Skip to main content

எல்லாம் மாறும் உன் மனம் மாறினால்..

🌼யாரோ புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய் ?

🌼யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?

🌼இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக்கொண்டுள்ளது.

🌼சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா?
இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை.

🌼உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்...

🌼உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன்.

🌼அது மனதின் வேலை.

🌼உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு. நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு.

🌼எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.

🌼சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.

🌼சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது. அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.

🌼கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை.

🌼வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

🌼இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் விளைவது.

🌼அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய்.

🌼பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய்.

🌼உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

🌼உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது.

🌼இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளேயன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை.

🌼சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை.

🌼தியானம் செய். இயற்கையை நேசி. வலிகள் மறையும்.
பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில்
நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார். இது இயல்பே என எண்ணு.

🌼வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை. அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை. அது இயல்பாய் இருக்கிறது. அது போல் இயல்பாய் கடமையைச் செய்.....🌼

Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. Goundamani dialogue dha nyabagathukku varudhu.. "Vandhuruchu da rendu latcham"

  Adhu pola kandippa TRT notification varum, those who are aiming for it focus well..

  ReplyDelete
 3. Syllabus ennava irukkum mam

  ReplyDelete
 4. Replies
  1. Kandippa New syllabus books la irundhu keppanga, because adhu elamey college first year topics oriented ah dhan iruku.. Adhu thavira UG syllabus dha irukum, also B.Ed., portions

   Delete
  2. Anon mam plz tell botany major syllabus

   Delete
 5. 11th general maths volume one book vangI paarunga, naa solradhu puriyum

  ReplyDelete
 6. யோனி என்றால் என்ன? உடற்கூறு, தாம்பத்யம் பற்றி முழுமையாக நாம் அறிந்துகொள்ளவேண்டியது மிக மிக அவசியம். புதிய தலைமுறை உருவாக இந்த யோனி மிகவும் முக்கியம்.
  பெண்ணின் அந்தரங்கமே “யோனி”. இதற்கேற்ப பொருத்தம் பார்க்கப்பட வேண்டும் என்பதே ஜோதிட விதி...!
  ஜோதிட சாஸ்திரம்...!

