ஜாக்டோ- ஜியோ போராட்டம் தீவிரமாகி இருப்பதை அடுத்து அரசால் நியமிக்கப்பட்டு வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு விதித்து பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜாக்டோ - ஜியோ போராட்டத்தால் மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயாராவதில் தொய்வு ஏற்படும் சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வு கருத்தில் ெகாண்டும் ஓய்வுபெற்ற முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் பதவிக்கான கல்வித் தகுதிகளுடன் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் போராட்டத்தினால் முற்றிலும் ஆசிரியர் வருகையின்றி உள்ள பள்ளிகளுக்கு தலா ஒரு ஆசிரியர் வீதம் மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் கீழ்க்கண்ட நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பணியமர்த்த உரிய நடவடிக்கையை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இத்தொகுதிப்பூதிய நியமனங்கள் அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிக்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டும்.பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள்:
* பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பணியமர்த்தப்படும் நபர்கள் அந்தந்த பணியிடத்திற்குரிய கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பணியமர்த்தப்படும் நபர்கள் அந்தந்த பணியிடத்திற்குரிய கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
* பள்ளி அருகாமையில் உள்ளோருக்கு முன்னுரிமை அளிக்கலாம்.
* மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களைப் பணியமர்த்த முன்னுரிமை வழங்க வேண்டும்.
* பள்ளிகளுக்கு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பணியமர்த்தும் ஆணைகளை முதன்மைக்கல்வி அலுவலர் இசைவுடன் வழங்க வேண்டும்.
* பணியமர்த்தும் ஆணையில் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் ஒரு மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படும். என்ற விவரம் குறிப்பிட வேண்டும்.
* மேலும் இதனைக் கொண்டு அரசின் வேலைவாய்ப்பிற்கு எத்தகைய உரிமையும், முன்னுரிமையும் கோர முடியாது. என்ற விவரம் குறிப்பிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment