Skip to main content

தேசபக்தி ....

உலகில் எந்த நாட்டை வேண்டுமானாலும் எடுத்து பாருங்கள்.. அந்த நாட்டின் தேசபக்தி என்பது இன்னொரு நாட்டின் மீதான பகையால் உருவாக்கப்பட்டதாக இருக்காது .. இதில் விதிவிலக்காக இருப்பது இந்தியா, பாகிஸ்தான் போன்ற சில நாடுகள் தான்..

இந்தியா உருவாகும் போது முன்னூறுக்கு மேற்பட்ட சமஸ்தானங்களை சேர்த்து தான் இந்திய ஒன்றியம் உருவானது. அதாவது இந்திய ஒன்றியம் என்பது சேர்க்கப்பட்ட கூட்டம் தான், தானாக சேர்ந்த கூட்டம் அல்ல.

இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல்வேறு இனம், மொழி கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவை இங்கு தேச பக்தியில் ஒருங்கிணைக்கும் பல்வேறு நிகழ்வுகளில் பாகிஸ்தான் மீதான பகையும் உதவுகிறது. பாகிஸ்தான் மக்களின் தேச பக்தியும் இப்படியே தான் உருவாக்கப்படுகிறது.

இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்த பகை உருவாக்கப்பட்டது. இந்த பகை தான் இரு நாடுகளின் தேச பக்தியை இன்று வரை வளர்த்து கொண்டிருக்கிறது ... இதில் குறிப்பிடதக்க அம்சம் எதுவெனில் இரு நாட்டிலும் எதிர் எதிராக பிரிந்து போன இரண்டு மதங்கள் பெருபான்மை சமூகமாக இருப்பது தேசபக்திக்கு இன்னும் கூடுதல் பலம் .

இதனால் தான் 1000 - க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்பட்ட போது இந்தியாவில் தமிழ்நாட்டை தாண்டி யாரையும் உறுத்தவில்லை .. காரணம் இலங்கையை எதிரி நாடாக பார்க்காமல் அண்டை நாடாக பார்க்கிறான்..

ஒரு வேளை தமிழக மீனவர்களை பாகிஸ்தான் சுட்டிருந்தால் இந்தியா முழுவதும் தமிழக மீனவர்கள் விசயம் கவனம் பெற்றிருக்குமோ என்னவோ?

இங்கு யதார்த்தையோ, பிரச்சனைக்குரிய தீர்வை பற்றியோ பேசினால் அவன் தேசத் துரோகி ஆகிவிடுவான்.. இது இரு நாடுகளுக்கும் பொருந்தும் ..
.
இந்த பகைமை என்பது இந்த இரு நாட்டு அரசியலுக்கும், ஆட்சியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாய் இருந்து கொண்டு இருக்கிறது ... இங்கு இந்திரா முதல் மோடி வரை ... அங்கு பூட்டோ முதல் இம்ரான்கான் வரை தொடர்கிறது ..

கடந்த வாரம் 40 வீரர்களை இழந்தோம்.. இன்று பதிலடி கொடுத்திருக்கிறோம்.. உயிர் சேதம் குறித்த தகவல் இன்றும் தெரியவில்லை .. தேசம் என்னும் ஒற்றை புள்ளியில் நாம் ஒருங்கிணைந்து நிற்கிறோம்..

ஆனாலும்..... முன்பெல்லாம் நீ தேச விரோதி என மதரீதியாக சொல்லி வந்தவர்கள் தற்போது கட்சி ரீதியாகவும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதாவது அரசியலமைப்பின் நிர்வாகத்திற்கும், அரசியல் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை உணராமல் இருக்கிறார்கள்..

அதனால் தான் ஆட்சியாளர்களின் செயல்பாட்டை குறை கூறினால் அவன் தேசத்துரோகி என முத்திரை குத்தப்படுகிறான்..

இங்கு தேசம், தேச பக்தி என்பது மிகவும் சென்சிட்டிவ்வான விசயமாக உருவாக்கப்பட்டுள்ளது... சீனா, அமெரிக்க ஐரோப்பா நாடுகளில் தேசபக்தி என்பது தேச வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டிருக்கும் .. ஆனால் இங்கு....?

இன்றைய பாகிஸ்தான் பகுதி மீதான தாக்குதல் குறித்து அரசிடமிருந்து உறுதி படுத்தப்பட்ட தகவல்கள் வரும் முன்னே ஊடக செய்திகளை பார்த்தே அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் இராணுவத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஒரு வேளை ராகூலோ, மம்தாவோ அரசிடமிருந்து உறுதி படுத்தப்பட்ட தகவல்கள் வரும் வரை கருத்து சொல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் அவர்கள் தேசத்துரோகியாக ஆக்கப்பட்டிருப்பார்கள் ... அதனால் அத்துணை தலைவர்களும் முண்டியடித்து முன்கூட்டியே கருத்து சொன்னார்கள்..

காரணம் இல்லாமல் இல்லை.. காஷ்மீர் தாக்குதல் நடந்த நாளிலிருந்து இன்று வரை அந்த நிகழ்வை நமது பிரதமர் அதிகமாய் பேசியிருப்பது தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தான் தவிர... அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியோ, அல்லது செய்தியாளர் சந்திப்பிலோ அல்ல..

இதுவரை சுதந்திர இந்தியாவில் மக்கள் மத்தியில் தேசம், தேசபக்தி என்பது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தனித்துவமாய்.. உணர்வுப்பூர்வமாய் இருந்து வந்தது.. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அது அரசியலாக்கப்பட்டு யாரு யாருக்கு எவ்வளவு தேசபக்தி என அளவீடு செய்து கொண்டிருக்கிறார்கள்..... அபத்தமாக ... 😰😰

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Tet exam announced by trb see official website

    ReplyDelete
  3. tet yaru ketom...pg trb thana ketom.....athu varuma therilaye

    ReplyDelete
    Replies
    1. PG vacancies iruku, so 99% exam varum.. Padinga sir, all the best..

      Delete
    2. thank u mam.but tet vera vachutanga....ipo veetla padika solvanga...alrdy trb padichunu iruken orey confused ah iruku

      Delete
    3. If u had already cleared TET plz don't waste you money and time. TRT means u can try.. Else its better to focus pgtrb sir..

      Delete
  4. ano mam pg trb varuma varatha

    ReplyDelete
  5. Vevarama exam dates will br announced later nu pottu notification kuduthrukanga.. Anyways all the best for upcoming candidates..

    ReplyDelete
    Replies
    1. Mam last tet clear pannavagaluku onnumae sollala.

      Delete
    2. No mam, last year clear panavangaluku TRT dha varum, venumna marks improvise pana again eludhalam.. So its up to the candidate.

      Actually ipo applications sale la kollaiyadikka dha indha TET

      Delete
    3. You are welcome mam, neenga shortfall vacancies ku vara pora TRT ku concentrate panunga..

      Delete
  6. Tet markku important irukkuma mam illa just pass pothuma mam

    ReplyDelete
    Replies
    1. TET mark ku kandippa certain percentage kuduppanga, aana adha vida TRT ku importance and weightage irukum so TET pass irundhaley podhum.. Ipo smart work pana vendiyathu TRT ku dhan..

      Delete
    2. Thank you so much mam

      Delete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..