  ஏன் இதை ஆணுக்குப் பார்க்கக்கூடாது?? என்ன செய்ய! ஜோதிடம் கூறும் விதிமுறை அப்படி...
  பெண்ணுக்குத்தான் ஆணின் ஜாதகப் பொருத்தம் பார்க்கப்படவேண்டும்.
  ஆம், பெண்ணுக்குதான் ஆணின் பொருத்தம் பார்க்கப்பட வேண்டும்.
  ஆணுக்கு பெண்ணின் ஜாதகம் பார்க்கக் கூடாது.
  இதுல என்னங்க இருக்கு ரெண்டும் ஒண்ணுதானே...என்பவர்களுக்கு,
  பெண்ணின் நட்சத்திரத்திற்கு ஆணின் நட்சத்திரம் 2 என வைத்துக்கொள்வோம். ஆனால் ஆணின் நட்சத்திரத்திற்கு அது 27 வது நட்சத்திரமாக வரும். இப்போது வித்தியாசம் புரிகிறது அல்லவா!
  சரி, இப்போது யோனி பொருத்தம் ஏன் பார்க்கப்பட வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
  “பசி வர பத்தும் பறந்து போகும்” - இது பழமொழி. நாம் நினைப்பதுபோல் இது வெறும் வயிற்று பசிக்கு மட்டுமல்ல, உடற்பசிக்கும் சேர்த்துத்தான் இது சொல்லப்பட்டிருக்கிறது.
  ஆமாம்... நிறையாத வயிறு, நிறைவில்லாத மனம், திரும்பக் கேட்காத கடன், இறைக்காத கிணறு, சுரக்காத மடி, களை எடுக்காத வயல், கவனிக்கப்படாத பிள்ளை இவை அனைத்தும் பாழாகும் என்பது முன்னோர் வாக்கு.
  சந்ததியை உருவாக்க முடியாதவர்கள், வாழ்க்கையானது விவாகரத்தில்தான் வந்து நிற்கும்.
  சரி என்னதான் தீர்வு?
  ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு “யோனி” உண்டு அதன் படி இருவரும் இணைந்தால், நல்ல மணவாழ்வு ஏற்படும்.
  அஸ்வினி:- ஆண் குதிரை
  பரணி:- ஆண் யானை
  கார்த்திகை:- பெண் ஆடு
  ரோகிணி:- ஆண் நாகம்
  மிருகசீரிடம்:- பெண் சாரை
  திருவாதிரை:- ஆண் நாய்
  புனர்பூசம்:- பெண் பூனை
  பூசம்:- ஆண் ஆடு
  ஆயில்யம்:- ஆண் பூனை
  மகம்:- ஆண் எலி
  பூரம்:- பெண் எலி
  உத்திரம்:- பெண் எருது
  அஸ்தம்:- பெண் எருமை
  சித்திரை:- பெண் புலி
  சுவாதி:- ஆண் எருமை
  விசாகம்:- ஆண் புலி
  கேட்டை :- ஆண் மான்
  மூலம்:- பெண் நாய்
  பூராடம்:- ஆண் குரங்கு
  உத்ராடம்:- கீரி,மலட்டு பசு
  திருவோணம்:- பெண் குரங்கு
  அவிட்டம்:-பெண் சிங்கம்
  சதயம்:- பெண் குதிரை
  பூரட்டாதி:- ஆண் சிங்கம்
  உத்ரட்டாதி:- பெண் பசு
  ரேவதி:- பெண் யானை
  இப்போது உங்கள் யோனி மிருகம் எது என அறிந்து கொண்டிருப்பீர்கள்.
  இதில் எதை எதனுடன் இணைக்கலாம் என்பதை நான் கூறினால் பாடம் நடத்துவது போல ஆகிவிடும். எனவே எளிமையான வழி ஒன்றைச் சொல்லுகிறேன்.
  தாவர உண்ணிகள், தாவர உண்ணிகளோடு சேர்க்கலாம், மாமிசபட்சினிகள், மாமிசபட்சினிகளோடு சேரலாம். அதேசமயம் , நாய்க்கு பூனை பகை, சிங்கம், புலிக்கு பசு, எருது, மான், ஆடு, குதிரை யானை பகை, பாம்புக்கு எலி பகை, எலிக்கு, கீரி பகை, குரங்குக்கு, ஆடு பகை.
  சரி இது திருமண பொருத்ததிற்கு மட்டுமா என்றால்
  அதற்கு மிக மிக முக்கியம். அதேசமயம் உங்கள் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் என பலவிஷயங்களுக்கும் முக்கியம்.
  சரி... இந்தப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் நடந்தால் என்னாகும்?
  சந்ததியை உருவாக்கும் “தாம்பத்யம்” மிக முக்கியம் அல்லவா. இதில் பகை, மிருக அமைப்பு, தாம்பத்யத்தில் நாட்டம் இல்லாமலும், வெறுப்பு எண்ணமும் உண்டாக்கும்.
  தாம்பத்ய திருப்தி என்பது மிகவும் அவசியம். பகை மிருக அமைப்பு ஒருவருக்கு திருப்தியும், மற்றவருக்கு ஏமாற்றத்தையும் தரும்.
  இன்றைய காலகட்டத்தில் மணமுறிவும், தவறான தொடர்புகளும் அதிகரிக்க இந்த பொருந்தாத இணைப்பும் ஒரு காரணம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
  எனவே, திருமணப் பொருத்தத்தின்போது இந்த மிக முக்கிய பொருத்தங்களை மட்டுமாவது கவனமாகப் பாருங்கள், 
  அவை:- ரஜ்ஜு, யோனி,  கணம், இம்மூன்றும் மிகமிக  முக்கியம்.
  ஆணுக்கு ஆண் யோனியும், பெண்ணுக்குபெண் யோனியும்=மிக  அற்புதம்..
  பெண்ணுக்கு ஆண் யோனியும், ஆணுக்குபெண் யோனியும் = மனைவிக்கு அடங்கிப்போவார்கள்.
  இருவரும் ஆண் யோனி = அதீத முரட்டுத்தனம்.
  இருவரும் பெண்  யோனி= ஏமாற்றம்.
  எனவே ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது, இவற்றில் கவனம் செலுத்துங்கள். "பொருத்தம் உடலிலும் வேண்டும், புரிந்தவன் மணமாகவேண்டும்" என்று கவியரசர் பாடியிருப்பதை நினைவில் கொள்ளுங்கள்..!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிந்தனைச் சிதறல்..

மனம் ஒருமுகப்பட.. *காற்று ஒருமுகப்பட புயலாகிறது! மேகம் ஒருமுகப்பட மழையாகிறது.!  நீர் ஒருமுகப்பட நதியாகிறது!  நதி ஒருமுகப்பட கடலாகிறது!  மனம் ஒருமுகப்பட வெற்றி உருவாகிறது!  உங்களைக் கையாள மூளையைப் பயன்படுத்துங்கள்! மற்றவரைக் கையாள இதயத்தைப் பயன்படுத்துங்கள்!  இதயத்தைக் கவர்ந்துவிட்டு, எதைச் செய்தாலும், அது இணக்கமாகவே இருக்கும்.  வாயில் உதிரும் வார்த்தைகளை விட இதயத்திலிருந்து உதிரும் வார்த்தைகளால் அன்பு மலரும்! அன்பே ஆனந்தம் தரும்.*_ கோபம் ஒரு சுயதண்டனை, அடுத்தவர் செய்த தவறுக்கோ அல்லது அடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற நிலையிலோ நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனைதான் கோபம்!  கோபத்தில் நடிப்பிருக்கலாம்! துடிப்பிருக்கக்கூடாது!*_  *உறவுகள் கூட நிலவைப் போன்று தான்..!* *"தூரத்தில்" இருக்கும் வரை* *ரசித்துக் கொண்டாடப்படும்..!!* *எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..!* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..!!* *அன்று "வயதைப்"* *பார்த்து வந்தது..* *இன்று "வசதியைப்"* *பார்த்து தான் வருகிறது..!!* *"மரியாதை"* *செல்லும் பாதை*  *சரியானதாக இல்லாத போது..*

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல.

படித்ததில் பிடித்தது..

 கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ  நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான். கடவுள் உடனே,  “ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. ”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது,  மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்.. உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி