடவுள் சாப்பிட்டார் என்று நம்புவது? என்று கேட்டான்.

குரு அவனை ஊடுருவி பார்த்துவிட்டு, மெளனமாக சிரித்தபடியே, நமது வேதாந்த வகுப்பிற்கு நேரமாகிவிட்டது. ஆகையால் இப்போது நீ வகுப்பறைக்கு செல் நான் சிறிது நேரத்தில் வருகிறேன் என்றார்.

வகுப்பறையில் அன்று அனைவருக்கும் ஒரு அற்புத மந்திரத்தை பற்றி விளக்கினார் குரு.

பிறகு அனைத்து மாணவர்களும் அதை மனதில் பதிய வைக்க துவங்கினர்.

சிறிது நேரம் கழித்து, தன்னிடம் படையலை பற்றி கேள்வி கேட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.

குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான் சிஷ்யன்.

எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? என்றார் குரு.

என்றும் மறவாதபடி முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே என்றான் சிஷ்யன்.

அப்படியா சரி, எங்கே ஒருமுறை அந்த மந்திரத்தை என்னிடம் சொல் பார்க்கலாம் என்றார்.

மனதை ஒருநிலை படுத்திக்கொண்டு மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தான் சிஷ்யன்.

அவன் கூறி முடித்தவுடன், சிஷ்யா நீ மந்திரத்தை சரியாக உள்வாங்கிக் கொண்டது போல் தெரியவில்லையே. உன் புத்தகத்தை காட்டு பாப்போம் என்றார் குரு.

பதட்டம் அடைந்த சிஷ்யன் உடனே
தன் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்தான். நான் கூறியதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னியுங்கள் குருவே. அனால் இந்த புத்தகத்தில் உள்ளபடியே தான் நான் மந்திரத்தை கூறினேன் என்றான்.

இந்த புத்தகத்தில் இருந்து தான் மந்திரத்தை உள்வாங்கினாயா என்றார் குரு. ஆம் குருவே என்றான் சிஷ்யன்.

அப்படியானால் நீ உள்வாங்கிய பிறகும் இதில் மந்திரம் இருக்கிறதே எப்படி?
நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் அது இருக்க கூடாதல்லவா? என்றார் குரு.

சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.

நீ மனதில் உள்வாங்கிய மந்திரம்  சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம்.
இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். அவனுக்கு நாம் ஸ்தூல வடிவில் படைக்கும் நைவேத்யத்தை அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான்.
அதனாலேயே அதன் அளவு குறைவதில்லை. உதாரணத்திற்கு இப்போது நீ உள்வாங்கியதால் புத்தகத்தில் இருந்த மந்திரத்தின் அளவு குறையவில்லை அல்லவா அதுபோல தான் என்றார் குரு.

இந்த அற்புத விளக்கத்தை கேட்டு சிஷ்யன் மெய் சிலிர்த்து போனான்.

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Next month 2nd week govt going to announce trt
    Is this true information or rumour Mam

    ReplyDelete
    Replies
    1. Madam ippo pg kku concentrate pannunga...Athu varum pothu pakalam

      Delete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...