Skip to main content

TODAY'S THOUGHT..

புத்திசாலியாய் இருங்கள்...  முட்டாளாய் நடியுங்கள்.... வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ளலாம்.

🙏வாழ்க்கை ஒரு நிமிஷத்தில் மாறுமா என்று தெரியவில்லை.  ஆனால் ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவுதான் வாழ்க்கையையே மாற்றி விடும்....

🙏வாழ்கையை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்,  வாழ்வதற்கு ஒரே காரணம்.... " நாளை எல்லாம் சரியாகிவிடும்"  என்ற நம்பிக்கை தான்.

🙏வாய்க்காலில் நீரோட்டமும், வயலில் ஏரோட்டமும் சிறப்பாக இருந்தால் தான் வீதியில் தேரோட்டமும், வீட்டில் கொண்டாட்டமும் நிலையாக இருக்கும்.

🙏 என்னை முட்டாள் என்று கூறினால் வருத்தப்படுவதில்லை.  முட்டாள் ஏமாறுவானே தவிர யாரையும் ஏமாற்ற மாட்டான்.

🙏 வாழும் வாழ்க்கை கொஞ்ச நாட்கள்தான்....! ( என்ன ஒரு அதிகபட்சம் 80 வயது எனக் கொள்வோமா / just 29000  நாட்களே....! ) வசதியாய் வாழாவிட்டாலும், பிறர் வாழ்த்தும்படி நிம்மதியாய் வாழ்ந்துவிட்டு போவோமே....!

🙏நூறு சொந்த வீடு இருந்தாலும் கடைசில "கூலர்  பாக்ஸ்" என்னமோ வாடைக்குத்தான் எடுக்கனும்.  பார்த்து நடந்துக்குங்க.

நீங்கள்

மன்னிப்பு கேட்கையில் - புனிதம் அடைகிறீர்கள்

மன்னிப்பு தருகையில் - மேன்மை அடைகிறீர்கள்

மற்றவைகளை மதிக்கையில் - மதிக்கப் படுகிறீர்கள்

விமர்சனங்களை ஏற்கையில் - வலிமை அடைகிறீர்கள்

உதவும் நேரத்தில் - கடவுள் ஆகுறீர்கள்

உழைக்கும் நேரத்தில் - மனிதன் ஆகுறீர்கள்

நம்பும் நேரத்தில் - பலசாலி ஆகுறீர்கள்,

நேசிக்கும் போது  - தேவதை ஆகுறீர்கள்

தகவல் திரட்டும் போது - தேனீக்கள் ஆகுறீர்கள்

நல்லதை பிறிக்கும் போது - அன்னம் ஆகுறீர்கள்

தோல்வியில் சிரிக்கும் போது - வீரன் ஆகுறீர்கள்

வருவதை ஏற்கும் போது -  வெற்றி காண்கிறீர்கள்

சவால்களை எதிர் கொள்ளும் போது - உறுதி ஆகுறீர்கள்

வெற்றி காணும் போது - மதிக்கப்படுகிறீர்கள்

வென்ற பின்னும், பணியும் போதும்  - இமயம் ஆகுறீர்கள்

வழி காட்ட முன் வரும்போது - வெளிச்சம் ஆகுறீர்கள் 💁

நன்றி.

Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. Unknown friend..

  Nethu pg exam subject wise oru oru day nadakkumanu doubt ketruthinga.. Kandippa online exam nadakka dha 99% chances iruku..

  Daily oru subject vekkalamilama orey subject ah two or three days kuda conduct panalam as perthough availability of systems and facilities..

  ReplyDelete
  Replies
  1. ஒரு ஒரு நாள் ஒரு எக்ஸாம் நடக்குமா TRB ஒரு நாள் எக்ஸாம் வச்சாலே பல பிரச்னை வரும் இப்ப கேக்கவே வேணாம்

   Delete
 3. Replies
  1. mam application la b.ed la subject ellama apply pannam mam. now shall I edit this? no need a mam.

   Delete

Post a Comment

Popular posts from this blog

சிந்தனைச் சிதறல்..

மனம் ஒருமுகப்பட.. *காற்று ஒருமுகப்பட புயலாகிறது! மேகம் ஒருமுகப்பட மழையாகிறது.!  நீர் ஒருமுகப்பட நதியாகிறது!  நதி ஒருமுகப்பட கடலாகிறது!  மனம் ஒருமுகப்பட வெற்றி உருவாகிறது!  உங்களைக் கையாள மூளையைப் பயன்படுத்துங்கள்! மற்றவரைக் கையாள இதயத்தைப் பயன்படுத்துங்கள்!  இதயத்தைக் கவர்ந்துவிட்டு, எதைச் செய்தாலும், அது இணக்கமாகவே இருக்கும்.  வாயில் உதிரும் வார்த்தைகளை விட இதயத்திலிருந்து உதிரும் வார்த்தைகளால் அன்பு மலரும்! அன்பே ஆனந்தம் தரும்.*_ கோபம் ஒரு சுயதண்டனை, அடுத்தவர் செய்த தவறுக்கோ அல்லது அடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற நிலையிலோ நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனைதான் கோபம்!  கோபத்தில் நடிப்பிருக்கலாம்! துடிப்பிருக்கக்கூடாது!*_  *உறவுகள் கூட நிலவைப் போன்று தான்..!* *"தூரத்தில்" இருக்கும் வரை* *ரசித்துக் கொண்டாடப்படும்..!!* *எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..!* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..!!* *அன்று "வயதைப்"* *பார்த்து வந்தது..* *இன்று "வசதியைப்"* *பார்த்து தான் வருகிறது..!!* *"மரியாதை"* *செல்லும் பாதை*  *சரியானதாக இல்லாத போது..*

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல.

படித்ததில் பிடித்தது..

 கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ  நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான். கடவுள் உடனே,  “ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. ”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது,  மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்.. உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி